வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
சில அரிய சித்திரக்கதை புத்தகங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற கனவும், எளிமையான வாசகர் வரை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அக்கறையும் நண்பர்கள் பலரை தேடலில் ஈடுபட வைக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடும் நமது நண்பர்களில் திருமலை முக்கியமானவர். அவரது நெடுங்காலத் தேடலில் இதோ 1977ஆம் வருடம் மே மாதம் வெளியாகிய பொன்னி காமிக்ஸின் ஓநாய் தீவு புதையல் சித்திரக்கதை நம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
இதன் விடுபட்ட பக்கங்கள் அட்டை அனைத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திரு.பூபதி, ராசிபுரம் அவர்களுக்கும் அபூர்வமான புத்தகத்தை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பர் திருமலை அவர்களுக்கும் நன்றியுடன்... வாசக நட்ப்பூஸ் உங்களுடனும் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த 2025 தமிழ் புத்தாண்டில் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மண்ணில் பதிப்பிக்கப்பட்டு நிறைய வாசகர்களை சென்றடைந்து கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்ட ஓநாய் தீவு புதையல் இதோ உங்கள் பார்வைக்கு..
தரவிறக்க:
https://www.mediafire.com/file/74eunvrkl5pzzvn/Onay+Theevu+Puthaiyal_ponni+1974+May.pdf/file
ஆஹா.. ஆஹா.. 😄😘💐
பதிலளிநீக்குஅழிந்து போய் விட்டன.. என்று நினைத்த பொக்கிஷங்களை மீண்டும் கிடைக்க செய்யும் தங்களின் ஆர்வதிற்கும், பெரும் முயற்சிக்கும், ஆதரவு அளித்து வரும் அன்பு நெஞ்சங்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் 💐🙏👍😘
மிக்க நன்றி சார். உங்கள் பணி தொடரட்டும்.
பதிலளிநீக்குபடிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது .. பகிர்விற்கு நன்றிகள் ..மீண்டும் தொலைந்து போன பொக்கிசங்களை படிக்க ஆவலாக உள்ளோம்
பதிலளிநீக்குசிறப்பு வெகு சிறப்பு
பதிலளிநீக்கு