புதன், 12 ஜூன், 2013

மாயா! மாயா! டொம்ம்! டொம்ம்! டொம்ம்!
Octavio Ocampo Jesus Crucifixion illusion


http://www.optical-illusionist.com/illusions/octavio-ocampo-jesus-crucifixion-illusion
அதிரடிகள் பல கடந்து சாதனை பல படைத்து நிற்கும் வலையுலக தோழமைகளே! வணக்கம்! நலம் பல பெற்று வளமாக வாழ்ந்திட வாழ்த்துகிறேன். மேலே கண்டவலைத்தளம் மிக சிறப்பாக நாம் பார்ப்பது நிஜம்தானா என்கிற தோற்ற மயக்கங்களுக்கு வித்திடும் படங்களை உள்ளடக்கி உள்ளது என்று சமீபத்தில் சுட்டி விகடனில் குறிப்பிட்டு இருந்தனர்.  உதாரணமாக மேற்கண்ட படம் மற்றும் லிங்க் கொடுத்து உள்ளேன்! சென்று கண்டு மகிழுங்கள்!  

Moving Spirals
நிற்க! நண்பர் பாலா கமாண்டோ அவர்களது நீண்டகால வேண்டுகோளுக்கிணங்க ராணி காமிக்ஸில் வெளி வந்த மாய முரசு என்கிற முகமூடி வீரர் மாயாவியின் அற்புதமான கதை இங்கே வெளியிடப்பட்டு உள்ளது. என்ஜாய். இந்த கதையை நண்பருடன் பகிர்ந்து கொள்வதுடன் இந்த காமிக்ஸ் தற்சமயம் கிடைக்காத அறிய பொக்கிஷமாக உள்ளதாலும் புத்தக வடிவில் பாதுகாத்து வரும் நண்பர்கள் மிக குறைவே என்கிற நிலையிலும் தினத்தந்தி நாளிதழ் ராணி காமிக்ஸை நிறுத்தி விட்டதாலும் இந்த நூல் லாப நோக்கின்றி காமிக்ஸ் ரசிகர்களால் பாதுகாக்கப் பட வேண்டும் என்கிற உன்னத நோக்கில் மட்டுமே இங்கு வெளியிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில். உடனடியாக இந்த பக்கத்தில் உள்ள ஸ்கேன் சில பக்கங்களை மட்டும் விட்டு விட்டு மீதப் பக்கங்கள் அகற்றப்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அப்புறம் சமீபத்தில் நடந்த பெங்களுரு காமிக்-கான் சென்று டெக்ஸ் வில்லர் வேடத்தில் அசத்திய அசாத்திய நண்பர் ஸ்ரீராம் லக்ஷ்மணன் அவர்கள்தான் இந்த வார ஹாட் டாபிக்!

VC 005_தப்புத் தப்பாய் ஒரு தப்பு_ஏஜெண்ட் ராபின் சாகசம்_வி காமிக்ஸ்

  வணக்கங்கள் பிரிய உள்ளங்களே.. பிரபலமான கிரைம் நாவல் உலக முடிசூடா மாமன்னர் ராஜேஷ் குமார் அவர்களின் தப்புத்தப்பாய் ஒரு தப்பு  என்கிற தலைப்பின...