வியாழன், 2 ஆகஸ்ட், 2018

திரு.K.V.கணேஷ் அவர்களின் அதிரடிப் புலனாய்வு

புதிய விசாரணை
நண்பர்களுக்கு வணக்கம்

மறுபடியும் முதலில் இருந்தா???  என்று
பயப்படவேண்டாம். இது இரத்தபடலம்
மற்றும் புலன்விசாரணை இரண்டையும்
இணைத்து மேற்கொண்ட காலத்தின்
உத்தேசக்கணிப்பு மட்டுமே.இது எனது
தனிப்பட்டகருத்து அனுமானம் மற்றும்
ஆராய்ச்சி.
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
இந்தக்கட்டுரையை ( ஆமாம் கட்டுரைதான்)
எழுதக்காரணம் அன்புத்தம்பி இலங்கை
DR.பிரசன்னாவின் அதீதமான XIIIன் மேல்
கொண்ட காதலே.உடன் தம்பி பழனியும்
ஒரு காரணம்.
மேலும் இதற்கு உதவியாக இருந்ததெல்லாம்
பிரசன்னா அனுப்பிய ஆங்கில புலன் விசாரணை புத்தகமே.
முதலில் நம் கதாநாயகன் குண்டு காயத்துடன்
கண்டெடுக்கப்பட்ட நாள் முதல் கடந்து வந்த
காலத்தை கணிப்போமா?
( குறிப்பு எல்லாம் எனது கற்பனை கணிப்புகளே)
ஷான் மல்வே & கார்லா தம்பதிக்கு 1961 ம்
ஆண்டு திருமணம் நடைபெற்று அதே 1961ல்
நிறைமாத கர்பத்தின்போது  உடன்பிறந்த
சகோதரன் ஜியார்டினோவால் துப்பாக்கியால்
சுடப்பட்டு ( நம்ம ஆளு பிறக்கும்போதே
துப்பாக்கியும் குண்டும் சம்பந்தப்பட்டுவிடுகிறது. ) ஜேஸன்
பிறக்கிறான். கார்லா இறந்த வருடமாகவும்
ஜேஸன் பிறந்த வருடமாகவும் 1961 குறிப்பில்
காணப்படுகிறது. இந்த கணக்கில் பார்த்தால்
நம் ஜேஸனுக்கு இப்போது 57 வயதாகிறது.
1961 ல் பிறந்த ஜேஸன் கிரீன்ஃபால்ஸ்
வந்த போது 3 வயது வருடம் 1964 .வளர்ப்பு
தந்தை ஜோனதன் கொலை செய்யப்படும்
போது ஜேஸனின் வயது 11. வருடம் 1972
ஆக இருக்கும். போல்டர் யுனிவர்சிடியில்
சேரும்போது 18 வயது. வருடம்1979. ஐந்து ஆண்டு கால படிப்பை முடித்த போது  வயது
23.வருடம்1984.பிறகு கெல்லி ப்ரையன்
என்ற நண்பனின்பெயருடன் மற்றும் அடையாளங்களுடன் க்யூபா செல்கிறார்
நம் ஜேஸன். கல்லூரியில் இருந்து தலை
மறைவாகி 6 ஆண்டுகள் க்யூபாவில்
கொரில்லா போர்கலையை கற்று பிறகு
கோஸ்டாவெர்டியின் விடுதலைக்காக
ஸ்டன்ட்மேன் என்ற பெயருடன் போராடி
பெரால்டாவால் கைது செய்யப்பட்டபோது
வயது 29.வருடம்1990. இந்த சமயத்தில்தான்
வில்லியம் ஷெரிடன்  ஸ்டீவ்ராலண்டினால்
சுட்டுக்கொல்லப்படுகிறார்.கொலையாளி
ராலண்டும் பிறகு மங்கூஸால் சுடப்பட்டு
மனைவி கிம்மின் வீட்டில் இறக்கிறான்.
ஜேஸனின் வளர்ப்பு தந்தை ஜொனாதன்
ப்ளை படுகொலை செய்யப்பட்ட தினம்
ஆகஸ்ட் 3 என்று குறிப்பில் உள்ளது.
