வியாழன், 28 மே, 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகங்கள் 19 & 20

நண்பர் நத்தம் தினகரன் அவர்களது உதவியால் லயன் காமிக்ஸ் குறித்து ஒரு பேட்டியை கீற்று.காமில் படித்தேன். உங்கள் பார்வைக்கு அது!
http://keetru.com/index.php/2009-10-07-12-27-44/2012/19054-2012-03-19-09-49-21
நன்றி நண்பர்களே!

சனி, 23 மே, 2015

வாழ்ந்தது போதுமா? _018_1972_veera kesari Magazine from Sri Lanka

hai friends! this rare srilankan comics written and drawings by sanra's 18 part here to read. enjoy! 
with love_johny!

கோராவும்,புரட்சியாளர்களும்_மோசே வரலாறு_விவிலிய சித்திரக் கதை வரிசை_jw.org

வணக்கம் தோழமை உள்ளங்களே! 
மோசே கடல் நடந்து மக்கள் அலையை எகிப்து கரையின் பக்கமிருந்து மறு பக்கம் கொண்டு வந்து சேர்த்த பின்னர் அவர்களை வழி நடத்த எங்கோ இருந்து வந்த மோசே எதற்கு? தங்களது பாரம்பரியமிக்க குடும்பத் தலைவர்களே போதுமே என்று ஒரு கும்பல் நினைத்து அந்த விஷயத்தை மோசேவுக்கு எதிராகத் திருப்பி விட புரட்சி முயற்சி மேற்கொள்கின்றனர். அந்த சூழலில் என்ன நடக்கிறது என்று இந்த விவிலியக் கதை வழியே தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்துவ நண்பர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கும், மற்ற நண்பர்கள் தங்களது கிறிஸ்தவ நண்பர்களுக்கு இந்தக் கதை வரிசையை அறிமுகப் படுத்தி வைக்கலாமே? 
 
நாளை டிப்பார்ட்மெண்ட் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதவிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்ங்க!

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய தோழன்_ஜானி

வெள்ளி, 22 மே, 2015

kid Colt_Out Law_a Try...

வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
இம்முறை ஒரு கதை சுருக்கம்!
கிட் கோல்ட் ஒரு வெஸ்டர்ன் கதை நாயகன். இவன் சிறுவயதில் ஒரு சமூக விரோதியைத் தற்காப்புக்காகக் கொன்று விடுகிறான். சட்டத்தை எதிர்கொள்ளும் திறனற்ற சிறுவனாக இருந்ததால் அவனது முட்டாள்தனமான பயத்தினால் அந்த இடத்தை விட்டுத் தப்பி சென்று விடுகிறான். பின்னர் அந்தத் தவறுக்காக அவன் செல்லும் இடமெல்லாம் துரத்தப்படுகிற சம்பவங்கள் அடுக்கடுக்காக நிகழ்கிறது. அவ்வாறு ஒரு இடத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவனது தீரமான போராட்டத்தால் ஒரு இரயில் கொள்ளையைத் தடுக்க அந்த இடத்தின் ஷெரீப்புக்கு உதவுகிறான். அந்தக் கதையின் முடிவில் கெட்டவனிடமும் ஒரு நல்லது இருக்கும் என்கிற கருத்துடன் அந்த ஷெரீப் அவனைத் தப்ப விடுகிறார். அந்தக் கதையின் ஆரம்பப் பக்கம் மட்டும் சிறிய திருத்தங்களுடன் உங்கள் பார்வைக்கு...

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்_ஜானி!!!

வாழ்ந்தது போதுமா? _017_1972_veera kesari Magazine from Sri Lanka

வணக்கம் நண்பர்களே!
வீரகேசரியின் வாழ்ந்தது போதுமா என்கிற சித்திரக் கதையினை சந்ரா அவர்களது கைவண்ணத்தில் இரசித்திருப்பீர்கள்! அதன் முந்தைய தொடர்ச்சி
http://johny-johnsimon.blogspot.in/2015/04/0161972veera-kesari-magazine-from-sri.html பதிவில் வாசிக்கலாம்! அதன் பின்னர்...
தொடரும்....

