புதன், 22 ஆகஸ்ட், 2018

வீர சக்கரம் -மாயா காமிக்ஸ் (அறிமுகம்)

இந்தியாவின் சுதந்திரமடைந்த எழுபத்திரெண்டாவது ஆண்டு நினைவலைகளை கடந்த வாரங்களில் நாம் ரசித்திருப்போம்..ருசித்திருப்போம்... அந்த சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பிற்கு ராணுவம் எத்தனைக்கெத்தனை இழப்புகளையும் சோகங்களையும் சுமந்து கொண்டு இன்றைக்கும் நமது பாதுகாப்பினை உறுதி செய்கிறார்கள் என்பதை நாம் என்றுமே மறக்கக்கூடாது... வேற்றுமைகள் பலவிருப்பினும் நாம் அனைவரும் இந்தியர்கள்.. நம் தாய்நாடு இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம். இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.. அந்த சாதனைகளின் போதும் நம் சரிதத்தை ஒருபோதும் மறவோம்... இந்தியா எனது தாய் நாடு... இந்தியா என் உயிர் என்று ஒவ்வொருவரும் சபதமேற்போம்... அந்நியர்கள் நம் மண்ணை ஆக்கிரமிக்க விடாமல் பாதுகாக்கும் ஒவ்வொரு குடிமகனும் போற்றிப் பாராட்டத் தக்கவரே.. அவ்வாறு வெற்றிகளைக் குவிக்க தன் இன்னுயிரையே தருகிறான் ஒரு வீர சிறுவன்... அந்த கதையை பிரசுரித்திருக்கும் மாயா காமிக்ஸை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். புத்தகத்தை ஸ்கானுக்கு கொடுத்து உதவி செய்த நண்பர் சம்பத், திருப்பூர் அவர்களை (டெக்ஸ் சம்பத்) இந்நேரத்தில் நன்றியுடன் நினைவு கொள்கிறேன்..    
*மாயா காமிக்ஸ் இருபத்தைந்து பைசாவில் விற்பனை செய்யப்பட்டது..
*1973ஆம் ஆண்டில் மாயா காமிக்ஸ் விற்பனையில் இருந்துள்ளது..
*கரும்பு அண்ணா அவர்களின்நேர்த்தியான 
 கதைக்கு காந்தி அவர்களின் ஓவியங்கள் அணி சேர்க்கின்றன.. 
*சென்னை 600024, 58,வன்னியர் தெருவில் இருந்து மாயா காமிக்ஸ் வெளியாகி இருக்கிறது..
*25 சத கமிஷன் தொகையைக் கழித்துக் கொண்டு அனுப்பி வைக்கவும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது..
*அடுத்த கதை வெளியிடப்பட்ட தேதி விவரம் 05.12.1973 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் ஆராய்ச்சி நோக்கில் பயணித்துக் கொண்டிருக்கும் எனக்கும் மற்ற தோழர்களுக்கும் குதூகலத்துக்கும் குறைவில்லை.. மாதாமாதம் வெளியானதா என்பது இந்த தேதியை வைத்து உறுதி செய்யப்படாத நிலை உள்ளது. வேறு மாயா காமிக்ஸ் வைத்திருக்கும் சேகரிப்பாளர்கள் உதவினால் இதன் வெளியீட்டு கால இடைவெளியை நிர்ணயித்து விடலாம்.

பிடிஎப் வடிவில் தரவிறக்கி வாசித்து மகிழ...

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்...
நிற்க.. எனது மகனின் பர்ஸ்ட் கம்யூனியன் என்றழைக்கப்படும் விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. அதற்கு திரு.சுரேஷ் சந்த் ஐயா, திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் சார், நண்பர் திருப்பூர் குமார் ஆகியோர் பல விதங்களில் பல்வேறு காமிக்ஸ்களை அன்பளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுமல்லாமல் இந்த டிசைனையும் செய்து மிகவும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டார்கள்.. உங்கள் அன்புக்கும் அனைவரது வாழ்த்துக்களுக்கும் என் மகன் சார்பிலும் எங்கள் குடும்ப சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்குக் கைமாறாக என்னால் முடிந்த அளவு பழமை வாய்ந்த சித்திரக்கதைகளை கொண்டு வந்து என் வலைப்பூவில் இணைத்து மகிழ வைப்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகிறேன்... நன்றி தோழர்களே... 

Image may contain: 2 people, including Jsc Johny, text


4 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான காமிக்ஸ் சேவை ஜி! முதல்திருவிருந்து கண்ட செல்வன்.கிருஷ்டோபருக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!!

    பதிலளிநீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...