ஆண்டு 1972 என்று கணக்கில் எடுத்துக்கொண்டு நாம் மேலே செல்லலாம்.
ஜேஸன் க்ரீன் ஃ பால்ஸ்ஸீக்கு வந்து
ரிக்பியிடம் விசாரணை செய்யும்போது
கொலை நடந்து
19 - 1/2 வருடங்கள் என்று கூறுவார்.
அப்படியானால் அந்த நாள் உத்தேசமாக
பிப்ரவரி 1992 ஆக இருக்கும்.
இனி நாம்  ஜேஸன் குண்டடி பட்டு மீண்டும்
உயிர் பிழைத்த நாளில் இருந்து தொடங்குவோம்.மார்த்தாவினால் காப்பாற்றப்பட்டு குணமடைந்த ஜேஸன்
கடந்த இரண்டுமாத காலமாக தன்னை
அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை
என்று கூறுவார். இங்கிருந்து நாம்
நாட்களை கணக்கிட துவங்குவோம்.
எனது கணிப்பு ஜேஸன் சுடப்பட்டு
மீண்டு பின் க்ரீன் ஃபால்ஸில் ரிக்பி
தன் தந்தையை கொலைசெய்தது பற்றி
குற்றம் சாட்டும் வரையிலான காலம்
இரண்டு ஆண்டுகளாக இருக்கலாம்.
அதாவது முதல் பாகம் முதல் ஏழாம்
பாகம் வரையிலான காலகட்டம்
உத்தேசமாக இரண்டு ஆண்டுகள்.
1.
நம் ஜேஸன் மங்கூஸால் முதலில் சுடப்பட்ட
நாள் நவம்பர் 9 என்று குறிப்புகள் மூலம்
தெரியவருகிறது. இதனை விசாரிக்க
ஜேஸன் பாகம் 8 ல் ஜியார்டினோவிடம்
விசாரிப்பார்.
முதல் பாகத்தில் கர்னல் ஆமோஸால்
பிடிக்கப்பட்டு ஷெரிடன் கொலை செய்யப்பட்ட
திரைப்படத்தை காட்டும் போது ஆமோஸ்
கூறுவது 3மாதம் 17 நாட்களுக்கு முன்
எடுக்கப்பட்ட படம் என்று.
கிரீன் பால்ஸில் 7ம் பாகத்தில் ரிக்பியிடம்
ஜேஸன் தன் தந்தை ஜொனாதன் பிளை
கொல்லப்பட்டு இன்றோடு 19 1/2 வருடங்கள்
தான் ஆகிறது என்று குறிப்பிடுவார்.
இந்த தகவல்களின் அடிப்படையிலேயே
இந்த கட்டுரை எழுதப்பட்டது.
பாகம் 5 ல் அவசர நிலைக்கு பிறகு
வரும் விசாரணை விளக்கங்களில் ஷெரிடன்
கொல்லப்பட்டு 14 மாதங்கள் கழித்து
என்ற குறிப்பும் வரும்.
2.
   27 செப்டம்பர் 1990
இந்த நாளையே ஷெரிடன் சுட்டுக்கொல்லப்பட்ட நாளாகவும்
ஸ்டீவ் ராலண்ட் மங்கூசால் சுடப்பட்டு மனைவி
கிம்மின் மடியில் உயிரிழந்த நாளாகவும்
கணக்கீட்டை தொடங்கலாம்.
2 .
ஸ்டீவ் ராலண்ட் கொல்லப்பட்ட பிறகு
ஜெனரல் காரிங்டன் அட்மிரல் ஹெய்டெஜர்
பெரியவர் ஷெரிடன் மூவரும் ஸ்டீவின்
உருவத்தை போன்ற ஜேஸன் ப்ளையை
தேடிகண்டுபிடித்து அவரை பெரால்டாவின்
மரணப்பிடியிலிருந்து லஞ்சமாக மில்லியன்
டாலரை கொடுத்து மீட்டு வர மூன்று
தினங்களாவது தேவைப்பட்டு இருக்கும்.
செப்டம்பர் 30. 1990
3.