செவ்வாய், 19 மே, 2015

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--006

dear friendz
my best wishes for your success in this SI Selection 2015!
god bless you!
காவல் நிலை ஆணைகள்
121. இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் வெடிபொருட்கள் சட்டம் இவைகளின் கீழ் காவல் துறையினரின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கும் காவல் நிலை ஆணை எண்  எந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது?
-பதினெட்டாவது அத்தியாயம்
122. PSO 310 ல் வெடி கருவிகள் அதன் தொடர்புடைய படைக் கலன்கள் எடுத்துச் செல்பவரை கீழ்க் கண்ட காவல் அதிகாரிகளை இந்திய சட்டபிரிவு 22 ன் கீழ் சோதனை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது?
-உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்
123.குற்றத்தை ஒத்துக்கொண்ட சாட்சியின் சிறைக்காப்பு பற்றி (custody of an approver) குறிப்பிடும் காவல் நிலை ஆணை?
-PSO 328
124.ஒரு பெண் கைதியை சாலை வழியாக நடத்தி வழிக்காவல் செய்யும்போது அவர்கள் எவ்வளவு மைல் தூரத்துக்கு மேல் நடத்திக்கொண்டு செல்லக் கூடாது?
-ஒரு மைல்
125.கைதிகளை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளனர்?
-இரண்டு வகைகளாக
126. CrPC 267 ல் நீதிமன்றங்களில் கைதிகளை ஆஜர்படுத்துவது குறித்து கூறப்பட்டுள்ளது போன்று எந்த காவல் நிலை ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ளது?
-PSO 350
127.ஆயுதம் தரித்து செல்லுதலை முறைப்படுத்தும் PSO?
-PSO 312.
128.PSO 319 ஆயுத சட்ட உரிமை பதிவேட்டை எவ்வளவு கால அளவுக்குள் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்?
-காலாண்டுக்கொருமுறை
129.PSO 322 ன்படி மாவட்ட காவல் அலுவலகக் கிடங்கில் உரிமம் ரத்து மற்றும் காலாவதியான ஆயுதங்களை எவ்வளவு கால அளவு வரை வைத்துக் கொள்ளலாம்?
-ஒரு வருடம் வரை
130.காப்புகளைப் பற்றிய பொதுக் கட்டளைகளைப் பற்றிக் கூறும் கா.நி.ஆணை?
-326
131.காப்புப் பணியின்போது காவல் முறை மாற்றும் புத்தகம் ஒன்றை கீழ்க்கண்ட எந்தப் படிவ எண்ணில் பதிவு செய்ய வேண்டும்?
-படிவ எண் 50
132.PSO 366 கூறுவது?
-முறை காவலர்களை அனுப்புவதற்கான நோக்கங்கள்
133. நோயுற்ற காவலர்களுக்கு மருத்துவம் செய்வது பற்றிய விதிகள் தமிழ்நாடு மருத்துவ விதி தொகுப்பு பத்தி 163 மற்றும் 317 கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்புள்ள காவல் நிலைய ஆணை எண்
-385
134.PSO 416 கூறுவது ...
-தடிப் பயிற்சியும், கலகக் கூட்ட நடவடிக்கைகள்
135.கா.நி.ஆணை 434 ரயில்வே காவல் மேடை பணியாளர்களின் வேலை முறைப் பட்டியல் எந்தப் படிவ எண்ணில் குறித்து வைக்க வேண்டும்?
- Form No.63
With ever love_yours_johny@john simon

சனி, 9 மே, 2015

கொஞ்சம் தண்ணீர் கொடுங்க பாஸ்!

