புதன், 8 ஜனவரி, 2020

IND-039-மாயாத்மாவின் மர்மங்கள்_வேதாளர்-சரண்


ஆங்கிலத்தில்.. The secrets of the phantom..




















































இந்த அட்டகாசமான கதையை இன்று முதன்முதலாக அப்லோடிய நண்பர் திரு.சரவணன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியுடன்...உங்கள் சேவையில் காமிக்ஸ்  நண்பன் ஜானி சின்னப்பன்
 அடுத்த வெளியீடு கறுப்பு மாயாவி குறித்த பதிவு..

வேதாளர் குறித்த நண்பரின் இடுகை..

வெள்ளி, 3 ஜனவரி, 2020

Reverend comics விமர்சனம்


ரெவரண்ட் 2020 ஆண்டின் சூப்பர் ஹிட் கதை வரிசையில் ஒன்று..மனித வேட்டைதான் களம் மிக அழுத்தமான இந்த கௌபாய்-த்ரில்லர் கதையை தொடர்ச்சியான பரபர பக்கங்களில் படு வேகமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.. தன் தாயைக் கொன்ற கௌபாய் கும்பலை ஒழிக்க சபதம் பூண்டு அவ்வண்ணமே நாயகன் பழிதீர்க்க செல்லும் சமயத்தில் எக்கச்சக்க சிக்கல்கள் முளைக்கின்றன. அத்தனையையும் தோழி டெபோராவின் துணைகொண்டு எப்படி சமாளித்து தன் இலக்கை அடைகிறார் என்பதே கதை.. ஒவ்வொரு முறை நாயகன் சிக்கித் தவிக்கையிலும் அவரது பாவப்பட்ட ப்ளாஷ் பேக்கிலும் இந்த ரெவரண்ட் தனியாக தெரிகிறார். கௌபாய் கதைகளில் இது தனி ஆசனம் போட்டு அமரும் வகை. என்னுடைய கருத்து "செம்ம தரம்.." லயனில் கண்டிப்பா வரணும்..

After that night - graphic novel விமர்சனம்..


ஜெடெடியா கூப்பர்...அந்தப் பெயருடன் இரு பிணங்களை ஷெரீப் அலுவலகத்தில் கொண்டு வந்து போட்டு விட்டு செல்கிறான் இளைஞனொருவன். அவனை தொடரும் ஷெரீப்புடன் மோதல். அந்த மோதலை தடுக்கும் பெண்ணின் அறிவுரைக்கிணங்க ஊருக்கு வெளியே  ஆளரவமற்ற இடத்தில் நடக்கும் அநியாய சண்டை.. ஷெரீப் தன் நற்பெயருக்காக முறையற்ற விதத்தில் இரு முறை இரு வேறு நபர்களை கொல்கிறார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை அச்சுறுத்தி வைக்கிறார். இறுதி வெற்றி அவருக்கே என்றாலும் அது அவரே தன் தோல்வியை ஒப்புக் கொள்ள வைக்கும்படியான மோசமான தோல்வியாக அமைகிறது... வாசித்த விதத்தில் ஐயையோ கிராபிக்ஸ் நாவலா என தெறிக்க விடுகிற கதைய்ம்சம் கொண்டதுதான் எனினும் சோக இழையோட ஓட கதை புனைதலில் ஹென்றி மெயுனியரும், ரிச்சர்ட் கியுரினௌவும் நிற்கிறார்கள்..ஓவியங்கள் மனதை பிசைகின்றன... கதையை சேர்ந்து எழுதிய ரிச்சர்ட் கியுரினௌவே  ஓவியங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டதால் கதையோடு பேனல்களும் நம்மை கதைக்குள்ளே இழுத்துக் கொள்கின்றன... கி.நா.வாக இருப்பினும் வாசிப்புக்கேற்ற கதையே.. குறையெனில் இளைஞனின் பின்புலம் மற்றும் அவனது எண்ணவோட்டத்துக்கான காரணங்களும் அத்தனை சுருதி சேர்க்கவில்லை. அனாதை என்கிற நிலையில் அவன் தன் இடத்தை விட்டு வேறு பெயரில் வேறிடத்தில் வாழ வெளிக் கிளம்புவதையும் போனவிடத்தில் ஏதோவொரு பெயரை பதிவேட்டில் பதியாமல் அதிலிருந்தே ஒரு பெயரை பதிவதும் அது ஷெரீப்பின் இறந்தகால நினைவுகளை தூண்டி விடுவதாக அமைவதையும் கதையின் போக்காக உருவாக்கியிருப்பது அழுத்தமாக பதிவாகவில்லை.. இவ்வாண்டின் 2020 மொழிபெயர்ப்பு பரிசாக நண்பர்கள் களமிறக்கியிருக்கும் இக்கதைக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி..