உடலமைப்பு ஒன்றாக இருந்தாலும்
முகத்தை லேசர் சிகிச்சை மற்றும்
ஸ்டீவின் நடை பாவனைகள் பழக்க
வழக்கங்கள் பயிற்ச்சிக்கு 38 நாட்கள்.
நவம்பர் 8. 1990
பிறகு ஹெய்டெஜரின் உத்தரவின் பேரில்
நேஷனல் டிரஸ்ட் பாங்கிலிருந்த ஸ்டீவின்
பணத்தை எடுக்கச்செல்லும் ஜேஸனின் உடன் சென்ற ராணுவ
 உதவியாளர்கள் மங்கூசால் கொல்லப்பட்டு
கடத்தப்பட்ட ஜேஸன்  ( வாலியிடம் காட்டிக்கொடுத்தது கிம் ராலண்ட்.
காரணம் தனக்கும் வாலிக்கும் பிறந்த
மகன் கோலின் வாலியால் கடத்தப்பட்ட நிர்பந்தம்.)
மங்கூசால் வாலியின் மனைவி ஜேனட்டின்
படகில் மேய்ன் என்ற நகர கடலில் தலையில்
சுடப்பட்டது நவம்பர் 9- 1990. காலையில்.
தலையில் பாய்ந்த குண்டுடன் கடலில்
வீழ்ந்த ஜேஸன் இறந்துவிட்டதாக மங்கூசால் கருதப்பட்டாலும்
அலைகளினால் தள்ளப்பட்டு மேய்ன் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள
ஆபோ மற்றும் ஷாலி வசித்துவரும்
பார்ஹார்பர் எனும்
கடற்கரையில் ஒதுங்கியது நவம்பர் 9-1990
மதியம்.
4 .
ஆபோ மற்றும் ஷாலி தம்பதியால் மீட்கப்பட்டு
மார்த்தாவினால் அறுவை சிகிச்சை பெற்று
ஜேஸன் குணமடைய இரண்டு மாதகாலம்
ஆகியது.நாள் ஜனவரி 10 - 1991.
மார்த்தாவுடன் கடற்கரைக்கு சென்று
திரும்பிய ஜேஸன் ஆபோவும் ஷாலியும்
படுகொலை செய்யப்பட்டு இருக்க தன் அடையாளத்தை தேடி கிம் ராலண்டுடன்
இணைந்து நிற்கும் புகைப்படத்தின்
பின்னால் இருந்த 600 Km தொலைவிலுள்ள ஈஸ்ட் டவுன் முகவரியை சென்றடைந்த
தினம் ஜனவரி 11 .
ஜனவரி 12 அரசு பதிவகத்தில் காணாமல்
போன நபர்களை தேடியது.
ஜனவரி 13 இரண்டாம் நாள் காலை
பதிவகத்தில் ஹெம்மிங்ஸ் விரித்த சூழ்ச்சி
வலையால் கிம்மின் படம் மற்றும் முகவரி
கிடைத்து பிறகு ஆமோசிடம் பிடிபட்டது
ஜனவரி  13-1991 ல். அப்போது
ஆமோஸ் கூறுவது ஷெரிடன் கொல்லப்பட்டு
3மாதம் 17 நாள் முன் எடுத்த படம் என்று.
கணக்கு சரியாகவருகிறதா.?
ஆமோசிடமிருந்து தப்பி  ஜனவரி  14 -1-91 மார்த்தாவை காண  மீண்டும் பார்ஹார்பர் வரும் ஜேஸன் மங்கூசால்
மார்த்தா கொல்லப்பட அங்கிருந்து தப்பி பின்
ஓடும் சரக்கு ரயிலில் ஏறியதும் 14-1-91.
பெயர்கள்.
