"Don't be afraid of the space between your dreams and reality. If you can
dream it, you can make it so." - Belva Davis
dream it, you can make it so." - Belva Davis
அன்பும் பாசமும் மிகுந்த நண்பர் படைகளுக்கு எனது நெஞ்சார்ந்த இனிய வணக்கங்கள்!
நலம்! நலமே விழைகிறேன்! நண்பர்களே!
சில பல முயற்சிகளுக்கு பின்னர் எனது பெயர் வெளி
வந்த புத்தகங்களின் பக்கங்களின் அணி வகுப்பை துவக்குகிறேன். கொஞ்சம் மகிழ்ச்சி வந்து மனதுக்குள் இம்முறை அதிகமாகவே கூடு கட்டுகிறது! அது ஒரு கனாக் காலம்! அந்த காலகட்டத்தில் எந்தவொரு கவலையும் இல்லாமல் நண்பர்களுடன் ஊரை சுற்றிக் கொண்டு இன்ப வானில் மிதக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக தாய் தந்தையரின் பாதுகாப்பில்
வாழ்ந்து கொண்டு இருந்த காலங்களில், இது போன்று பெயர் வந்த பதிவுகளை எல்லாம் நண்பர்களிடம்
காட்டி, அவர்களை இது போன்று உங்க பேரும் வர கடிதம் போடுங்க என்று உற்சாகப் படுத்தி
அவர்களில் என் மனதிற்கினிய அருமை சோம்பேறி நண்பன் _ தம்பி சங்கர் பெயரில் கடிதம்
எழுதி போட்டு பரிசை தட்டி (அது ஒரு பேனா ஸ்டாண்டு அதில் எகிப்திய ஓவியங்கள் இடம்
பெற்றுள்ளன. நமது நண்பர்கள் வசம் அது போன்று பரிசு ஏதேனும் உள்ளதா? அதை என்னிடம்
கொடுத்து விடவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால் இன்று வரை அவனது இல்லத்திலேயே
அலங்கரிக்கிறது! பார்ப்போம்! இதுக்கு பின்னாடியாவது கொடுத்து விடுவானா ? இல்லை, நம்
நண்பர் திரு.மலையப்பன் (இப்போ திருவண்ணாமலையில் ஒரு சித்த வைத்திய சாலையில் உதவியாளராக பணி புரிகிறார்)
அவர்களிடம் அடித்த கொள்ளை போன்று ஒன்றை அரங்கேற்றி விடுவோமா என்று!!!!
ஒரு முறை சுப்பிரமணியன்
என்று எனது எதிர் வீடு அங்கிள் பெயர் தவறாக இடம் பெற்று விட்டது. ஆனால் என்ன நம்ம
முயற்சிகள் தொடரட்டும் என்று ஒரு கடிதம் மூலம் நம் லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு
தகவல் தெரிவித்து விட்டு அமைதியாக இருந்து விட்டேன்.
நண்பர்களே!
இந்த பதிவை எனது தாய் திருமதி. விஜயா சின்னப்பன் அவர்களுக்கும் எனது
தந்தையார் திரு. சின்னப்பன் (எ) சின்ராஜ் அவர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.
என்ன தவம் செய்தேனோ உங்களை எனது பெற்றோராக அடைய! எனது தாயார் நான் நேசிக்கும் நூல்களை இவ்வளவு நாட்களாக பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துப் பாதுகாத்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை! இது இமயமலை சாரல்தான் நண்பர்களே! ஒரு முறை போய் தவமியற்றினேன்! ஹி! ஹி! போஸ் கொடுத்தேன்!
என்ன தவம் செய்தேனோ உங்களை எனது பெற்றோராக அடைய! எனது தாயார் நான் நேசிக்கும் நூல்களை இவ்வளவு நாட்களாக பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துப் பாதுகாத்த அன்புக்கு ஈடு இணை ஏதுமில்லை! இது இமயமலை சாரல்தான் நண்பர்களே! ஒரு முறை போய் தவமியற்றினேன்! ஹி! ஹி! போஸ் கொடுத்தேன்!
