சனி, 11 ஆகஸ்ட், 2018

IND-77-முகமூடி எத்தன்-டிடெக்டிவ் டிரேக்-ஜேம்ஸ் ஜெகன்

ப்ரியமானவர்களுக்கு ப்ரியமானவனின் ப்ரியமான செய்தி...
நண்பர் திரு.ஜேம்ஸ் ஜெகன் அவர்களது அன்பளிப்பாக மலரவிருப்பது முகமூடி எத்தன்..

*வாங்கிய கடனை அடைக்கத் திண்டாடும் பாடகன் ட்ரூ ப்ளூ...
*அவனை சுற்றிவரும் கோடீஸ்வர காதலி டார்லிங் ஸ்மித்...
*ட்ரூ ப்ளூவை அச்சுறுத்திப் பணத்தை திருப்பி வாங்க அலையும் மாபியா கும்பல்...
*இரு கொலை முயற்சிகள்..
*திடீரென ஸ்மித் காணாமல் போக அவனது அறை இரண்டுபட்டுக் கிடக்கிறது...
*டார்லிங் நமது நாயகர் டிடெக்டிவ் டிரேக்கை அணுக..
*டார்லிங்குக்கு மிரட்டல் போன் ஒன்று வருகிறது..ட்ரூ ப்ளூவை உயிரோடு பார்க்க வேண்டுமெனில் பணம் கொண்டு வருமாறு ஒரு குரல் மிரட்டுகிறது..
*பொதுவாக போலீசுக்குப் போகாதே..யாரிடமும் சொல்லாதே என்று உங்களுக்கு மிரட்டல் வந்தால் என்ன செய்வீர்கள்?!?! இதோ கதை நாயகியைப் போன்ற உறுதியான மனத்துடன் நம்பிக்கை  இழக்காமல் போலீசுக்கு தகவல் தர வேண்டும். இது போன்ற முள்மீது சேலை விழுந்த மாதிரியான இக்கட்டான தருணங்களில் நிதானமாக செயல்பட்டு எதிராளியின் சதியை முறியடிப்பது என்பது சாகஸம் நிறைந்த அதே சமயம் அதீத பொறுமையுடன் பொறுப்பாக செயலாற்ற வேண்டிய நேரமாகும். அந்த நேரம் கோல்டன் ஹவர்ஸ் எனப்படும். அந்த பொன்னான நேரத்தில் செம்மையாக செயல்பட்டு கடத்தலை முறியடிப்பது என்பது காவலர்தம் கடமையாகும். எப்போதும் இதனை நினைவில் கொள்ளுங்கள்..
*டிரேக் எப்படி செயல்படுகிறார்..இந்த சூழ்நிலையை எப்படி திசைதிருப்புகிறார்.ட்ரூ ப்ளூவின் கதி என்னாயிற்று? போன்ற அதிரடி திருப்பங்கள் நிறைந்த இக்கதை உங்களுக்கான எனர்ஜி டானிக்காக அமையப் போவது உறுதி...1982ல் வெளியாகி பழமையின் சிகரமென திகழ்ந்தாலும் கூட திகட்டாத கதையை எப்போது வாசித்தாலும் கதையின் ஓட்டம் உங்களையும் உள்ளிழுத்துக் கொண்டு பயணிப்பது உறுதி..ஒரு ரோலர்கோஸ்டர் சவாரியில் இணைந்து கொள்ள உங்களை ஜேம்ஸ் ஜெகன் சாருடன் நானும் அழைக்கிறேன்...
IND-77 முகமூடி எத்தன்-செப்-26-அக்-02-1982-டிரேக்.pdf




என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..



2 கருத்துகள்:

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...