1 . XIII
2. ஆலன் ஸ்மித்
3 . ஜாக் ஷெல்டன்
4. ஸ்டீவ் ராலண்ட்

5.சரக்கு ரயிலில்  பயணம் மேற்கொண்ட
ஜேஸன் மூன்று தினங்களுக்குப்பிறகு ரயில்
சென்றடைந்த அரிசோனா மாகாணத்தை
அடைந்தார். நாள் 17-1-91
பிறகு அங்கே உள்ள ஹூவால்பை ராணுவ
தளத்தில் ஸ்டீவ்ராலண்ட் பற்றி விசாரித்து
தளத்தில் அடைக்கப்பட்டது 18-1-91
காரிங்டன் மூலம் அந்த ஸ்டீவ்ராலண்டே அவர்தான், மற்றும் தனது குடும்பம், தந்தை
ஸவுத்பர்கில் இருப்பதாக அறிந்த ராலண்ட்
ஜோன்ஸ் மூலம் 19-1-91 அன்று வீடு
சேர்கிறார்.இரண்டு நாள் கழித்து 21-1-91
அன்று தந்தை மற்றும் சித்தப்பாவை
கொன்றதாக பழிசுமத்தப்பட்டு காரிங்டன்
உதவியால் ஹெலிக்காப்டரில் தப்பி
கிம்ராலண்டை தேடி கெல்லோனி ஏரியை
22-1-91 ல் அடைந்து பின் போலீசாரால்
கைது செய்யப்படுகிறார்.
கொலைவிசாரணை தீர்ப்பு 22-2-91
ப்ளைன்ராக் சிறையில் அடைக்கப்படுகிறார்.
6.
நரகத்தின் கண்ணீர்.
சிறையில் அடைக்கப்பட்டு குறைந்தது
நான்கு மாதமாவது கடந்திருக்கும்.
நாள் 22-6-91.
சிகிச்சையின்போது சந்திக்கவந்த மங்கூசை
தாக்கியதால் 8நாள் இருட்டறை வாசம்.
நாள் 1-7-91
பின் தப்பிக்கும் முயற்சியில் பில்லியால்
குண்டடிபட்டு மருத்துவமனையில்
ஒரு நாள்2-7-91.
ஜோன்சின் உதவியால் தப்பி காரிங்டன்
வீட்டில் ஓய்வு. ஒரு மாதம்.நாள் 2-8-91
புதிய பெயர் அடையாளம் ராஸ் டான்னர்.
7.SPADS
படையில் சேர்ந்து இரண்டுமாதம் ஆகி இருக்கலாம்
நாள் 3-10-91.
பயிற்சியின் போதுகாட்டில் ஒருநாள். 4-10-91
பின் தண்டணை ஒருநாள் 5-10-91
தண்டணை ரத்து பின் பெட்சியை இரவு
சந்தித்து காலை ஜோன்சுடன் தப்பித்தது
6-10-91.
8. இதற்க்கு இடையில் ஒரு வாரம் கழித்து
பெரியவர் ஷெரிடன் மரணமடைகிறார்.
12-10-91.கல்லறை தோட்டத்தில் வாலியும்
சுடப்படுகிறார்.
சான்மிகுவலில் இருந்து தப்பிய ஜேஸன்
ஜோன்ஸ் பெட்டி மூவரும் வாஷிங்டன்
நோக்கி பயணம். 13-10-91
இதற்கிடையே அவசரநிலை பிரகடனம்
காரிங்டன் கைது 14-10-91.
சான் மிகுவலில்  இருந்து பிரஸீனுடன்
விமானம் பின் கார் மூலம் மூன்று நாள்
பயணம்.17-10-91.
பிறகு ஆமோஸ் வாலியுடன் தளம் SSH - 1
ஸ்டான்டுவெல் ஆட்சிகவிழ்ப்பு ஜனாதிபதி
கால்பிரெய்னை கொல்ல முயற்சி பின்
ஜேஸன் உதவியால் அனைத்தும்
முறியடிப்பு ஒருநாள்.18-10-91.
தளத்தில் நுழைய ஜேசன் பயன்படுத்திய
பெயர் ஜெட் ஓவ்சன்.
XX அமைப்பை சேர்ந்த எஞ்சியவர்கள் கைது
விசாரணை, தீர்ப்பு, சிறை இவையெல்லாம்
முடிய ஒரு மாதம் கடந்தது.18-11-91.
ஜனாதிபதி ஷெரிடன் கொல்லப்பட்டு
ஏறக்குறைய 14 மாதங்கள் கழிந்திருந்தது.
9.