வணக்கங்க!
அடிக்கிற கடும் வெயிலுக்குத் தப்பிக்க வழியே இல்லிங்க! வெயிலுக்கு எங்காவது ஒதுங்கலாம்னா மெட்ரோ ரெயில் பாலத்துக்குக் கீழதான்ங்க ஒதுங்கணும். மழைக் காலத்துல நாம ஆளுக்கு ஒரு மரம் வெச்சி இருந்தா அது இப்போ ரொம்ப பிரயோஜனமா இருக்குமில்லிங்களா? கொஞ்சம் யோசிங்க! மரங்களை வைப்பவங்க மாமனிதர்தானுங்க!
கோடை மழை கொஞ்சம் பூமிய நனைக்காதான்னு வானத்தை உத்து உத்துப் பாக்குறதுல என்னங்க இருக்கு. பூமில மரம் வந்தா வானத்துல நீர்கட்டுமுங்க. அது மழையா பெய்ய மரங்க வேணுமுங்க. இருக்குற மரத்தை வெட்ட மனம் இருக்குறவங்க புதுசா ஒரு கன்றை நட ஏனுங்க தயங்குறிங்க?
தண்ணீ தண்ணீ னு நம்ம தாகத்துல தவிக்குற இந்த காலத்துலயாவது கொஞ்சம் சிந்திங்க பாஸ்! ஆண்ராய்டு அப்பிளிகேஷன் ஏதும் இதுக்கு இல்லிங்க! உங்க மனம்தான் பாஸு அப்பிளிக்கேசனு!
அங்கங்க தண்ணீருக்காக குடம் குடமா பிளாஸ்டிக்குகளை வெச்சிக்கிட்டு அவதிப்படற நம்ம தாய்க்குலங்களை கொஞ்சம் மனசுல வெய்யிங்க. இவங்க படற அவஸ்தையில நமக்கும் ஒரு பங்கிருக்கு பாஸ்.
வசதிப்படறவங்க வெயிலுக்கு இளநீ, தர்பூஸ் னு வாங்கி சாப்பிட்டு தங்க தாகத்தை தணிக்கிறாங்க. வசதிப்படாத மக்க ஒரு வாயி தண்ணி எடுத்து தொண்டையை நனைச்சாதானுங்களே மறு வேலையப் பாக்க முடியும். அதும் பஞ்சம்னா என்னங்க பண்றது பாஸ்.
அடுத்த மாநிலம் தண்ணி தர்றது இருக்கட்டும் இருக்க தண்ணிய எப்படி காக்கிறதுன்னு சிந்திங்க பாஸ். அதுக்கும் மரங்களா பார்த்து நட்டு வெச்சி மட்டும்தானுங்க நம்ம மனுசப்பய புள்ளங்க பிழைக்க முடியும். சரிதானுங்களே?
ஒரு பக்கம் அக்கினி தகிக்க, மறுபக்கம் நாம தாகத்துல தவிக்க இருக்கிற மரங்களையும் பலி போடறது – மரங்களே இல்லா மகத்துவமான கான்கிரீட் காடா நம்ம ஊர மாத்துறது. நாம சிட்டி பயலுக அப்படின்னு தம்பட்டம் அடிக்க மட்டும்தான் உதவுது பாஸு!
இப்படிப்பட்ட ஒரு சூழல்ல இந்த குறுங்கதைய கொடுத்து உங்க துன்பத்த குறைச்சி சிந்தனையைத் தூண்டிவிட நம்ம நண்பர் ரமேஷ் கொடுத்த காமிக்ஸின் ஒரு சின்னஞ்சிறு பகுதி இங்கன உங்க பார்வைக்குப் பந்தி வெக்கிறேனுங்க!
படிச்சிட்டு ஒரு வாய் தண்ணி எடுத்துக் குடிங்க மக்கா! தண்ணி தாகம் ரொம்ப கவனமா கவனிக்க வேண்டியதுங்க. கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ஆசுபத்திரிக்கு போனேனுங்க. அங்க கிட்னிய ஸ்கான் பண்ணி (ஹி ஹி நமக்கே ஸ்கானா?) ஒரு குட்டிக் கல்லு இருக்கறதா சொல்லிபுட்டாங்க. ஆத்தாடி! கதை முடிஞ்சதான்னு நொந்து போனேனுங்க. அப்போதான் பெரிய்ய டாக்டரு வந்து இது மூணு மில்லி (?) மீட்டருதான். நூறு பேருக்கு ஸ்கான் பண்ணாலும் தொண்ணத்தாறு பேருக்கு இந்த பிரச்சினை இருக்குமாம். அப்பப்போ உங்க டேங்கை காலி பண்ணிடனுமுங்கன்னு சொன்னாருங்க. நல்லா தண்ணி குடிக்கணுமுங்க. கவனிங்க விலை ஒசந்த எளனி குடிக்க சொல்லல, ஆனா தண்ணி குடிக்க சொல்றாருங்க. தண்ணி குடிக்குறது ரொம்ப முக்கியமுங்க. நம்ம உடம்புல பெரும்பகுதி தண்ணியால ஆனது. உலகத்துல நிலத்த விட நீருதாங்க அதிகமா இருக்குது. நீரின்றி அமையாது உலகுன்னு ஒரு முது மொழிய பெரியவங்க சொல்லி வெச்சி போனத நெனச்சிப் பாருங்க.
இப்போ கதைக்கு போலாமுங்க.
எங்கியோ ஒரு தண்ணியில்லாக் காட்டுக்குள்ள நம்ம அண்ணாச்சி வண்டிய விட்டுர்றாருங்க. அண்ணாச்சி வண்டி நெறைய குண்டு வெச்சி இருக்காருங்க ஆனா ஒரு பாட்டல் தண்ணி இல்லிங்க!
இந்தக் கொடுமைல ஒரு ரோபோவ தண்ணி எடுத்துட்டு வர சொல்றாருங்க நம்ம அண்ணாச்சி!
அதுவும் சின்சியரா கிளம்பிப் போகுது. அதுக்கென்ன வெயிலா மழையா அதும்பாட்டு கிளம்பிட்டுது. அப்புறம்???

