சனி, 20 மே, 2023

VC 005_தப்புத் தப்பாய் ஒரு தப்பு_ஏஜெண்ட் ராபின் சாகசம்_வி காமிக்ஸ்

 

வணக்கங்கள் பிரிய உள்ளங்களே.. பிரபலமான கிரைம் நாவல் உலக முடிசூடா மாமன்னர் ராஜேஷ் குமார் அவர்களின் தப்புத்தப்பாய் ஒரு தப்பு  என்கிற தலைப்பினை சித்திரக்கதை உலகம் சுவீகரித்துக் கொண்டு இம்மாதம் வெளியாகி இருக்கும் வி காமிக்ஸின் ஐந்தாம் வெளியீடுதான் இந்த மாத சாகசம்.. 
( திரு. ராஜேஷ் குமார் அவர்களுக்கு நன்றி)


சித்திரக்கதை உலகின் நாயகன் நிக் ரைடர் (எ) ராபின் என்பவரை காமிக்ஸ் வாசகர் வட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் நன்றாகவே அறிவார்கள்.. அதைத்தாண்டி வெளி வட்ட வாசகர்களுக்காக சிறு செய்தி. இவர் இத்தாலிய போன்னெலி பதிப்பகத்தின் நாயகன். காவல்துறையில் உள்ள தனி அமைப்பின் காவலராக இவர் புரிந்த சாகசங்கள் அநேகம். அதில் வீடியோவில் ஒரு வெடிகுண்டு மிகவும் பிரசித்தமான ஒரு வெற்றிப் படைப்பு.. அமெரிக்கப் பிரஸிடென்ட் கொல்லப்பட்ட தருணத்தில் ஒரு வீடியோ பதிவு எடுக்கப்படுகிறது. அதனை துரத்தும் கும்பல்களின் பிடியில் இருந்து எப்படி சட்டத்தின் பாதுகாவலராம் நம் நாயகர் மீட்கிறார் என்பதே அந்த கதையின் ஒன் லைன்..  நிற்க.. 
இம்மாத வெளியீடான மூன்று புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஆன்லைன் புத்தக திருவிழா நடைபெற்றதால் தாமதமாக வெளியாகி இருக்கிறது. 
ரூ.100/- விலையில் ஒரு தரமான கதை இந்த கருப்பு வெள்ளை சாகசம். அட்டைப்படம் இதோ..  


விரைவில் வரவிருக்கும் இத்தாலிய நாயகர் மிஸ்டர் நோ வெகுகாலமாக லயன் நிறுவனத்திடம் வாசகர்களால் வைக்கப்பட்டு வந்த கோரிக்கை நாயகர். அந்த கோரிக்கை இந்த படைப்பு மூலமாக தமிழுக்கு வருகிறது.. அமேசானில் அதகளத்தைக் கண்டு இரசிக்கத் தயாராகுங்கள்.. 


தன் கதையைப் பற்றி நாயகனே ஆசிரியர் கடிதம் பகுதியில் கூறுவது போல வித்தியாசம் காண்பித்திருக்கிறார் ஆசிரியர் திரு. விக்ரம். 
பின் அட்டை இதோ.. 
கதையில் இருந்து சில பக்கங்கள்.. 


தன் இளவயதில் காவல் துறை அனுபவங்களில் ஊறிப் போகும் ராபினின் எண்ணவோட்டங்களோடு நம்மையும் லயிக்க செய்கிற மாயாஜாலம் இந்த கதையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ராபினின் முந்தைய சக காவல் நண்பர் பலியாகிட மன வருத்தத்தில் இருக்கும் ராபின். அவரின் புது சகா. அவரின் காதலுக்காக தவம் கிடக்கும் அவரை நேசித்திடும் ஜீவன்.. இவர்களின் மன உணர்வுகள் அத்தனையும் கதையில் மிகவும் அழகாக பதிவாகி இருக்கின்றன.. 


கிரைம் திரில்லர் வரிசையில் இந்த கதைக்கு தனி இடம் உண்டு. போதைப்பொருள் கடத்தலும், கட்டிடத்தில் பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருக்கும் ஒரு நபரும் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஸ்பாய்லர்கள் கூடாது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே.. அனைவரும் புத்தகத்தை வாசித்தபின் கதைக்கருவை மறுபடி இதே பக்கத்தில் ஒருமுறை அலசும் எண்ணம். 

முந்தைய கலவரபூமியில் கனவினைத் தேடி கதைக்கான விமர்சனப் பகுதி.. 

அடுத்த கதையாக ஸாகோர் அதிரடிக்கும் தேடல்தனைக் கைவிடேல்.. அட ஆத்தி சூடி தலைப்பு.. மிக அருமை.. தொடர்வோம்..  
நன்றிகள்..   
   விற்பனை மற்றும் விவரங்கள் அறிய: 

திங்கள், 15 மே, 2023

காமிக்ஸ் செய்திகள் 15-மே

 

வணக்கம் வாசகர்களே..வகம் காமிக்ஸ் லேட்டஸ்ட் அறிவிப்பு..


