திங்கள், 3 ஜூன், 2013

உழைப்பே உனக்காக!



அருள் பா

அன்பே தேவன்!
அவர் அருளே வேதம்!
அதனை இம் மாபெரும் பூவுலகோர் உணர வேண்டும்!
சாதிகள் பலவென்று பிரித்தது இறைவனல்ல!
சார்தலில் துவங்கும் சாதிகளால் பயனில்லை!
ஆண், பெண் சாதி ரெண்டு என்று நம் ஆண்டவன் கூறினாரே!
அவருக்கே நாம் அல்லா, இயேசு, புத்தர், சிவன், விஷ்ணு அதுமட்டுமா பல்வேறு சாதிகளைக் கொண்டாடுகிறோம்!
அவர் நொந்துபோக!
இனியாவது இவ்வியந்திரவுலகில் உண்மையான இறைவனான ஒரே இறைவனை அனைவரும் உணர்ந்து போற்றுவோம், உண்மையைத் தேடி அவர் உள்ளம் மகிழ!
_ஜானி 27.12.1998

முக்கிய பொன் மொழிகள்!
காரியத்தில் உறுதியாயிருத்தலே வெற்றியின் ரகசியம்!

வணக்கங்கள் அன்பு உள்ளங்களே! வருகைக்கு வந்தனங்கள்!
ஊர்ல இருந்தப்போ சும்மா இருக்க யார்தான் விரும்புவார்கள்! அதிலும் இப்போ ஊர்ல எல்லாரும் சம்பாதிக்கும் எண்ணத்தில் ஓடிகிட்டு இருக்காங்க! எங்க ஊர்ல நிறைய மாற்றங்கள்! வளர்ச்சிகள்! ஆனா அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் காந்தி தாத்தா சாலையில் சிலையாய் சிரித்துக்கொண்டே இருக்கிறார். நண்பர்களுக்கு கட்சிகளெல்லாம் தெரியாது. சும்மா ஒரு மேடை கிடைச்சா நாங்கல்லாம் சும்மா விடுவோமா? பூந்து விளையாடிட்டோம். அந்த குறிப்புகளை ரொம்பக் காலமா பாதுகாத்து வெச்சி இருந்தேன்! படிங்க! ஹாப்பியா இருங்க! வணக்கமுங்க!

 பட்டி மன்றமும் வேட்டி கட்டி கண்ணாடி போட்டு பொளந்து கட்டினேன். நாடகமும் எழுதினேன். நடிப்புக்கு சபாரி போட்டு கலக்கினேன். என்ன கொடுமைன்னா அன்னிக்கு பார்த்து எங்க ஊரு போட்டோகாரர் ஒரு கல்யாண வீட்டுக்கு படமெடுக்க சென்று விட்டார். அப்போ எல்லாம் எங்க செல் போன் ? அதனால அருமையான ஒரு வாய்ப்பினை இழந்து விட்டோம்!








இந்த எழுத்து பிழைகளுக்கு சொந்தக்காரர் திருவாளர் தட்சிணாமூர்த்தி இப்போ எங்கிருந்தாலும் வந்து உதையை பெற்றுக் கொண்டு செல்லும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்ளப் படுகிறார். நான் ஒழுங்கா எழுதிக் கொடுத்ததை இப்படி கொலை செய்தாலும் அண்ணன் கை எழுத்து அருமையாக இருக்கு இல்லையா? இப்போ டெய்லரா திருப்பூர் பக்கமாதான் வசிக்கிறார். அப்புறம்? அப்புறமே! அடுத்த ஆப்புடன் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்! நன்றிங்க! 

3 கருத்துகள்:

  1. அருமை நண்பரே

    திரைகதை வசனகர்த்தா ... உங்களின் இன்னொரு முகம் :)


    இன்னும் எத்தனை முகங்களை எங்களுக்கு தெரியாம வைத்து உள்ளீரோ ?

    கலக்குங்க ...

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா நல்வரவு நண்பரே! இன்னும் சில நாடகங்களை சர்ச் வாசலில் போட்டோம்! அவற்றின் கதை கைபிரதி தொலைந்து விட்டது! நாயகனின் அப்பாவாக வேடம் ஏற்று இருந்தேன்!

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா நல்வரவு நண்பரே! இன்னும் சில நாடகங்களை சர்ச் வாசலில் போட்டோம்! அவற்றின் கதை கைபிரதி தொலைந்து விட்டது! நாயகனின் அப்பாவாக வேடம் ஏற்று இருந்தேன்!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...