வாசிங்க.

இந்தக் கதைக்கு சொந்தக் காரங்க Zhang Xiaoyu, ankama editions & Krakenஆகியோருக்கு நன்றிங்க. (credits)
அந்த ரோபோவுக்கு ஒரு சொம்பு தண்ணிய கொடுத்து அனுப்புங்க மக்கா! என்ன நான் சொல்றது? அனுப்புனவன் பாவம்தானே?(ஆனா அவன் கருவாடாகி இருப்பாங்கறது வேற விசயம் ஹி ஹி ஹி ) 

என்னிக்கும் அதேமாரி அன்போட ஒங்களோட நண்பேன் –ஜானி என்கிற ஜான் சைமன்      

வெள்ளி, 8 மே, 2015

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--005

hai friendz!
this time i came with this Criminal procedure code_important questions
this code deals with the court actions. please read law book first then this simple questions helps to refresh your memory. 
குற்ற விசாரணை முறை சட்டம்
101.ஆறு மாத காலம் என்ற சட்ட வரம்பு முறையில் உள்ள வரம்பு கீழ்க்கண்ட தண்டனை சம்மந்தப்பட்ட குற்றத்திற்குப் பொருந்தும்.
(அபராதம் விதிக்கக் கூடிய குற்றங்களுக்கு விசாரணைக்கு ஏற்பதற்குரிய காலவரம்பு குறித்தது_ஆறு மாதங்கள் வரை எந்த குற்றங்களுக்கான விசாரணைக்கு நீதி மன்றம் ஏற்கலாம்? என்கிற கேள்விக்கு இதனையே விடையாகத் தரலாம்? எப்படி இருப்பினும் ஆழ்ந்த படிப்பு மட்டுமே இறுதி வெற்றியை ஈட்ட உதவும் நண்பர்களே! முயன்று படித்தால் வெற்றி உங்களதே!)
-அபராதம் மட்டும்.
102.ஒரு குற்றம் ஒரு வருட காலத்துக்கு மேல் 3 வருட காலத்திற்கு மிகாமல் தண்டனைக்குரியது என்றால் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு
_மூன்று வருடம்
103. ஒரு மேற்சொன்ன காலவரம்பை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் சட்டப்பிரிவு...
-468 CrPC
104.கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை சாதாரணமாக
-குற்றச் செயல் நடந்த நாளில் இருந்து கணக்கிடப்படும்.
105. மேற்கண்ட கணக்கீட்டினை குறிப்பிடும் பிரிவு?
-469 CrPC
106.ஒரு எதிரியின் மீது உள்ள வழக்கு காலவரம்பிற்கு உட்பட்டபோது அவர் அவ்வழக்கு தொடர்பாக ஏதாவது ஒரு மேல் முறையீடு செய்து அது முறையீட்டு மன்றத்தில் நிலுவையில் இருந்தால் காலவரம்பு முறையீட்டு மனு முடிவுக்கு வரும்வரை நீடிக்கும் என்பது எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
-470 CrPC
107.மன்னித்து விடுதல் என்பதை கு.வி.மு.சட்டத்தில் நிர்ணயம் செய்யும் பிரிவு---
-360 CrPC
108.நீதித்துறை நடுவர் ஒரு வழக்கின் விசாரணையின்போது காவல் துறை அலுவலரின் கைது நடவடிக்கை அடிப்படை இல்லாதது என்று கருதினால் அவர் மீது ரூபாய் ஆயிரத்துக்கு மிகாமல் நஷ்ட ஈடு விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. சரியா?
-சரியானது.
109.ஒரு காவல் துறை அலுவலர் அடிப்படையில்லாமல் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டால் நீதித்துறை நடுவர் அவர்மீது நஷ்ட ஈடு விதிக்கலாம் என்பதைக் கூறும் சட்டப்பிரிவு எது?
-358 CrPC
110.சமாதானமாகப் போகக்கூடிய நடைமுறை விவரங்களை விளக்கக் கூடிய அட்டவனையை குறிப்பிடும் சட்டப்பிரிவு...
-320 CrPC
111.வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தின் எதிரி ஆஜராகவில்லை எனில் அதற்காக தாக்கல் செய்யப்படும் மன்னிப்பு மனு கீழ்க்கண்ட பிரிவில் சொல்லப்பட்டுள்ளது.
-317 CrPC
112.பொது இடைஞ்சல் நிகழ்வுகள் சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்
-மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து நிர்வாக நடுவருக்கும் உள்ளது.
113.நீர் மற்றும் நிலம் சம்மந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக அமைதிக்கு குந்தகம் நேரும் நிலை ஏற்பட்டால் இந்த விவரத்தை காவல் துறை அதிகாரி தனது அறிக்கையின் மூலம் கீழ்க்காணும் அலுவலருக்கு அனுப்பவேண்டும்...
-நிர்வாக நடுவர்