மூன்று மாதம் கழித்து தன் தந்தை ஜொனாதன் ப்ளை பற்றி தகவறிந்து
தன் அடையாளம் தேடி கிரீன்பால்ஸ்
செல்லும் ஜேஸன் தனது பெயரை
ஜான் ப்ளெமிங் என்று மாற்றி ஸீ வியூ
ஹோட்டலில் தங்குகிறார்.நாள் 18-2-1992.
மறுநாள் 19-2-92 ஹட்டாவே யை சந்திக்கும்
போது தனது தந்தை பற்றி தன்னை பற்றி
அறிகிறார்.
பெயர்கள்.  ஜேஸன் ப்ளை
ஜேஸன் மக்லேன்.
இரவு ஜூடித் வீட்டில் தங்கல்.
மறுநாள் 20-2-92 ஹோட்டல் குண்டுவெடிப்பில்
மர்டோக் இறந்த காரணத்தால் ஜேஸன் கைது.
பின் ஜோன்சுடன் தப்பித்தல்.
தப்பிய பிறகு ஜூடித்தின் வீட்டில்  ஜோன்சை
விட்டுவிட்டு ஹட்டாவேயை தேடிச்செல்லும்
ஜேஸன் ரிக்பி மங்கூஸ் உடன் மோதலில்
மங்கூஸ் கைது செய்யப்படுகிறான்.
ரிக்பியிடம் தன்தந்தை கொலைசெய்யப்பட்டு
19 -1/2 வருடங்களே கழிந்துள்ளது அதனால்
ஜொனாதன் கொலை வழக்கு மீண்டும்
வரும் என்கிறார்.பின் ஜேஸனை கொல்ல
முயன்ற ரிக்பி ஹட்டாவேயினால் சுட்டு
கொல்லப்படுகிறார்.
ஹட்டாவே மரணம் ஒரு மாதத்தில்
20-3-92
ஆறுமாதம் கழித்து 20-9-92 கிரீன்பால்ஸ்
வரும் ஜேஸன் தன் தந்தை வசித்தவீட்டருகே
தன் நினைவுகளை எண்ணுகிறார்.
10.
21-9-92 ல் ஜனாதிபதி வாலிஷெரிடனை
சந்திக்கிறார் ஜேஸன்.நம்பர் 1 யாரென்று
கண்டுபிடிக்குமாறு வாலி கேட்க ஜேஸன் சம்மதிக்கிறார்.
22-9-92
பயிற்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஜோன்சிடம்
விபரம் சொன்ன ஜேஸன்  இரவு சவுத்பர்க்கில்
உள்ள வாஸ்பர்ன் ஹாஸ்பிடலில் மருத்துவ
பரிசோதனைக்காக சேர்கிறார். அங்கே
பிரசிடென்ட் வாலிக்கு செய்யப்பட்ட அறுவை
சிகிச்சை பற்றியும் அவர்தான் சதிக்கும்பல்
தலைவர் நம்பர் I என்று கண்டுபிடித்து
தப்புகிறார்.
23-9-92
ஆமோஸுடன் ஆலோசனை பூங்காவில்.
ஆமோஸ் சுடப்படுகிறார்.
24-9-92
கிம்மை தேடி நார்த்ஷோர் பயணம்.
உடன் ஜோன்ஸ்.
25-9-92
இரவு தீவினில் கிம் காப்பாற்றும் முயற்சியில்
ஜோன்சுடன் பிடிபடுகிறார்.
மீண்டும் படகில் ஜேஸன்.
மயக்க ஊசி போடப்பட்டு.
போராட்டத்துக்கிடையே ஜோன்சுடன்
தப்பிக்கிறார்.
காலை 26-9-92.
வாலியின் உதவியாளர் கெல்லியால்
ஜேஸனும் ஜோன்ஸும் காப்பாற்றப்படுகிறார்கள்.அன்று இரவு
அமெரிக்க அதிபர் மாளிகையில் வாலி
அளித்த விருந்தின்போது தனிமையில்
ஜேஸனும் வாலியும் பேசுகின்றனர்.
அப்போது அவர்தான் நம்பர்1 என்ற
உண்மையை சொல்லி பிறகு வாலியை
அடித்துவீழ்த்திவிட்டு ஜேஸன்
வெளியேறுகிறார்.
11.
