வியாழன், 2 ஆகஸ்ட், 2018

IND-21-34-அடிதடித் தடியன்-கார்த்-ஜேம்ஸ் ஜெகன்

இனிய அன்பின் வைர வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே.. உங்களை மகிழ்விப்பதே பணியும் கடமையுமென இயங்கிவரும் சின்னமனூர் அணுகுண்டு ஜேம்ஸ் ஜெகன் இம்முறை தாக்கவிருப்பது அடிதடித் தடியனில்..மாவீரன் கார்த்தின் சாகசமான இக்கதை வெளியிடப்பட்டது 1984 ஆகஸ்ட் 19-25 காலக்கட்டத்தில். மொழிபெயர்ப்பும் மிகைக்காது சிறப்பாகவே அமையப் பெற்றுள்ளது. நடனமாது ஒருவரை கொல்ல முயற்சி நடக்கிறது. அவளின் பாதையில் கார்த் குறுக்கிட்டு காப்பாற்றி வீடு சேர்ப்பதற்குள் அடுத்த கொலை முயற்சியும் நடைபெறுகிறது. வீட்டில் பத்திரமாக கொண்டு விடப்பட்ட நடனமாது இறந்து போகவே கார்த்தின் அதிரடிப் புலனாய்வுகள் கூடி என்கிற பிஸினஸ் உலக நிழல் மனிதரை அடையாளம் காண்பிக்கிறது. தொடர்ந்து கார்த்துக்கு கொலைத் துரத்தல்கள் துவக்கம் காண்கின்றன. அதிலிருந்து கார்த் மீண்டாரா? கூடியைப் பழிவாங்கியது அவரா விதியா? ரோஸ் மேரி யார்? போன்ற கேள்விகளுக்கு விடையாக நிற்கிறது இந்த சரவெடி காமிக்ஸ். வெளியாக உதவிய தோழர் ப்ரியமான காமிரேட் ஜேம்ஸ் ஜெகனுக்கு நன்றியும் அன்பும் அனைவரது சார்பிலும்....
அடிதடித்தடியன்-கார்த்

3 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...