வியாழன், 2 ஜனவரி, 2020

Tiger from rangoon_வேதாளர் சித்திரக்கதை விமர்சனம்..

இன்று வாசித்த ஆங்கில காமிக்ஸ் The tiger from rangoon..

the phantom no 1309
1983ல் Frew வெளியீடாக மலர்ந்த கதை இது. 1974 Fantomen ல் முதன்முறையாக இக்கதை வெளியிடப்பட்டது. பின்னர் 1983..2001ல் ஆஸ்திரேலிய வெளியீடாக மலர்ந்திருக்கிறது. சார்லி சான் என்ற சீன டிடெக்டிவ் கேரக்டரை நீங்கள் வீடியோவாக சின்னத் திரையில் இரசித்திருக்கலாம்.. அவரது கேரக்டரை இதில் சௌ சான் என்று லேசாக மாற்றி கதையில் கொண்டு வந்துள்ளனர். கதை..ஜேன் லுண்ட்ஸ்டோர்ம் ஓவியர் பெர்டில் வில்ஹெம்சன்..
கதை...வேதாளர் வழக்கமாக தன் ப்ரியமான நாய் டெவிலோடு இரவுப் பொழுதுகளில் நகர்வலம் வருவதுண்டு..
அப்படி ஒருமுறை சைனா டவுனில் வலம் வரும் வேதாளர் ஒரு கொலையை கண்ணுற நேருகிறது.. கொலை செய்யப்பட்டவர் இறக்கும் தருவாயில் ரங்கூனிலிருந்து வரும் புலி என்ற க்ளூ வார்த்தையை உதிர்த்து விட்டு இறந்து போகிறார்.. வேதாளரை அது ஒரு புலியைத் தேடும்படி செய்கிறது. புலியைப் தேடிப்  போகுமிடத்தில் சீன போதை பூதம் கிளம்புகிறது.. போதை கடத்தல் கும்பலிடம் சிக்கும் வேதாளர் இரும்பு பெட்டக பாதாள அறையிலடைக்கப்படுகிறார்.. அவருக்கு பிரபல சீன உளவாளி சௌ சான் டெவிலின் உதவியுடன் தப்பி வெளியேற உதவுகிறார். இருவரும் இணைந்து என்ன சாதித்தார்கள் என்பதை விவரிக்கிறது கதை. சிறப்பான வாசிப்பு அனுபவம்.. ஹேப்பி 2020..
சௌ சான் பாத்திரத்தின் ஒரிஜினல்..சார்லி சான் கதைகளே..
தனி நாயகராக கலக்கிய பாத்திரத்தினை வேறு நாயகரின் கதைக்குள்ளாக கொண்டு வந்துள்ளதே இந்த ரங்கூன் புலி கதையின்தனிச்சிறப்பு.. அதே நாயகரின் வண்ண காமிக்ஸ்...


சார்லி சான் திரைப்பட அனுபவம் பெற யூடியூப் சுட்டி இதோ..
https://youtu.be/5ed_nX7BRIw

சார்லி சானை சித்திரக்கதை நாயகராக தரிசித்து இன்புற..
http://www.charliechan.info/dailycomicsarchive/index.album/october-2429-1938?i=0

சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...