வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

010-12-உயிரைத்தேடி..

சக காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கு வணக்கம்...அபூர்வமான ஒரு படைப்பினை ஆச்சரியமூட்டும் விதத்தில் வண்ணமூட்டி அந்த காலத்திலேயே தொடர் வடிவில் கோரமான உருவங்கள் என்றாலும் அவற்றின் வீர ஈரங்களையும் போகிறபோக்கில் பதிவு செய்து வித்தியாசமான இந்த கதையை பதிப்பித்த தினமலர் நாளிதழ் என்றென்றும் போற்றிப் பாராட்டத்தக்க சூப்பர் நாளிதழாகும்... கன்னித் தீவினை கட்டிப் புரண்டு கொண்டிருந்த நமது மற்றும் மூத்த தலைமுறையை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்த தொடர் என்பதில் ஐயமேது?!? சிறுவனாகிய நானும் ஆவென வாயைப் பிளந்து கொண்டே என் பாட்டனார் திரு.அமிர்தன் த/பெ இஞ்ஞாசி முத்து காவல்துறை அவர்கள் வாங்கிக் கொடுக்கும் பன்னை டீயில் நனைத்து விழுங்கிக் கொண்டே வாசித்து மகிழ்ந்தேன்.. இன்று அந்த நிழல் நிஜமாகும் தருணங்களின் விளிம்பில் நிற்கும் நாமும் கொண்டாடுகிறோமா என்பதை உங்கள் கருத்துக்களை பதிவு செய்தால்தானே தெரிந்து கொள்ள முடியும்?!?! சைலன்ட் வாட்சர்ங்க நானு என்று அறிமுகம் செய்து கொள்வோரிடத்திலெல்லாம் நான் புரிந்து கொள்வது ஒரு பாதுகாப்பான வட்டத்திற்குள் தாமிருக்கிறோம் என்கிற மனநிலையையே.. உஷாராக இருக்க வேண்டிய இடத்தில் உஷாராக இருப்பதும் கொண்டாட்டங்களில் அளவுடன் பங்கேற்பதும் என்கிற பாடத்தை இன்னும் அவர்கள் கற்கவில்லை அல்லது கற்க விரும்பவில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன்.. அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதை எவர்கிரீன்  நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் பாணியில் கூற விழைகிறேன்.. தம்பிகளா..ரிஸ்க் எடுத்தாத்தான் ரஸ்க் சாப்பிட முடியும்...
மற்றவை மற்றவையே... என்றும் அதே அன்புடன்...உங்கள் ப்ரியமிகு நண்பன் ஜானி சின்னப்பன்..






1988 என் வாழ்வின் ஒரு விழா....




நடுவே திரு.அமிர்தன் தாத்தா

















3 கருத்துகள்:

  1. ஜானி சார் உயிரை தேடி, மகாபாரதம் என்று கலக்கி கொண்டு உள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையில் 1988 ல் நடந்த சிறப்பான் ஒரு விழாவின் போட்டோக்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  2. உயிரை தேடி பார்ட் 10ல் முதல் பக்கம் இல்லையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
      இல்லாத பக்கங்களை இட்டு நிரப்ப நண்பர்கள் தயாராகிக் கொண்டுள்ளனர் சார்.

      நீக்கு

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...