வியாழன், 23 ஆகஸ்ட், 2018

MB-005-துரோணரின் வருகை-மகாபாரதக்கதை வரிசை

இனிய வணக்கங்கள் பாரதநாட்டின் புதல்வர்களே...தமிழ்த்தாயின் மைந்தர்களே..மாபெரும் வரலாறை உள்ளடக்கியது நம் பாரதப்பழம்பெரும் நாடு...இராம காதை முதல் மகாபாரதம் வரை அத்தனையும் பிரமிப்பூட்டும் சரித்திரங்களாகவே பதிவாகி பாரதத்தின் பல்வேறு பாகங்களிலும் போற்றப்பட்டு ஆராதிக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகின்றன.
யோகிகளும் முனிவர்களும் அரசர்களும் பொதுமக்களும் வலம்வரும் மகாபாரதக்கதையில் எக்கச்சக்கமான பாத்திரங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலக்கு..ஒவ்வொரு இலட்சியம்..

அத்தனை மாந்தர்களின் கதையையும் உள்ளடக்கமாகக் கொண்டு உருவான மகாபாரம் வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியரும் வாசித்து புரிந்து கொண்டு மகிழ வகை செய்துள்ளனர் பூந்தளிர் அமர்சித்ரகதைகள் பதிப்பகத்தார்...இந்த மாபெரும் இதிகாசக் கதையை நமக்கும் வாசித்து மகிழ வசதியாக ஸ்கேன் செய்ய கொடுத்துதவி புரிந்த ஸ்ரீராம் லட்சுமணன்...அவருக்கு கொடுத்துதவிய இரா.தி.முருகன் ஆகியோரை நன்றியோடு எண்ணிப் பார்க்கும் தருணமிது... 
















இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு பாரதப் பிரதமர் தீர்வு காண போராளிகளுக்கும் இலங்கை அரசுக்குமான உடன்படிக்கை செய்து வைக்க முயன்று வருவதாக செய்திகள் தெரிவிப்பதை கவனியுங்கள். இன்னபிற தகவல்களையும் கவனித்து வாசியுங்கள். இந்த நூலின் முக்கியத்துவத்தையும் உணருங்கள். வாசகர்களாக நாம் ஒன்றிணைந்து கொண்டாட வேண்டிய நூலுள் இந்த துரோணரின் வருகையும் ஒன்றென்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கும்...
தரவிறக்க சுட்டியை கொடுங்க முதலில் என்கிறீர்களா?!? கேட்ச் இட்ட்ட்..

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..



1 கருத்து:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...