வியாழன், 28 நவம்பர், 2019

டக்..டக்..இது கொல்லும் நேரம்.._வினாடி கதைகள்_ஜானி சின்னப்பன்

அந்த ரோபோக்கள் சிக்னல் காட்டிய திசையில் தடதடத்தன.. இலக்கு அவனை லேசரால் அழித்து பஸ்பமாக்குதல்.. ஓடினான்..தொடர்ந்து துரத்தின.. அவற்றின் லேசர் கதிர் வீச்சின் எல்லைக்கே எட்டாதபடி போக்குக் காட்டிக் கொண்டே சென்றான்.
துரத்தல் நீரிலும் நிலத்திலும் தொடர்ந்தது.. தாக்குப்பிடித்து ஓடிக் கொண்டேயிருந்தான்.. பேட்டரி காலியானதால் ஒரு சில ரோபோக்கள் ஸ்தம்பிக்க மற்றவை விரட்டின.. ஓடியவன் சற்றே பதுங்கி ஆசுவாசப்படுத்திக் கொண்டான். நீரோ நிலமோ கவலையே இல்லாது விரட்டும் விசித்திரன்களை எப்படி மண்ணைக் கவ்வ வைப்பது..? திடீரென மூளைப் படல நியூரான்களில் பல்பு பளிச்சிட... அந்த அடர்ந்த சதுப்பு நில கானகத்தில் புகுந்து கொடிகளைப் பற்றித் தாவினான்.. துரத்திய ரோபோக்கள் சதுப்பில் யோசிக்காது காலை வைத்து நகர்ந்தன.. காத்திருந்தது அந்த புதைகுழி..

6 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...