மினாக்கோ கம்பெனியினரின் ஆலோசனை
கூட்டம் 24-4-93.
ஜேஸனை பயன்படுத்த புதிய திட்டம்
தீட்டுகிறார்கள்.
25-5-93 கோஸ்டாவெர்டி வரும் ஆயுத
வியாபாரி கார்ல்மெரிடித் பாதர் ஜஸின்டோவால் கடத்தி கொல்லப்படுகிறார்.
26-5-93.பிரஸ்யூ பண்ணையில் ஓய்வாக
இருக்கும் ஜேஸனுக்கு ஜஸின்டோ போன்
செய்து அவரது மனைவியை பற்றிய
தகவல் இருப்பதாக சொல்ல
ஜோன்ஸுடன் சான்மிகுவல்
செல்கிறார். ஜஸின்டோ கொடுத்த
தகவலின் பேரில் கார்ல்மெரிடித் என்ற
புதிய பெயருடன் கோஸ்டாவெர்டி
செல்கிறார்.26-5-93
அன்று இரவு விருந்தின்போது ஏஞ்சலால்
கடத்தப்பட்ட ஜேஸன் மறுநாள் 27-5-93
அன்று திரும்புகிறார்.அதே நாள் இரவு
பெலிசிட்டியுடன் தப்பிக்கும் முயற்சியில்
பெரால்டாவினால் கைது செய்யப்படுகிறார்.
வேறு பெயர்கள்.
கெல்லிபிரெய்ன்
ஸ்டன்ட்மேன்
12.
ரோகாநெக்ரா சிறைத்தீவு 28-5-93.
ஜேஸன் சித்ரவதை செய்யப்படுகிறார்.
29-5-93.செஞ்சிலுவை சங்க சோதனை
என்ற பெயரில் சிறையின் மீது தாக்குதல்
நடத்தும் ஏஞ்சல் ஜஸின்டோ ஜோன்ஸ்
ஜேஸனை விடுவிக்க பிறகு மரியாவை
காப்பாற்றும் முயற்சியில் கானகத்தில்
சிக்குகின்றனர்.
மறுநாள்30-5-93.
ஏஞ்சல் படையினரால் ஜேஸன், மரியா
காப்பாற்றப்பட்டு ஜேஸன் சிறைபிடிக்க
படுகிறார்.
மறுநாள் 1-6-93.
நிபந்தனையின்பேரில் ஜோன்ஸ் மற்றவர்களுன் விமானத்தில் கிளம்ப
ஜேஸன் பின்தங்குகிறார்.உடன் மரியா.
புரட்சி நடந்து 8 நாள் கடந்தது
ராணுவ கோர்ட் விசாரணை.9-6-93
ஏஞ்சல் தற்கொலை செய்துகொள்ள
மரியா கோஸ்டாவெர்டி அதிபராகிறார்.
10-6-93.
ஷான் மல்வே வீட்டில் அவர்தான் தன்
தந்தை என்று அறிகிறார்.
தன் பெயர் ஜேஸன் மக்லேன் என்றும் ஜேஸன்
அறிகிறார்.
தந்தை மல்வே முன்னோர்களின் வரலாறு
பற்றி கூறுகிறார்.
பெயர்கள்
ஜேஸன் மக்லேன்
ஜேஸன் மல்வே
அப்போது
 அதிபராகியுள்ள மரியாவிடம்
இருந்து அழைப்பு வர அங்கே செல்கிறார்.
தப்பிய ஓர்டிஸ் மீண்டும் தாக்குதல்
நடத்த ஒரு படையுடன் வருவதாக தகவல்
தெரிந்து இடையிலேயே அவரை அழிக்க
புறப்படுகிறார்.உடன் தந்தை ஷான்
தங்கள் மூதாதையினரின் கதையை
சொல்லிக்கொண்டுவருகிறார்.
மறுநாள் 11-6-93 பாலத்தை ஜோன்ஸின்
உதவியுடன் தகர்த்து வெற்றியுடன்
கோஸ்டாவெர்டி திரும்புகிறார்.
அங்கே பிரசிடென்ட் வாலி அனுப்பிய
அமெரிக்க தூதர் உடன் 12-6-93
அமெரிக்கா செல்கின்றனர்.