114.சட்டப்பிரிவு 145 ன் கீழ் ஒரு பிரச்சினையை நிர்வாக நடுவர் முடிவு செய்யும்போது அந்த தேதியில் அந்த இடம் யார் அனுபவத்தில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது...
-சரியானது
115.நிலம் மற்றும் நீர் சம்மந்தமாக உபயோக உரிமை குறித்து ஏற்படக் கூடிய பிரச்சினை மற்றும் அதன் விளைவாக உருவாகக்கூடிய அமைதிக்குப் பாதகமான சூழ்நிலையை தடுக்கும் நடவடிக்கையை எடுத்து உத்தரவு பிறப்பிக்கும் அலுவலர்
-நிர்வாக நடுவர்
116. 151 CrPC  கைது நடவடிக்கை என்பது
-ஒரு தடுப்பு நடவடிக்கை
117.நிலுவையில் உள்ள வழக்கு ஒன்றை CrPC 321ன்படி திரும்பப் பெறக்கூடிய மனுவைத் தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம்
-அரசு வழக்கறிஞருக்கு உண்டு.
118.மரண தண்டனையை உயர்நீதி மன்றம் உறுதிப்படுத்தாமல் செயல்படுத்தலாம் என்பது
-சரியானது
119.மரண தண்டனையில் சம்மந்தப்பட்ட எதிரி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யும்போது மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை உயர்நீதி மன்றம் அந்த மரண தண்டனை சம்மந்தமாக அங்கீகாரம் அளிக்க முடியாது என்பது
-சரியானது.
120.ரிவிஷன் என்ற பரிகாரத்தை உயர்நீதி மன்றத்திலும் அமர்வு நீதிமன்றத்திலும் ஒரே நேரத்தில் ஒருவர் பெறலாம் என்பது

_தவறானது 
regards,
with love_jsc.johny!

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--004

இந்திய தண்டனை சட்டம்
81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 120
82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?
-12 th chapter
83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?
-பிரிவு 117 இதச
84. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 103
85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?
-அத்தியாயம் ஆறு
86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்
87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 111
88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 119
89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 117
90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்...இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?
-பிரிவு 304 (A) IPC
91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?
--மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்
92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 141 IPC
93. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 145 IPC
94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?
-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
95. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது...
-பிரிவு 160 IPC
96. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 170
97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?
-பிரிவு 170 & 171
98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?
-பிரிவு 147 IPC
99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?
-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.
100. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

புதன், 6 மே, 2015

எகிப்து மண்ணில் யோசேப்பு_விவிலிய சித்திரக் கதைகள்_jw.org Comics series_translated for tamil people

வணக்கங்கள் அன்பு மிக்கோரே!
யேகோவா சாட்சிய சபையினரின் முயற்சியால் உருவாகியுள்ள இந்த அட்டகாசமான சித்திரங்கள் தமிழ் பேசினால் நன்றாக இருக்குமே என்கிற பேரவாவில் மொழிபெயர்த்திருக்கிறேன். யாக்கோபின் புத்திரர் என்கிற சித்திரக் கதையின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தக் கதையும் தங்களைக் கவரும் என்பதில் எனக்கு ஐயமில்லை! 
வாசித்து மகிழுங்கள்! 

