செவ்வாய், 21 மே, 2013

ஒரு பஜ்ஜி பதிவு!

அன்புள்ளங்களே வணக்கம்! நம்ம தமிழக மாணவ செல்வங்கள் இப்போது போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டத் துவங்கி உள்ளனர். அவர்களுக்கான ஒரு சின்ன விஷயமே இந்த சின்னஞ்சிறு பதிவு!
நான் என் நண்பரோடு அவ்வப்போது அளவளாவ பக்கத்தில் இருக்கும் தேநீர் கடைக்கு செல்வது வழக்கம்! இன்று கிடைத்த ஒரு துண்டு காகிதம் சொன்ன சேதியே கீழே ஸ்கான் வடிவில் இடம் பெற்றுள்ளது! அறிவுக்கு அளவுகோல் என்று எதுவுமே இல்லை நண்பர்களே! நாம ஜெயிக்கணும்னு நினைச்சு எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அது நமக்கு நம்மை சுற்றி சூழல்களை வடிவமைக்கும். அதற்கு தேவை விடாமுயற்சி மட்டுமே! சாதாரண பஜ்ஜி மடிக்கும் காகிதம் கூட அறிவுக்கு ஒரு துரும்பாக உதவலாம்! உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்!  




சனி, 18 மே, 2013

திகில் சிலந்தி!





வணக்கம் அன்புள்ளங்களே!
நலமே! நலமா?
சிலந்திகளில் அருமையான வகைகள் உண்டு! அவற்றில் இருந்து மாறுபட்டு நிற்கும் ஒரு சிலந்தி வகை ப்ளாக் விடோ என்கிற பெயருள்ள கருப்பு விதவை சிலந்தியாகும். 




Scientific classification
Kingdom:Animalia
Phylum:Arthropoda
Class:Arachnida
Order:Araneae
Family:Theridiidae
Genus:Latrodectus
Walckenaer, 1805
Species




Latrodectus is a genus of spider, in the family Theridiidae, which contains 32 recognized species. The common name widow spiders is sometimes applied to members of the genus due to a behaviour seen in some species in which the female லாட்ரோ டெக்டஸ் என்று விலங்கியல் பெயரிடப்பட்டுள்ள இவ்வகையில் முப்பத்திரண்டு வகையான சிலந்திகள் உண்டு. இவை தெரிடிடே என்ற குடும்பத்தை சேர்ந்தவை. மேலுமதிக விவரங்களை பெற அணுக வேண்டிய அருமையான முகவரி http://en.wikipedia.org/wiki/Black_widow_spider ஆகும். நேஷனல் ஜியோகிராஃபிக் குழந்தைகள் அறிவுத் திறனை பெருக்க வெளியிட்டுள்ள வலைதள முகவரி http://kids.nationalgeographic.co.in/kids/animals/creaturefeature/black-widows/
இதே பெயரில் நடாஷா என்கிற காமிக்ஸ் பாத்திரமும் உண்டு. 
http://i.annihil.us/u/prod/marvel//universe3zx/images/c/cf/BlackWidow-mini-Granov.jpg
http://en.wikipedia.org/wiki/Black_Widow_(Natalia_Romanova)http://en.wikipedia.org/wiki/Black_Widow_(Natalia_Romanova)
http://marvel.com/characters/bio/1009189/black_widow
நிற்க! நமது லயன் காமிக்ஸில் ஜூன் மாதம் 1995 ஆம் வருடம் நூற்றி பதிமூன்றாவது வெளியீடாக மலர்ந்த புத்தகம்தான் "விபரீத விதவை" 
முன் அட்டை 

 பின் அட்டை இன்ஸ்பெக்டர் ஆபத்தின் துப்பறியும் கேள்வியுடன் இப்போதைய நரிலாக் போல வெளியாகும்! சரியான பதிலுக்கு பரிசு அறிவிப்பும் இருக்கும்.

ஹாட் லைன் இல்லாத துவக்கமா?



மியாவ் மியாவ் மரணம் என்கிற கதை துவக்கி வைத்த விபரீத வீரர் சார்லசின் சாகசம் இங்கே மறுபடியும் துவங்குகிறது! 












தனியே ஒரு ஜோடி ஒரு கோடீஸ்வரரின் நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்கும் துணிவுடன் சென்று இறங்குகிறது! அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது! பாதிக்கப் பட்ட பெண்ணின் தகப்பனார் துப்பறியும் பணியை சார்லசிடம் ஒப்படைக்கிறார். அவரது தில்லான முயற்சிகள் இறுதியில் புற்று நோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் பக்க விளைவாக சிலந்தியாக உருமாறும் சக்தி கொண்ட பெண்ணிடம் முடிகிறது! அவள் அவ்வப்போது கோடீஸ்வரர்களை திருமணம் செய்வதும் போட்டுத் தள்ளி விட்டு காணாமல் போவதும் தொடர்ந்ததும் அதே போன்ற சம்பவங்கள் எங்காவது உருப் பெறுகிறதா என்பதை சார்லஸ் ஆராய்ந்து அங்கிருக்கும் கோடீஸ்வரரின் விதவையை சந்தேகித்து கை ரேகையை எடுத்து சோதித்து பார்த்து அதே பெண்தான் ஆனால் வெவ்வேறு வடிவம் எடுக்கிறார் என்பதை புரிந்து கொண்டு நேரடி நடவடிக்கையாக அதிரடியாக உள்ளே நுழைந்து உண்மையை வெளிக் கொணர முயல்கிறார் சார்லஸ்! அதன் பின் தொடரும் பரபரப்பூட்டும் சம்பவங்களை படித்து மகிழுங்கள்!