13.
பென்டகனுக்கு வருகை தரும் ஜனாதிபதி
வாலி ஜெனரல் காரிங்டனால் கடத்தப்படுகிறார்.
பிறகு ஜோன்சுடன் கெல்லோனி ஏரியை
நோக்கி விமானத்தில் பயணம்.
13-6-93.
காத்திருக்கும் ஆமோஸ் மங்கூசை
கைது செய்வதுபற்றி விளக்குகிறார்.
பஹாமாஸ் பயணம்.
மாற்றுப்பெயர்
ரெஜினால்ட் வெஸ்ஸன்.
14-6-93
பஹாமாஸ்
மங்கூஸ் கைது &கடத்தல்
15-6-93
நெவாடா பாலை வனத்தில் கைவிடப்பட்ட
அணுஆயுததளம் .
தொலைக்காட்சி நேரடி விசாரணை
மங்கூஸ், வாலி மரணம்.
ஜியார்டினோவால் ஜேஸன் கைது.
16-6-93
வாஷிங்டன் கொண்டுசெல்லப்பட்ட ஜேஸன்
விசாரணைக்குப்பின் மறுநாள் 17-6-93
அரிசோனா சிறைக்கு கொண்டு செல்லும்
வழியில் ஜெஸிக்காவால் கடத்தப்பட்டு
கப்பலில் உள்ள இரினாவிடம் சேர்க்கப்படுகிறார்.மறுநாள் மனிதவேட்டை
ஜேஸன் உடன் டான்னி. பத்திரிகை நிருபர்.
18-6-93
ஜேஸன்  டான்னியை கலிபோர்னிய கடற்கரையில் கொல்ல ஜெஸிக்காவுடன்
நால்வர் அணி செல்கிறது.அவர்களிடமிருந்து
தப்பி டன்ஸ்மர் என்ற நகரை அடையும்
ஜேஸன் டான்னியை அனுப்பி விட்டு
காரிங்டன் ஆலோசனையின்பேரில்
ஸான்டியாகோ அருகில் உள்ள
மூன்வேலீ  நோக்கி இரயிலில் பயணம்
செய்கிறார்.19-6-93 அதிகாலை .
தொடரும் பயணம்.
ஸாக்ரமென்டோ நகரை கடந்து விடியலில்
ஜெஸிக்காவுடன் தப்புகிறார்.
காலை வெஸ்ட்லேக்கை அடையும்
அவர்கள் பறக்கும் பலூனில் ஏறி தப்ப
தொடரும் ஹெலிகாப்டரில் போலீஸ்.
பிறகு நடக்கும் தாக்குதலில் இருந்து இருவரும் தப்ப ஏரிக்கரையோரம் இரவு கழிகிறது.
20-6-93
மூன்வேலீயை அடைந்தவுடன் காத்திருக்கும்
கொலையாளிகள் தாக்குதல்
தொடுக்க தப்பிய ஜேஸன் விமானம் மூலம்
கோஸ்டாவெர்டிக்கு தப்புகிறார்.
21-6-93
அமெரிக்க நிர்ப்பந்தம்.
கடத்தல் நாடகம் .ஏரியின் அருகே உள்ள
மறைவிடத்தில் மல்வே ஆமோஸ் காரிங்டனுடன் காத்திருக்கிறார்
மறுநாள் 22-6-93
மூழ்கிய ஏரியினுள்  மூதாதையரின்
வெள்ளி கடிகாரத்தை தேடுகின்றனர்.
23-6-93
ஏரியில் அமிழ்ந்துபோன தேவாலத்தில்
இருந்து கடிகாரத்தை மீட்ட ஜேஸன்
மேலே எதிகளின் தாக்குதலை எதிர்
கொள்கிறார்.ஆமோஸ் உயிரிழக்க
மரியாவிடமிருந்து விடைபெற்று
மெக்ஸிகோ நோக்கி விமானத்தில்
பயணிக்கின்றனர்.
24-6-93
மெக்ஸிகோ சென்ற ஜேஸன் ஜியார்டினோ
கண்ணில் மண்ணை தூவிவிட்டு
தப்பிக்கிறார்
25-6-93
புதிரை விடுவித்த மார்க்குவெஸ்
26-6-93
ஜேஸனை தேடியலையும் ஜியார்டினோ.
