செவ்வாய், 19 டிசம்பர், 2017

003-உயிரைத்தேடி....


இனிய காலை வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
நல்ல நண்பர்கள் அமைவது என்பது இறைவன் கொடுத்த வரம். எனக்கு நல்ல நண்பர்கள் அமைந்ததால்தான் இந்த சித்திர வழிப்பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. யாரென முகம் தெரியாத தொலைவில் இருந்தாலும் நம் மீது பாசம் வைத்து நமக்காக எத்தனையோ உதவிகள் செய்த நண்பர்களையும் தேடி வந்து அள்ளிக் கொடுத்து எதையுமே எதிர்பார்க்காத நண்பர்களையும் இந்த வாழ்க்கை எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட நண்பர்களை நினைவில் நிறுத்தும் வண்ணமாகவே இந்த உயிரைத்தேடியில் ஆங்காங்கே வாசகர் சிலர் பெயர்கள் இடம்பெறும். அவர்கள்தான் நான் இத்தனை தொலைவு நகர்ந்ததற்குப் பின்னணியில் எரிபொருளாக இருந்தவர்கள். அவர்களை இப்படி ஒரு அட்டகாசமான காலாகாலத்துக்கும் பேசுபொருளாக இருக்கும் ஒரு தொடரில் குறிப்பிடுவது என்பது என் விருப்பம். அவர்களாக என் பெயரைப் பயன்படுத்தாதீர்கள் என்று விலகினால் நானே பெயர்களை விலக்குவேன். கவலை வேண்டாம். அமைதியாக வந்து வாசித்து விட்டு அப்படியே திரும்பி விடும் வர்க்கத்துக்கு இடையில் தானும் முன்வந்து ரிஸ்க் எடுத்து தங்களது அரிய சேமிப்புகளை என்னோடு பகிர்ந்து கொண்ட அந்த நல்ல உள்ளங்களை நினைவு கொள்வது என் கடமை.. 
   காலாகாலத்துக்கும் நினைவு கூறத்தக்கதாக இந்தக் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவன் பெயரை "பிங்கி" என நம்ம தினமலர் எளிமைப்படுத்தி வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இந்தப் பொடியன் பெயர் மார்க் டேவிஸ்... 


அவனுடைய ஒரே இலட்சியம் உயிர்வாழ்தல். அந்த இலட்சியத்தில் தன்னைப் போன்ற அரிய இரத்த வகை படைத்தவர்கள் எங்காவது உயிருடன் இருக்கிறார்களா என்பதைத் தேடிக் கொண்டு கிளம்புகிறான். அந்தப் பயணம்தான் எத்தனை கடினமானதொன்று.. அவன் சக மனிதர்களை சந்தித்தானா? என்பதை கொள்ளை நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளினூடே   மண்டிக்கிடக்கும் ஒரு திகிலுடன் நாமும் தொடர்வோம் வாருங்கள்...





சக வலைப்பூ பதிவர்கள் பட்டியல்... அவ்வப்போது இங்கே சென்று முக்கியமான தகவல்களை அள்ளிக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

http://www.bladepedia.com/

http://mayavisiva.blogspot.in/

http://tamilcomicskadanthapaathai.blogspot.in/

http://soundarss.blogspot.in/

http://tamilcomicseries.blogspot.in/

https://prasanthmarley.blogspot.in/

http://kanuvukalinkathalan.blogspot.in/

நட்பில் இணைத்துக் கொள்ள:
திரு.ஸ்ரீராம் லக்ஷ்மணன்
https://www.facebook.com/shriram.lakshmanan
நண்பர் தொழில்நுட்ப பூங்காவில் பணியாற்றி வருகிறார்.

திரு.நாகராஜ் சாந்தன்
https://www.facebook.com/nagarajansanthan?ref=br_rs
நண்பர் சிறந்த ம்யூச்சுவல் பண்ட் அட்வைசரும் கூட..

திரு.விஜயராகவன்..(சேலம் டெக்ஸ் விஜி)
https://www.facebook.com/vijayaragavan.salem.3

நண்பர் சேலம் மாவட்ட டெக்ஸ் இரசிகர் மன்றத்தலைவர்..

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்
ஜானி சின்னப்பன்.

7 கருத்துகள்:

  1. 003 வந்தாச்சி..! ஹேய்..!!

    ஆங்...மீ த பஸ்ட்டுங்கிறேன்..ஹீ..ஹீ..:)))))

    பதிலளிநீக்கு
  2. சிறு வயதில் என் தந்தை எனக்கு வாசிக்க வாங்கி தந்த புத்தகங்கள் ஏராளம்...

    அதில் முதன்மையானது இந்த
    " உயிரை தேடி " தொடர் என்றால் அது மிகையல்ல..

    ஒரு பழைய புத்தகம் வாசிப்பென்பது காலபயணத்தில் பின்னோக்கி செல்வதற்கு சமம்...

    அத்தகைய பயணத்திற்க்கு என்னை ( நம்மை) அழைத்து செல்ல ஒத்துழைத்த அலெக்சாண்டர் அவர்களுக்கும் சொக்கலிங்கம் அவர்களுக்கும் அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களுக்கும்
    ஈரோடு சதீஷ் அவர்களுக்கும்
    இந்த கதையின் அத்தியாயங்களை நிறைவு செய்ய உதவ காத்திருக்கும் இன்னும் முகம் தெரியாத நண்பர்கள் அனைவருக்கும்

    இந்த தொடரை
    ஒருங்கிணைத்து
    முழுமையாக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் ஜான் சைமன் அவர்களையும்
    நெஞ்சார்ந்த நன்றியோடு
    மனதார பாராட்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  3. 004 ம் பதிவு லிங்க் கொடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொத்தமும் டெலிகிராமில் கிடைக்கிறது சகோதரரே.. தேடி எடுத்து வாசித்து மகிழ்க.

      நீக்கு
    2. kindly give telegram number

      நீக்கு

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...