இதன் பின்னர் யோசேப்பு பாரோ மன்னனின் அன்பை சம்பாதித்து மன்னனுக்கு அடுத்த இடத்தில் எங்கோ எகிப்து நாட்டில் அமர வைக்கப்பட்டு தனது சகோதர-பெற்றோர் மதிப்பு செலுத்தும்படியான பெரும் புகழ் அடைந்ததை இந்த வலைப்பூவின் சில பதிவுகளுக்கு முன் சென்றால் கண்டடையலாம். அதன் பின்னர் மோசேயின் வரலாறு துவங்குகிறது. அரசனை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திட இறைவன் வகை செய்திட அங்கிருந்து ஒரு மாபெரும் சமுதாயம் கானான் தேசத்துக்கு வந்தடைகிறது. யோசுவா தலைமையேற்க புறப்படும் இஸ்ரேல் படையினரின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் இனி வரும் பாகங்களில் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் நாடுவோர் jw.org வலைத்தளம் சென்று வாசியுங்கள்! தமிழில் நேரமிருக்கையில் பதிகிறேன்! நன்றிகள் பல!
என்றும் அதே அன்புடன்_உங்கள் இனிய நண்பன் ஜானி!

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--003

hai friendz!
this is the next collection of questions for SI selection 2015.
this question and answers are from Indian Evidence Act. so all the sections related to this questions are coming from Indian Evidence Act only. please do remember. the exam date 24.05.2015. be prepare yourself. today i went to police ground at early morning 4.30 AM. that time one police constable sitting in a vehicle and refer some law books for the exam. this time the competition will be very tough. so regular study only gift you the success.
best of luck.

