இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... ஆங்கிலத்தில் ஊகூரு கொலை தெய்வம் என்று அர்த்தப்படும் இந்திரஜால் காமிக்ஸின் 32 ஆம் வெளியீடாக 60 காசு விலையில் ஆங்கிலத்தில் வெளியான சித்திரக்கதை இது.. 1966 ஆம் ஆண்டில் தமிழிலும் வெளியான இதன் ஒரிஜினல் அட்டை இதுதான்..
இந்தக் கதையுடன் goggle eye pirates என்னும் கண்ணாடிக் கண் கடற் கொள்ளையர் என்று அர்த்தப்படும் கதையும் இணைந்து இரண்டு கதைகளாக வெளியிடப்பட்டிருந்தது.
தமிழில் இந்த கதையை அதே விலையில் வண்ணத்தில் வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஆங்கிலத்தில் விற்பனையின் அளவு வெகு அதிகமாகவே இருந்திருக்கும்.. அதிலும் இந்திரஜால் கொஞ்சமாவது பணம் படைத்தவர்கள் எட்டிப் பிடிக்கும் உயரத்தில்தான் இருந்து வந்தது.. அப்படியும் தமிழில் அதன் வாசகர்கள் அதிகமாக இருந்திருந்திருந்தால் மாத்திரமே இங்கே விற்பனை வேகம் எடுத்திருக்கும்.. அப்படி வெளியான இதன் தமிழ் பதிப்பின் பெயர் ஊகூரு பிடாரி..

நிற்க.. நமது மதிப்புக்குரிய திரு.அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களது திருமண தினத்தை முன்னிட்டு இன்றைக்கு அட்டகாசமான இந்திரஜால் சித்திரக்கதையை உங்களுக்காக அன்பளித்துள்ள அந்த தோழரை மனதில் நன்றியோடு நினைத்துக்கொண்டு இங்கே பகிர்கிறேன்.. திரு.அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களும் திருமதி அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களும் நீடு வாழ இறையருள் துணை நிற்கட்டும்..
https://www.mediafire.com/file/fugtepijh8t665d/ஊகூரூ+பிடாரி+No22.pdf/file





























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக