ஞாயிறு, 24 நவம்பர், 2019

பெண்...பேய்...பாதிரி.._காமிக்ஸ் பிடிஎப் டைம்ஸ்


FIRST ON FACEBOOK & WHATSAPP
*தனிமையில் அமர்ந்து படிக்க முடியாத திகில் நாவல் ரா கி ரங்கராஜனின் கைவண்ணத்தில்*
*பேய் பெண் பாதிரி*
*மொத்த உலகத்தையும் உலுக்கி எடுத்த எக்ஸார்சிஸ்ட் திகில் திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்*
அழகிய பதினோரு வயது சிறுமி ரெஜினா. புகழ்பெற்ற சினிமா நடிகையான அவள் தாய் கிறிஸ்டி. அவர்கள் குடியிருக்கும் அமைதியான கம்பீரமான தனிமை பங்களா...
என்றோ ஒரு நாள் யாருமே அறியாமல் அந்த பங்களாவில் ஒரு  அதிபயங்கரமான நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின் ரெஜினாவின் அறையிலிருந்து வரும் வினோத சத்தங்கள் அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் கிறிஸ்டியை கலவரப் படுத்த டாக்டர்களின் உதவியை நாடும் அவளது முயற்சிகள் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய சூழ்நிலை. திகிலூட்டும் பல மர்ம நிகழ்வுகள் அவளை பாதிரியார்களை நாடச் செய்கிறது.
வீஜா போர்டில் இருந்து வந்திருக்கும் இனம் காணமுடியாத ஒரு அமானுஷ்ய பிசாசு ரெஜினாவை பிடித்து இருப்பதை அறிந்து கொள்ளும் பாதிரியார்கள் க்ராஸ் மற்றும் மெர்ரின் அதை அழிக்க பாடுபடுகிறார்கள். அந்த அமானுஷ்ய பிசாசோ இன்னும் உக்கிரமாகி பயங்கரமான திகிலூட்டும் நிகழ்வுகளை அந்த பங்களாவில் நடத்துகிறது.
ஆரம்பித்தால் முடிவு வரை  படிக்காமல் கீழே வைக்க முடியாத அளவு திகிலாகவும் திரில்லாகவும் செல்லக்கூடிய இந்தக் கதையின் சரித்திரம் மிகப் பிரபலமானது. 1980 ஆம் ஆண்டு எக்ஸார்ஸிஸ்ட் என்ற பெயரில் திரைப்படமாக வந்த இந்தக்கதை அதன்பின் பலமுறை அதே பெயரில் மறுபடியும் தயாரிக்கப்படும் அளவு பெருமை பெற்றது. வெளிவந்த காலத்தில் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த இந்தத் திகில் திரைப்படம் அப்பொழுதே ரா கி ரங்கராஜன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு குமுதத்தில் வெளிவந்து அதன் பின் நாவலாகவும் ஆக்கப்பட்டது. தனியாக அமர்ந்து முழு படத்தையும் பார்க்க தயாரா என்ற சவாலுடன் வெளிவந்த இந்தத் திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் இன்று பிடிஎஃப் ஆக உங்களுக்கு
http://bit.ly/2qHAfvH
*தனிமையில் அமர்ந்து படிக்க முடியாத திகில் நாவல் ரா கி ரங்கராஜனின் கைவண்ணத்தில்*
*பேய் பெண் பாதிரி*
*மொத்த உலகத்தையும் உலுக்கி எடுத்த எக்ஸார்சிஸ்ட் திகில் திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

The Road Graphic Novel_intro அறிமுகம் மற்றும் கதைச்சுருக்கம்..

 வணக்கம் நண்பர்களே..  இது குருத்தோலை ஞாயிறு. இயேசு கிறிஸ்து தன் பாடுகளுக்கு முன்பு எருசலேம் மாநகரில் கோவேறு கழுதையின் மீது வந்து இறங்கும் தி...