சனி, 25 மே, 2019

ஒன் மினிட் பாஸ்..கவனிங்க ப்ளீஸ்..


சரக்கடிச்சிட்டு யாருமேயில்லாத மாடியொன்றில் போய்ப் படுத்துக்கிறார் ஒருத்தர்...விழிப்பு வர தாமதமாகுது..ஆனால் உடல் தாகத்துக்கு தவிக்குது.. தண்ணீர் கொடுக்க யாருமேயில்லாம தவிச்சி தவிச்சி தவிச்சி செத்துப் போறார்...ரெண்டு மூணு நாளு கழிச்சி சின்னப் பசங்க திருடன் போலீஸ் விளையாடுறதுக்கு அங்கே ஒளிஞ்சிக்கப் போறாங்க.. போனா பொணமா கிடக்குறாரு.. நான் போய் சேர்ந்து அவரை சோதித்தப்போ தண்ணீர் இல்லாம உடம்பு வெயில்ல கிடந்து கருவாடா கருகிப் போயிருக்கார்.. அங்கங்கே நிலத்தில விரிசல் விடுறமாதிரி தோலே விரிசல் விட்டுக் கிழிஞ்சி கிடக்கு.....#சரக்கடிச்சது...தனிமையில இனிமை காண நினைச்சது...பொது ஜனப் பார்வையில இருந்து விலகிப் போனது.. உறுதுணையா யாருமே இல்லாமப் போனது...ம்ஹ்ம்..அவருக்கு என்ன கஷ்டகாலமோ... போய் சேர்ந்துட்டார்...நிஜ சம்பவம்..2016 வாக்கில்... இதுவும் நடக்கிறது.. ஆகவே குடிகாரன்தானே...குடித்துவிட்டு எங்காவது உருண்டு கொண்டிருக்கட்டும்..நமக்கென்ன வந்தது என்று விட்டுவிட்டுப் போகாமல் ஒரு வாய் தண்ணீரை வாயில் சரித்து விட்டுப் போங்கள். யார் கண்டது...ஒரு உயிரை நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே காப்பாற்றியிருக்கக்கூடும்...செய்யுங்களேன்...

அநீதி அகற்றிடு! _கற்பனைக் கதை_ஸ்பைடர்+சுஸ்கி விஸ்கி சந்தித்தால்.._ஜானி சின்னப்பன்

 ஸ்பைடர்.. ஸ்பைடர்.. பதட்டத்தோடு ஓடி வந்தார் பெல்ஹாம்.. சிலந்திவலைப்படுக்கையிலிருந்து துள்ளிக்குதித்தான் அந்த வீர வேங்கை ஸ்பைடர். என்ன பெல்ஹ...