புதன், 27 நவம்பர், 2019

தப்பேயில்லைங்க சாமீ...வினாடிக்கதை_ஜானி சின்னப்பன்

அந்த மைதானத்தில் கூட்டம் ஏகத்துக்கு குவிந்தது..மேடையில் மலர்ந்த சுவாமிஜி ஸ்ட்ராங் பீரானந்தா சொற்பொழிவைத் துவக்கினார்..நேரம்போகப்போக கூட்டம் நெருக்கியடித்தது.. இதுவே தக்க தருணம் என சீடர்களுக்கு சைகை காட்ட பக்தர்களை சுற்றிலும் உண்டியல்களோடு சூழ்ந்தனர்..என்னவோ ஜாலியன்வாலாபாக்கில் இந்தியர்களை அரணாக சுற்றி வளைத்த ஆங்கிலேயர்கள் போல.. பீரானந்தாவின் பிரசங்கம் உச்சநிலை எய்தியது..
ததும்.. ததும்.. தும்.. ததும்..என நான்கு திசைக்கும் இசை வாத்தியங்களின் முழக்கம் எதிரொலி சிதறியது.. அப்படியே தாண்டவத்துக்கு தயாரான பீரானந்தா தன் ஆலால கண்ட நடன ஸ்டெப்புகளை உடலை வளைத்தும் நெளித்தும் போடவும் கூட்டமும் சேர்ந்து ஆடத் தொடங்கியது..
தப்பேயில்லை..
பிரபஞ்சத்தில் எதுவுமே தப்பேயில்லை..
ஆடுங்கள், நடனமாடுங்கள், கொண்டாடுங்கள்..குதூகலமடையுங்கள்..தப்பேயில்லை..பிரபஞ்சத்தில் எதுவுமே தப்பேயில்லை... மேலே மேலே  மூளைச்சலவை தொடர்ந்தது..இறுதியில் மேட்டருக்கு வந்தார் ஸ்ட்ராங் பீரானந்தா
 எனக்கு நீங்கள் வழங்கும் காணிக்கை அந்த இறைவனுக்கே டைரக்டாக கூகிள் பே செலுத்தியதுபோல.. உங்களிடமுள்ள அத்தனை செல்வமும் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் கொண்டு வரும்..அதை புனிதப்படுத்திக் கொள்ள தாராளமாக காணிக்கை போடுங்கள் பல மடங்காக திரும்பி வரும் என அவ்வப்போது பிட்டைப் போடத் தவறவேயில்லை ஸ்ட்ராங் பீரானந்தா.. பக்தர்களும்  காணிக்கைகளை அள்ளி அள்ளி  அளித்தனர்..கூட்டம் முடிந்தது.. கல்லடிபட்ட காக்கைக் கூட்டமாய் வாகனத்திலேறிப் பறந்தனர் பரவசத்தோடு பக்தர்கள்.. ஒற்றை நபர் மாத்திரம் மைதானத்தில் தியான கோலத்தில்..சீடர்கள் காணிக்கைகளை குவித்து மூட்டை கட்டத் தொடங்க பெருமிதத்தோடு நோக்கிக் கொண்டிருந்த பீரானந்தா மறுநொடியே பேந்தப் பேந்த விழிக்க நேரிட்டது.. ஒற்றை நபரின் கையில் அந்த கருப்பு நிற எமன் முளைத்திருந்தது.. மேக்னம் ரக பிஸ்டல் நான் சைலன்ட் கில்லராக்கும் என சைலன்ஸரோடு முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க மொத்த மூட்டைகளையும் வேனில் ஏற்றி வைத்த சீடப்பிள்ளைகள் சைலண்டாக ஒதுங்கிக் கொள்ள பீரானந்தானின் பயப்பிராந்தி குறைய நெற்றிப் பொட்டிலிருந்த பிஸ்டலை அகற்றிவிட்டு இருக்கை சீட்டில் யோகி அமர்ந்து கொண்டே சொன்னான் நீ மக்களை கொள்ளையடித்தாய் நான் உன்னை..நன்றாகத்தான் சொன்னாய்.."தப்பேயில்லை..பிரபஞ்சத்தில் எதுவுமே தப்பேயில்லை.."வரவா...விர்ர்ர்....மறுநொடி அங்கே அவன் போன தடத்தில் வாகனப் புகை மாத்திரமே...

2 கருத்துகள்:

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...