சனி, 6 மே, 2023

010_ஏஞ்சலா_வகம் காமிக்ஸ்

 இனிய வாசகர்களுக்கு வணக்கங்கள்.. 

வகம் காமிக்ஸின் பத்தாவது வெளியீடான ஏஞ்சலா இன்று வந்தடைந்தது.. நீதியின் காவல் நாயகி ஏஞ்சலா தனது சாகசத்தை நடத்திக் காண்பிக்கும் போர்க்களம் இந்த ஒன் ஷாட் கதை.. 


பிரபலமான இத்தாலிய செர்ஜியோ போனெலி நிறுவனத்திடம் இருந்து முறைப்படி காப்புரிமம் பெற்று இந்த நூலை இத்தாலிய மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து செம்மையாக அளித்துள்ளனர் வகம் நிறுவனத்தார்.. விலை ரூபாய் 150/ ல் 116 பக்கங்களில் ஒரு பக்காவான வைல்ட் வெஸ்ட் கதைக்களம் கருப்பு வெள்ளையில் நமக்காகக் காத்திருக்கிறது. நீதித்  தேவதை என்று பொருள்படும் anjel of justice என்ற துணைப் பெயருடன் வெளியாகியிருக்கும் இந்த அதிரடி காமிக்ஸ் தவற விடக்கூடாத ஒன்று. 

இதன் ஆசிரியர் பக்கம் உங்கள் ஆவலைத் தூண்டும்.. 


வகம் காமிக்ஸின் மற்ற வெளியீடுகள் குறித்த குறிப்பும் காணக் கிடைப்பது தவறாமல் அனைத்து புத்தகங்களையும் வாங்க எண்ணுவோருக்கு உதவியாக இருக்கும்.. அது.. 
வகம் காமிக்ஸின் எடிட்டர் டீம் மற்றும் மொழிபெயர்ப்பாளர் விவரங்கள்.. 
நண்பர் திரு. புகழ் மொழி பெயர்ப்பில் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது இந்த வன்மேற்கு கதை.. அவருக்கு நமது வாழ்த்துக்கள். 
கதையின் இந்த கவித்துவமான பகுதியில் வழக்கமான ரன்னிங் எழுத்துக்கள் இல்லாமல் போல்ட் லெட்டர்ஸ் உபயோகித்திருக்கிறார்கள்.. அதன் பின்னர் வருவதெல்லாம் தெளிவாக வாசிக்கும் விதத்திலான சாதாரண எழுத்து உருக்களே.. இதழின் பின் அட்டை சிறப்பு.. 

அடுத்த வெளியீடு.. 
நன்றி.. 

 






      

5 கருத்துகள்:

  1. மிக அழகான சுருக்கமான விமர்சனம் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா6 மே, 2023 அன்று 10:21 PM

    சூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  3. கதை தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது இது போன்ற கதைகளை அதிகமாக எதிர் பார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா6 மே, 2023 அன்று 11:14 PM

    Wow..அருமை ஜானி ஜி..😍👍

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...