51. A என்பவரின் மரணம் நஞ்சினால் விளைவிக்கப் பட்டதா என்கிற கேள்வியில் அவர் இறந்திருப்பது எந்த நஞ்சினால் என்று யூகிக்கப்படுகிறதோ அந்த நஞ்சினால் உண்டாக்கப்படும் அறிகுறிகள் பற்றி வல்லுனர்கள் கூறும் கருத்துக்கள் இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவின்படி தொடர்புடையதாகிறது? (Expert’s Opinion)
- இ.சா.ச. பிரிவு 45
52. Dactylo graphy என்பது எதனைக் குறிக்கிறது?
-கைரேகை
53. மரபணு சோதனை எதற்கெல்லாம் பயன்படும்?
- தந்தை வழி மரபு கண்டறிய, மனிதனை இன்னாரென அடையாளம் காண்பிப்பதற்கு.
54. Digital Signature http://wordinfo.info/unit/3673/ip:1/il:D (இலக்க முறை குறியிட்டுக் கையெழுத்து) குறித்து கருத்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?
-பிரிவு 47 (A)
55. குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரின் தீய குணநலன்கள் வழக்கிற்கு தொடர்பற்றது என்று கூறும் பிரிவு யாது?
-பிரிவு 54
56.நீதிமன்றம் நீதி முறையில் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருண்மைகளின் பட்டியல், இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறது?
- பிரிவு 57
57. IEA (Indian evidence act) sec 60-ன் கீழ் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத சாட்சியம் யாது?
- செவிவழி சாட்சியம்
58. செவிவழி சாட்சியம் தொடர்பற்றது என்ற விதியின் விதிவிலக்கு எது?
-ஒன்றிய செயல் கோட்பாடு மற்றும் மரண வாக்குமூலம்.
59. ஒரு ஆவணத்தின் உள்ளடக்கங்களை தலை நிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ மெய்ப்பிக்கலாம் எனக் கூறுகின்ற பிரிவு யாது?
-பிரிவு 61  
60. சார்நிலை சாட்சியங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சூழ்நிலைகளை விளக்குகின்ற பிரிவு யாது?
-பிரிவு 65.
61. எது தனியார் ஆவணமாகும்?
-கிரைய ஒப்பந்தம், குத்தகை ஒப்பந்தம், பாகப்பிரிவினை பத்திரம் ஆகியவை
62. எவை பொது ஆவணம்?
-சட்டமன்றத்துறை பதிவேடு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்
63. ஒரு ஆவணத்தை தொல் ஆவணம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்?
-முப்பது ஆண்டுகள்
64.ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்க்கவில்லை என்று வாதிட்டார். குடியிருப்பவர் வீட்டைப் பழுது பார்த்ததாக வாதிட்டார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரைச் சேர்ந்தது?
-உரிமையாளர்.
65. B யின் மரண வாக்குமூலத்தை மெய்ப்பிக்க A விரும்புகிறார். இந்து அதற்குத் தொடர்புடைய பொருண்மையான B யின் மரணத்தை மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு A யை சேர்ந்ததாகும் என்று சொல்லுகின்ற பிரிவு யாது?
-IEA sec 104
66.கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட A என்பவர் அது ஒரு விபத்து என்று கூறி தண்டனையில் இருந்து விலக்குக் கேட்கிறார். இதில் மெய்ப்பிக்கும் சுமை யாரை சேர்ந்தது?
- குற்றம் சாட்டப்பட்டவர் A யை சார்ந்தது.
67.வரதட்சணை மரணம் தொடர்பான அனுமானம் குறித்து இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவில் கூறப்படுகிறது?
-பிரிவு 113 –B
68.இந்திய சாட்சிய சட்டத்தின் பிரிவு 113-A இந்திய தண்டனை சட்டத்தின் எந்தப் பிரிவுடன் தொடர்புடையது?
-இந்திய தண்டனை சட்டம் பிரிவு 498-A
69. வன்புணர்ச்சி குற்றம் குறித்து அனுமானம் பற்றி விளக்குகின்ற பிரிவு யாது?
-பிரிவு 114-A IEA
70.குழந்தை சாட்சியங்கள் குறித்து கூறுகின்ற பிரிவு யாது?
-பிரிவு 118 IEA
71.IEA sec 119 எதைப் பற்றி விளக்குகிறது?
_ ஊமை சாட்சியம்
72.ஒரு கணவன், தன் மனைவி மற்றும் உறவினர்கள் மூவர் முன்னிலையில் குற்ற ஏற்பினை அளித்தார். இதில் யார் யார் அதனை மெய்ப்பிக்கலாம்?
-உறவினர்கள் மட்டும்
73.A எனும் கட்சிக்காரர்  B எனும் தனது வழக்கறிஞரிடம் பொய் ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தி சொத்தின் அனுபவத்தைப் பெற விரும்புகிறேன். எனவே அந்த ஆவணத்தின் மீது வழக்கிட வேண்டுமென்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறுகிறார். இது இந்திய சாட்சிய சட்டத்தின் எந்தப் பிரிவோடு சம்மந்தப்பட்டிருக்கிறது?
-பிரிவு 126 ன் கீழ் மெய்ப்பிக்கலாம்.
74. உடன் குற்றவாளியின் சாட்சியம் தகுதியான சாட்சியே எனக் கூறும் பிரிவு யாது?
_பிரிவு 133 IEA
75.ஒரு சாட்சி எதிர்த்தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணையாகும்?
_குறுக்கு விசாரணை
76.ஒரு சாட்சி குறுக்கு விசாரணைக்குப் பிறகு அவரை அழைத்த தரப்பினரால் விசாரிக்கப்படும்போது அது என்ன விசாரணை ஆகும்?
-மறு விசாரணை
77. விடையமை வினாக்கள் (leading questions) எந்த விசாரணையின்போது கேட்கக் கூடாது?
-முதல் விசாரணை
78. பிறழ் சாட்சி (hostile witness) பற்றி கூறுகின்ற பிரிவு யாது?
_ பிரிவு 154 IEA
79.சாட்சியின் நாணயத்தைத் தாக்குதல் என்பது எந்தப் பிரிவில் விளக்கப்படுகின்றது?
-பிரிவு 155 IEA
80.நினைவைப் புதுப்பித்தல் பற்றி எந்தப் பிரிவு கூறுகிறது?

- பிரிவு 159 IEA
bye...with love, yours
john simon.C 

ஒற்றை ஓவியம் ஒன்பது கோடி!!!_ ஓவியர் + காவலர்_ ராபர்ட் ரைமன்_குறிப்புகள்.

  வணக்கம் தோழமை உள்ளங்களே.. சன் செய்தி ஒரு வினோத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது..  அதெப்படி ஒரு வெள்ளை ஓவியத்துக்கு ஒன்பது கோடி  அந்த அ...