ஆசிரியர் திரு.கலீலின் குறிப்பு.

பழைய அட்டைப்பட பாணியில் இம்மாத புத்தக அட்டைப்படம் தயாராகிறது! இறுதிக்கட்ட பணியில் உள்ளது! எப்படியும் இம்மாத இறுதியில் வெளிவந்திடும்! இந்தியா பர்மா காட்டில் நடைபெறும் ஸ்பை த்ரில்லர்! இவரும் ஏஞ்சலா போல் ஸ்கோர் செய்வாரென நினைக்கிறேன்!


ரங்லீ காமிக்ஸ் அறிவிப்பு:

இனிய காலை வணக்கம்.

ரங்லீ காமிக்ஸிற்கு தாங்கள் தரும் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏

ஏப்ரல் மாதத்தில் உடல்நிலை சரியில்லாததால் ரங்லீ காமிக்ஸ் இதழ் வெளிக்கொணர இயலவில்லை. இந்த வாரத்தில் இதழ் அனைத்து சந்தாதாரர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டோம். இந்த தாமதத்தை ஒரு புரிதலோடு அன்பினால் அரவணைத்த அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் பல 🙏


ஸ்ரீலங்காவிலிருந்து ஓவியர் வினோபாவின் கைவண்ணத்தில் டெக்ஸ்..

நண்பர்களுடன் வினோபா..

அபிஷேக் மற்றும் ஆனந்த சின்னராசு
நன்றி


சனி, 6 மே, 2023

010_ஏஞ்சலா_வகம் காமிக்ஸ்

 இனிய வாசகர்களுக்கு வணக்கங்கள்.. 

வகம் காமிக்ஸின் பத்தாவது வெளியீடான ஏஞ்சலா இன்று வந்தடைந்தது.. நீதியின் காவல் நாயகி ஏஞ்சலா தனது சாகசத்தை நடத்திக் காண்பிக்கும் போர்க்களம் இந்த ஒன் ஷாட் கதை.. 


பிரபலமான இத்தாலிய செர்ஜியோ போனெலி நிறுவனத்திடம் இருந்து முறைப்படி காப்புரிமம் பெற்று இந்த நூலை இத்தாலிய மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து செம்மையாக அளித்துள்ளனர் வகம் நிறுவனத்தார்.. விலை ரூபாய் 150/ ல் 116 பக்கங்களில் ஒரு பக்காவான வைல்ட் வெஸ்ட் கதைக்களம் கருப்பு வெள்ளையில் நமக்காகக் காத்திருக்கிறது. நீதித்  தேவதை என்று பொருள்படும் anjel of justice என்ற துணைப் பெயருடன் வெளியாகியிருக்கும் இந்த அதிரடி காமிக்ஸ் தவற விடக்கூடாத ஒன்று. 

இதன் ஆசிரியர் பக்கம் உங்கள் ஆவலைத் தூண்டும்.. 


வகம் காமிக்ஸின் மற்ற வெளியீடுகள் குறித்த குறிப்பும் காணக் கிடைப்பது தவறாமல் அனைத்து புத்தகங்களையும் வாங்க எண்ணுவோருக்கு உதவியாக இருக்கும்.. அது.. 
வகம் காமிக்ஸின் எடிட்டர் டீம் மற்றும் மொழிபெயர்ப்பாளர் விவரங்கள்.. 
நண்பர் திரு. புகழ் மொழி பெயர்ப்பில் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது இந்த வன்மேற்கு கதை.. அவருக்கு நமது வாழ்த்துக்கள். 
கதையின் இந்த கவித்துவமான பகுதியில் வழக்கமான ரன்னிங் எழுத்துக்கள் இல்லாமல் போல்ட் லெட்டர்ஸ் உபயோகித்திருக்கிறார்கள்.. அதன் பின்னர் வருவதெல்லாம் தெளிவாக வாசிக்கும் விதத்திலான சாதாரண எழுத்து உருக்களே.. இதழின் பின் அட்டை சிறப்பு.. 

அடுத்த வெளியீடு.. 
நன்றி.. 

 


      

வெள்ளி, 5 மே, 2023

யார் அந்த சிறுத்தை மனிதன்_லயன் காமிக்ஸ் புத்தக திருவிழா ஸ்பெஷல்

 வணக்கங்கள் அன்பு வாசக உள்ளங்களே..
ஆன்லைன் புத்தக விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் தருவாயில் இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது யார் அந்த சிறுத்தை மனிதன்? என்கிற பாக்கெட் சைஸ் மினி சாகசம்..


