ஞாயிறு, 1 நவம்பர், 2020

யகாரியும் அதிசய கழுகும்



*யகாரியும் அதிசய கழுகும்*

*சரவெடி பட்டாஸாய் படபடக்கும் கலக்கல் காமெடி மொழிமாற்ற படக்கதை pdf*

இந்த காமிக்ஸ் பற்றிய நண்பர் திரு . கிரிதரனின் விமர்சனமே இங்கு அறிமுக உரையாக

நண்பர்களே, 100 அலிபாபாவும் 4000 திருடர்களும் காமிக்ஸ் மாதிரி அட்டகாசமான செம்ம ஜாலியான ஒரு காமிக்ஸ் படிக்க வேண்டுமா? கண்டிப்பாக இந்த அற்புதமான, யகாரியும் அதிசய கழுகும் காமிக்ஸ் படிக்கலாம். ஒவ்வொரு வரிக்கும் சிரித்துக் கொண்டே ஜாலியாக அனுபவிக்கலாம்.

    குட்டி பையன் யகாரியின் ஜாலியான சாகச அட்வென்சர் தான் கதைக்களம்.அவன் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் விதவிதமானவை. சக்திமிக்க அதிசய கழுகு, குட்டி புயல் குதிரை, கடுப்பாகி கலாய்க்கும் வாத்து இதற்கு நடுவே சிங்கம், நரி, கரடி என அனைத்தும் உண்டு.

   அலிபாபா கதை போலவே இந்த கதையின் ஹீரோவும் அட்டகாசமாக, நம்மை வெடித்து சிரிக்க வைக்கும் வசனங்களை எழுதியிருக்கும் நம் திரு.அலெக்சாண்டர் வாஸ் sir தான். ஒவ்வொரு வசனமும் டாப் தான்.

   "மனுஷனுக்கு பொறந்த எருமையா இருப்பானோ, டிரஸ்ஸ கூட கலட்டாம தண்ணில குதிக்குறானே பேமானி", "முகத்த விட மூக்கு பெரிசா இருக்கு", " பனங்குருத்து கூலும் ஜெல்லி மீன் கருவாடும் பரிசாம்", " யாருடா அந்த இறகு முளச்ச எருமமாடு" , " கிள்ளுறதுக்கு சதை இல்லாதவனெல்லாம் துள்ளுற குதிரையை அடக்கப் பாக்குறான்", "பனம்பழத்தை கரடி நக்குன மாதிரி... எவன்டா அது", என்று ஒவ்வொரு வசனமும் அட்டகாசம்.

    கடைசியா ஒரு கவிதை... "வீணாக சுத்துன நீ காணாம போனது சோதனை! ஆள்விழுங்கி  மலையில அனாதையா மாட்டுனது வேதனை!! ஆனால் இப்போ குட்டிபுயல் குதிரையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்க பாத்தியா.. இது சாதனைய்யா!!!" இன்னும் இந்த மாதிரி கதைகளை நிறைய எதிர்பார்க்கிறோம் Sir..

   படித்து பாருங்கள் நண்பர்களே, இந்த குட்டி புயலையும் குட்டி பயலையும் எப்போதுமே மறக்க மாட்டீர்கள்.

.... இது போதுமே டவுண்லோட் செய்யுங்கள் .. படித்து மகிழுங்கள் .. கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவிடுங்கள்

https://bit.ly/3jICPqH

*யகாரியும் அதிசய கழுகும்*

*சரவெடி பட்டாஸாய் படபடக்கும் கலக்கல் காமெடி மொழிமாற்ற படக்கதை pdf*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...