27-6-93
சியராமாட்ரேயின் மையத்தில் உள்ள
டாஸ் கமில்லோஸ் மலை. புதையல் வேட்டை
குழு.
28-6-93
புதையலை கண்டெடுத்த ஜேஸன் குழு
பின்தொடர்ந்த போக்கிரி கும்பலுடன்
ஏற்ட்ட மோதலில் தப்பிக்க மிஞ்சியது 13
பொற்காசுகளே.
29-6-93
நண்பர்களுடன்
தொடர்ந்து
2-7-93
ஜியார்டினோவை கைது செய்கிறாள்
ஜெஸிக்கா.
மெக்ஸிகோ
ஸான்டா கடாரினா கிராமத்திற்க்கு
அருகே காரிங்டனின் நண்பர் சார்லியுடன்
தங்கியிருக்கும் இடத்திற்க்கு இரினாவுடன்
வரும் ஜெஸிக்கா நாள் 3-7-93
தாக்குதல் தோல்வியடைய ஜேஸனிடம்
சிக்கும் ஜெஸிக்கா அவர் மல்வேயின்
மகன் ஜேஸன் மக்லேன் என்ற
ஜேஸன் மல்வே என்றும் டான்னி எழுதிய
புலன் விசாரணை புத்தகத்தில் அனைத்து
உண்மைகளும் வெளியானதாக கூறுகிறாள்.
4-7-93
வாஷிங்டன் அமெரிக்காவின் தலைநகரம்
விசாரணை கமிஷன். ஸிமஸ் ஓ நீல்
என்ற பெயரை பயன் படுத்தி குற்றம்
சாட்டப்பட்ட ஜேஸன்  விசாரணை முடிவில்
விடுவிக்கப்படுகிறார்.
5-7-93
காரிங்டனுக்கு உதவி உயிரிழந்த சார்லி
ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்.
கல்லறை தோட்டத்தில் வக்கீல் ஆண்டன்
ஷாலி மற்றும் ஆபோவின் சொத்துக்களுக்கு
ஜேஸன் வாரிசு என்ற செய்தியை
சொல்கிறார்.
6-7-93
விசாரணை கமிஷன் முன் ஆஜராகி
வெளியே வந்த ஜியார்டினோ ஜெஸிக்காவால்
சுட்டுக்கொல்லப்பட்டார்.அதற்கு சற்று முன்
இரினாவையும் கொன்று வஞ்சம் தீர்த்துக்கொண்டாள்.
7-7-93
தன்னைத்தேடி அலைந்த ஜேஸன்
தன் புதியபிறவி அடையாளத்திற்கு
காரணமான ஆபோ ஷாலியின் வீட்டில்
மீண்டும் ஓர் புதிய அத்யாயத்தை நோக்கி.


1. XIII
2 .ஆலன் ஸ்மித்
3 .ஜாக் ஷெல்டன்
4 . ஸ்டீவ் ராலண்ட்
5 .ராஸ் டான்னர்
6 .ஜெட் ஓவ்சன்
7. ஜேஸன்  ப்ளை
8 .ஜான் ப்ளெமிங்
9 . ஜேஸன் மக்லேன்
10.  ஹுச் மிட்சல்
11.  கார்ல் மெரிடித்
12 . கெல்லி ப்ரெயன்
13 .ஸ்டன்ட்மேன்
14. ரெஜினால்ட் வெஸ்ஸன்
15. ஜேஸன் மல்வே
16 . ஸீமஸ் ஓ நீல்
இதுவரை நம் ஜேஸன் அழைக்கப்பட்ட
பெயர்கள்.
மேலும் நம் கதாநாயகன் ஜேஸன் பிறந்த
தினத்தை கணிக்க முயன்று வேறு
வழியில்லாமல் முதல் முதல் XIII தொடர்
வெளிவந்த நாளான ஜுன் 7 ம் தேதியை
நம் ஜேஸனின் பிறந்த நாளாக தேர்ந்து
எடுக்கிறேன்.  7 - 6 - 1961.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...