68 பக்கங்களில் திருப்திகரமான வாசிப்புக்கும் மாணவப் பருவத்தில் இருக்கும் சிறார்கள் விரும்பி வாசிக்கும் விலையிலும் உகந்ததாக லயன் காமிக்ஸ் வெளியீடாக வந்திருக்கிறது.. இந்த சாகசம் ரிபெல்லியன் என்கிற பிரிட்டிஷ் காமிக்ஸ் சுரங்கத்தில் இருந்து நம்மை வந்தடைந்திருக்கிற பொக்கிஷம்.. விலை ரூ.30/- the Leopard from lime street என்கிற தலைப்புடன் ஆங்கிலத்தில் வெற்றிபெற்ற இந்த கதையின் சிறு சுருக்கம் தருகிறேன். கதிரியக்க சிலந்தியால் நம் ஸ்பைடர் மேன் உருவானது போல் இவர் கதிரியக்க சிறுத்தை கடித்ததால் உருவான வீரர். மாணவப் பருவத்தில் சக சிறுவர்களால் தொல்லை தரப்படும் இந்த நாயகன் தனது மாமா அத்தையுடன் வசித்து வருகிறார். அத்தை பெயரும் ஜேன்தான். பள்ளி மாணவனாக மட்டும் நின்று விடாமல் பள்ளிக்குள் பத்திரிக்கை வைத்து நடத்தி வரும் இந்த சிறுவன் போட்டோ கிராபராகவும் இருந்து வரும் சூழலில் ஒரு கதிரியக்க சோதனை செய்து வந்து கொண்டிருக்கும் சிறுத்தை ஒன்று தப்பி வந்து கடித்து வைக்க தாவுதல், உள்ளுணர்வு, சிறுத்தையின் வேகம் மற்றும் பலம் பெற்று எதிரிகளை துவம்சம் செய்யும் நாயகனாக உருப் பெற்றிருக்கிறார்..  

for Purchase and more details:

இந்த வரிசையில் அடுத்து வரவிருப்பது.. 

புதன், 3 மே, 2023

IND_22_ஊகூரு பிடாரி_1966_0.60_இந்திரஜால்அலெக்சாண்டர் வாஸ் பிறந்த தின விழா

 

இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... ஆங்கிலத்தில் ஊகூரு கொலை தெய்வம் என்று அர்த்தப்படும் இந்திரஜால் காமிக்ஸின் 32 ஆம் வெளியீடாக 60 காசு விலையில் ஆங்கிலத்தில் வெளியான சித்திரக்கதை இது..   1966 ஆம் ஆண்டில் தமிழிலும் வெளியான இதன் ஒரிஜினல் அட்டை இதுதான்..  
இந்தக் கதையுடன் goggle eye pirates என்னும் கண்ணாடிக் கண் கடற் கொள்ளையர் என்று அர்த்தப்படும் கதையும் இணைந்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டிருந்தது. 
தமிழில் இந்த கதையை அதே விலையில் வண்ணத்தில் வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஆங்கிலத்தில் விற்பனையின் அளவு வெகு அதிகமாகவே இருந்திருக்கும்.. அதிலும் இந்திரஜால் கொஞ்சமாவது பணம் படைத்தவர்கள் எட்டிப் பிடிக்கும் உயரத்தில்தான் இருந்து வந்தது.. அப்படியும் தமிழில் அதன் வாசகர்கள் அதிகமாக இருந்திருந்திருந்தால் மாத்திரமே இங்கே விற்பனை வேகம் எடுத்திருக்கும்.. அப்படி வெளியான இதன் தமிழ் பதிப்பின் பெயர் ஊகூரு பிடாரி.. 


நிற்க.. நமது  மதிப்புக்குரிய திரு.அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களது திருமண தினத்தை முன்னிட்டு இன்றைக்கு அட்டகாசமான இந்திரஜால் சித்திரக்கதையை உங்களுக்காக அன்பளித்துள்ள அந்த தோழரை மனதில் நன்றியோடு நினைத்துக்கொண்டு இங்கே பகிர்கிறேன்.. திரு.அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களும் திருமதி அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களும் நீடு வாழ இறையருள் துணை நிற்கட்டும்..

https://www.mediafire.com/file/fugtepijh8t665d/ஊகூரூ+பிடாரி+No22.pdf/file

VC 005_தப்புத் தப்பாய் ஒரு தப்பு_ஏஜெண்ட் ராபின் சாகசம்_வி காமிக்ஸ்

  வணக்கங்கள் பிரிய உள்ளங்களே.. பிரபலமான கிரைம் நாவல் உலக முடிசூடா மாமன்னர் ராஜேஷ் குமார் அவர்களின் தப்புத்தப்பாய் ஒரு தப்பு  என்கிற தலைப்பின...