புதன், 31 ஆகஸ்ட், 2022

டொமாட்டோ கிரகம்_விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்.. தங்களுக்கு எங்கள் நட்பின் பரிசாக.. சுட்டி இதழில் வந்த இலவச இணைப்பு இந்த பதிவில் உங்களுக்கு அன்புடன் வழங்கப்படுகிறது..  இந்த புத்தகம் பாதுகாக்கப்பட அன்புடன் கொடுத்து உதவிய திரு. இரா. தி. முருகன் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள்.. 
பிடிஎப் தரவிறக்க: 


செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

நியாயமா அன்பே...ஜானி சின்னப்பன்

 


உள்ளங்கை அரிசியாய் மனதில் எப்பொழுதும் உன் சிந்தனைகள்..

அள்ளஅள்ளக் குறையாமல்...

தொடர்ந்து நிரம்பி வழிகின்றதே..

***

எதிரெதிரே சந்திக்கும் பார்வைப் பறிமாற்றங்களின்

அர்த்தங்கள்  சரிந்தாடிக்  இருக்கின்றன

உள்ளங்கை அரிசியாய்..

****

புழுங்கலிடைப் பூச்சியொன்றாய்

மனது சிக்கித் தவிப்பதை உன் உள்ளங்கையில் கொட்டிப் பராக்குப் பார்த்து விட்டு விண் பறவைக்கு வீசி விலகுகிறாய்..நியாயமா அன்பே..


#கவியதிகாரம் #விஜயாமைந்தன் #ஜானிசின்னப்பன் #chapterpoem

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...