அறிவியல் உண்மை _ப்ளாக் விடோ சிலந்தி வகை தன் ஆண் இணையினுடன் இணைந்து இனப்பெருக்கம் காரணமாக உடலுறவு கொண்ட சில மணித் துளிகளில் ஆண் இணையை கொன்று தின்று விடும்! இது மிகத் தெளிவான அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மையாகும். அதன் விஷமும் கொடூரமான தன்மை கொண்டது!  

ஏஜன்ட் பூஜ்யம் அவ்வளவாக சிரிக்க வைக்கவில்லை என்பதால் இன்னும் பதிப்பு காணாமல் உள்ளார் தமிழில்! 

பூத வேட்டைக்கு முன்னரே விளம்பரம் செய்துள்ள கதை!

திருவண்ணாமலை நண்பர் ஜெய் சங்கரின் திறமைக்கோர் சான்று!




ஜட்ஜ் dred சிறு சிறு கதைகளில் அவ்வளவாக ரசிக்க முடியாமல் உள்ளார்! விரைவில் முழு நீள கதையில் ஜொலிப்பார் என நம்புவோம்! சமீபத்தில் சினிமாவாக வந்தது!

அடுத்தது இவரை எப்போ வெளியிடறீங்க என்கிற கும்மி ஸ்டார்ட் பண்ண தயாரா? நண்பர்களே?

வருவாரா? இவர் வருவாரா?


இந்தக் கதையும் மிக சிறப்பான வெற்றியை ஈட்டிய கதையாகும்!





ரத்தக் கரம் என்கிற ரிப் கிர்பி கதையில் முதலில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு பின்னர் கண்டு கொள்ளப் படாமல் இப்போது உயிர் பெற்று மலர்கிறது! காமிக்ஸ்களுக்கு அழிவில்லை! இதுவரை வெளியான பட்டியலை நண்பர்கள் திரு ஸ்டாலின் மற்றும் பலர் சேர்ந்து தயாரித்து உள்ளனர்! அவர்களது சீரிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!


டைலான் டாக் தமிழில் படித்துப் பார்த்தீர்களா?http://www.4shared.com/file/9nbv-U_5/dylan_dog__-_johnny_freak__200.html எனக்கு ஜானி ப்ரீக் மிக பிடித்து விட்டான்! அவனுக்கு நேர்ந்த கொடுமை மறக்கவியலா பாதிப்பை ஏற்படுத்தியது! அப்புறம்? அப்புறமே! விடை கொடுங்கள்! 

வியாழன், 16 மே, 2013

உழைக்கும் பெண்களுக்கு - நாட்டின் கண்களுக்கு!!!

வணக்கங்கள்!
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்கிற அருமையான வைர வரிகளுக்கு சொந்தங்களே!  தங்கள் பணிகள் எவை என்றாலும் இந்த அடிப்படை சட்டங்கள் தங்களுக்கு மிக அதிகமான பாதுகாப்பை நல்குவனவாக அமைகின்றன! "தோழி " இதழில் தென்பட்ட மிக முக்கியமான இவ் விஷயம் தங்கள் அனைவருக்கும் உதவக் கூடிய ஒன்றாக அமைந்து இருப்பதாக என் மனதிற்கு பட்டதால் தங்களுக்கு இந்த பக்கங்களின் ஸ்கேன் இங்கே வழங்கி இருக்கிறேன் தோழிகளே! தங்களுக்கு எவ்விதத்திலாவது இத்தகவல்கள் பயனுள்ளவையாக அமைந்து இருப்பின் மகிழ்ச்சி! பாராட்டுக்கள்  தோழி இதழுக்கு!!

மகப் பேறு  நல சட்டம் 



நன்றிகள் சாஹா! 

செவ்வாய், 14 மே, 2013

கண்ணே! மணியே! கண்மணி காமிக்ஸ் படிக்க ஆசையா???

வணக்கம் நட்பே! எப்படி இருக்கீங்க? அன்னையர் தினம் அன்று அம்மாவுக்கு என்ன எடுத்து கொடுத்திங்க? என்னதான் நாம அன்பளிப்பை நீட்டினாலும் அம்மாவுக்கு நம்ம அன்பும் அக்கறையுமே மிக அவசியம் என்பதை மனதில் வச்சுக்குங்களேன்? அப்புறம்? நம்ம கண்மணி காமிக்ஸ் ஒன்று நண்பர் முதலை பட்டாளம் - ப்ரூனோ அவர்கள் அன்பளித்தார். அதில் இருந்து சில பக்கங்கள் தங்களின் கண்மணிகளுக்கும், உங்களுக்கும்,
ஆசிரியர் பக்கம்!













































இதில் பாம்புப் பாடகி என்ற பெயரில் ராணி காமிக்ஸ் வெளியீடு சுருக்கமான கதையாக வெளியிடப்பட்டு உள்ளது.  மீண்டும் அவர்கள் காமிக்ஸ் வெளியிடும் பட்சத்தில் தங்கள் ஆதரவு மிக மிக மிக அவசியம் என்கிற கோரிக்கையுடன் விடை பெறுகிறேன்! நன்றி வணக்கம்!

ஒற்றை ஓவியம் ஒன்பது கோடி!!!_ ஓவியர் + காவலர்_ ராபர்ட் ரைமன்_குறிப்புகள்.

  வணக்கம் தோழமை உள்ளங்களே.. சன் செய்தி ஒரு வினோத சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது..  அதெப்படி ஒரு வெள்ளை ஓவியத்துக்கு ஒன்பது கோடி  அந்த அ...