வெள்ளி, 8 மே, 2015

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு உதவிகரமான கேள்வி-பதில்கள்--004

இந்திய தண்டனை சட்டம்
81.இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தி ஒரு குற்றத்தை செய்தால் அது எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 120
82.நாணயம் மற்றும் அரசு முத்திரைகள் சம்மந்தமான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?
-12 th chapter
83.பொதுமக்கள் ஒன்று கூடி குற்றம் செய்ய ஒருவன் உடந்தையாய் இருந்து அதனால் பத்து பேர்களுக்கு மேற்பட்டவர்களால் செய்யப்படும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பது பற்றி எந்த சட்டப்பிரிவில் விளக்கப்பட்டிருக்கிறது?
-பிரிவு 117 இதச
84. ஒரு சொத்தை பொறுத்த தற்காப்பு உரிமை, மரணத்ஹ்டை விளைவிக்கும் அளவிற்கு எப்பொழுது நீடிக்கும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 103
85.அரசிற்கு எதிரான குற்றங்கள் பற்றி எந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது?
-அத்தியாயம் ஆறு
86.ஒருவர் இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்திச் சென்று பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கிறார், அதை வைத்து பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுக்குமெனில் இந்த செய்கைக்கு மேற்படி நபருக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
-ஆயுள்தண்டனை மற்றும் அபராதம்
87.மகேஷ் என்பவர் ராம் குமாரை ஒரு வீட்டில் சென்று கொள்ளையடித்து விட்டு வர கையில் ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறார். ரமேஷ் அந்த வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அந்த வீட்டுக் காரரால் தடுக்கப்பட்டு ரமேஷைப் பிடிக்க முயலுகிறார். அப்போது வீட்டுக்காரரை ரமேஷ் கொலை செய்து விடுகிறார். அந்த கொலையின் காரணமாக மகேஷும் கொலைக் குற்றத்திற்கு வகை செய்யப்பட்ட தண்டனைக்கு ஆளாவார் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 111
88.ரமேஷ் என்ற காவல் ஆய்வாளரிடம் சீனிவாசன் என்பவர் தன்னை கோபால் அடித்து விட்டதாக ஒரு புகார் கொடுக்கிறார். அந்த புகாரைப் பெற்ற ரமேஷ் என்ற ஆய்வாளர் கோபால் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. மேற்படி ரமேஷ் என்ற ஆய்வாளரின் செய்கை குற்றம் என்று எந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 119
89.மேட்டுச்சேரி என்ற கிராமத்தில் முஸ்லிம் மக்கள் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஊர்வலம் நடத்துவதாக முடிவு செய்து அந்த ஊர்வலம் நடத்தும்போது அந்த ஊர்வலத்தைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற பிரிவை சேர்ந்தவர்களை ஓர் இடத்தில் கூட வேண்டும் என்று சுப்பிரமணியன் என்பவர் சுவரொட்டி ஓட்டுகிறார். இந்த செய்கைக்காக சுப்பிரமணியன் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 117
90.முகுந்தன் என்பவர் ஒரு கும்பலால் தாக்கப்படும்போது, அவர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக தன்னிடம் உள்ள கைத்துப்பாக்கியால் அந்த கும்பலை நோக்கி சுடுகிறார். அதன் விளைவாக அந்தக் கும்பலில் ஒரு குழந்தை துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து விட்டது. முகுந்தன் புரிந்த குற்றம்...இதச பிரிவின் எந்தப் பிரிவின்படி குற்றமாகும்?
-பிரிவு 304 (A) IPC
91.ரமேஷ் என்பவரின் வீட்டில் மகேஷ் என்பவர் புகுந்து திருட முற்படுகிறார், அப்போது ரமேஷ் தனது வீட்டில் திருட முயன்ற மகேஷ் என்பவரை தடுக்கிறார், அப்போது ரமேஷ் என்பவருக்கு தற்காப்பு உரிமை எதுவரையில் நீடித்து இருக்கும்?
--மகேஷ் தப்பி வெளியே ஓடிய வரையில்
92.ஒரு திருவிழாவில் கூடிய ஒரு கூட்டமானது ஒரு வன்முறை செயலில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு அழிம்பு ஏற்படுத்தினால் அது சட்டவிரோதமான கூட்டம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 141 IPC
93. ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு பஸ் மறியலில் ஈடுபடப்போவதாக அந்த கிராமத்தினர் அறிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கூடுவது சட்டவிரோதமானது என்று காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டபோதும் பஸ் மறியலுக்கு கூடுவது தவறு என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-பிரிவு 145 IPC
94.சட்டவிரோதமான கும்பலை கலைந்து செல்ல உத்தரவிட்ட பின்பும் கலைந்து செல்லாமல் கூடியிருக்கும் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கலாம்?
-ஆறுமாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
95. லட்சுமி, அமிர்தம், பவானி, மோகனா ஆகிய நான்குபேரும் இரண்டு குரூப்பாகக் கூடி ஒருவரை ஒருவர் பொது இடத்தில் அசிங்கமான வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஒரு பொது அமைதியை குலைத்தால் அது கீழ்க்கண்ட பிரிவின்படி தண்டனைக்குரியது...
-பிரிவு 160 IPC
96. லலிதா என்ற பெண் தான் ஒரு மாவட்ட ஆட்சியர் என்று பொய்யாக கூறி சுப்பிரமணி என்ற அப்பாவியிடம் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பியூன் வேலை போட்டுத் தருவதாகக் கூறி சுப்பிரமணியிடம் பணம் வாங்கினால் குற்றம் என்று எந்தப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளது?
-இதச பிரிவு 170
97.கந்தசாமி தான் ஒரு காவல் துறை உதவி ஆய்வாளர் என்று கூறிக் கொண்டு உதவி ஆய்வாளருக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு ஒரு வாகன தணிக்கை செய்து அபராதம் வசூல் செய்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர் ஆவார்?
-பிரிவு 170 & 171
98.ஏழு நபர்கள் சட்டவிரோதமான கும்பலாக சேர்ந்து தடிக் கம்புகளை கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்தால் எந்தப் பிரிவின் கீழ் தண்டனை கொடுக்கலாம்?
-பிரிவு 147 IPC
99.மரணம் அல்லது ஆயுள் சிறைவாசம் விதித்து தண்டிக்கப்படக் கூடிய குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு தண்டனை என்ன விதிக்கலாம்?
-ஏழு ஆண்டுகளுக்கு சிறை மற்றும் அபராதம்.
100. குற்றமுறு சதி குற்றத்துக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

-ஆறு மாத கால சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...