என்னடா இது
நல்லாதானே போய்கிட்டு இருந்தது இங்கே என்ன புதுசா ஒரு ஸ்கான் போட்டிருக்கான் என்று
நீங்கள் குழம்பவில்லை எனில் அடிப்படையில் உங்களிடம் ஏதோ ஒரு தவறு உள்ளது என்று
அர்த்தம். IT’S A WORD OBTAINED BY ONE WHO
LOVES THE COMICS WORLD “GREATEST EVER COMICS” BLOG NOW http://mokkaicomics.blogspot.in/
But எனக்கு அந்த வார்த்தைகள்தான் பிடிச்சிருக்கு. என்னருமை நண்பர்களே! ஆருயிர்
தோழர்களே உங்களால்தான் இணையதளத்தில் எல்லாம் உலவி கொண்டு இருக்கிறேன்! உங்க
நட்பால்தான் இந்த வாய்ப்பு கிடைச்சது! சன் டிவி கலக்கி கொண்டிருக்கும் கையில் ஒரு
கோடி நிகழ்ச்சியில் குறுஞ்செய்தி போட்டியில் கலந்து கொண்டேன். ஆயிரம் ருபாய்
வென்றேன். இது எனது நண்பர்கள் உங்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்.... ஹி ஹி ஹி அந்த
பணத்தில் ட்ரீட் எல்லாம் கேட்டு விடாதீர்கள். குடும்பஸ்தன் சாரே! அப்போவே காலி!
என்ன தவம் செய்தேனோ உங்களை எனது நண்பர்களாக இந்த
இணையதளத்தில் அடியேன் அடைய! மேல இருக்கிற போட்டோ உண்மையிலேயே இமய மலையில தவம்
இருக்கும்போது எடுத்ததுதான் நண்பர்களே! நம்பிடுங்க இல்லை இதை விட கொடுமையான
போட்டோக்களை இங்கே பதிப்பித்து லொள்ளு பண்ணுவேன்!
அடியேன் முதலிலேயே பதிப்பித்து இருந்தபடி எனது
காமிக்ஸ் கலையுலக (கொலையுலக?) வாழ்வில் ஒரு குறிப்பிட்ட இடம் கிடைத்து
அங்கீகரிக்கப்பட்டதாக நினைப்பது இந்த மாதம் ஒரு வாசகர் பகுதியில் வந்த எனது
தகவல்கள்தான். இதன் பின்னர் கிடைத்த நட்புகள் நிறைய! அந்த காலத்தில் கம்ப்யூட்டர்
என்பது அபூர்வமானவர்களது, அபூர்வமான ஆர்வமுடையோரது, அதிலும் கணிதம்(????) படித்து
புரிந்து கொண்டவர்களின் அருகாமை விஷயம் என எனது ஊரில் பேசிக் கொண்ட விஷயம்
நண்பர்களே! மிரட்டும் விஷயமாக அன்று இருந்தது இன்று சின்ன பிள்ளை விஷயமாகி போனது!
காலம் எவ்வளோ வேகமாக ஓடுது? அடியேனும் ஒரு டுபாகூர் பதிவர் இன்று என்றாகி போனது! நம் அருமை நண்பர்கள் கிங் விஸ்வா போல ஆழமான ஆராய்ச்சியோ கார்த்திக் போல ஸ்மார்ட்டாகவோ விஜயன் சார் போல மனதை தொடும் விதத்திலோ ஸ்டாலின், ஈரோட்டார் போல பொக்கிஷங்களின் அணிவகுப்பாகவோ பதிவிட தெரியாவிடினும் சும்மா உங்களுடன் காமிக்ஸ் பெயரால் கதைக்க கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதனை நான் கருதுகிறேன்!
நம்ம முத்து Never Before Special கலக்கலாக சிக் பில் சாகசம் தாங்கி நானூறு ரூபாவில் வெளியிடப்பட இருக்கும் அறிவிப்பு அதிரடியாக வெளியாகி நம் காமிக்ஸ் உலகத்தை கலக்கி வரும் இந்த பொன்னான தருணத்தில் நண்பர்களை மகிழ்விக்க எதோ என்னால் முடிந்தவகையில் சிக் பில், ராய் ஆர்டின், டாக் புல், பொடியன் ஆகியோரை சிறப்பிக்கும் விதமாக எனது பதிவினை துவக்குகிறேன்! நிஜமான கிட் ஆர்டினை போன்றதொரு நபர் புகுந்து செய்யும் அட்டகாசங்கள் அடங்கிய கதை! டாக் புல் திணறும் கட்டங்கள் மிகுந்த சிரிப்பை வரவழைக்கும். இந்த நூலில் எனது கடிதம் இடம் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்த ஒன்று. இதற்கு முன்னர் வெளியான குற்ற வருடம் இரண்டாயிரம் என்னும் நண்பர் ரிப்போர்ட்டர் ஜானி சாகசத்தில் வெளியான அதிரடி காமிக்ஸ் தொடர்பாக நான் வரைந்த மடலினை பதிப்பினில் கண்ட ஆனந்த நிமிடங்கள் தங்கள் பார்வைக்கு கீழே :-
நம்ம ஆசிரியர் திரு.விஜயன் அவர்கள் தனது பதிவு ஒன்றில் தெரிவித்திருந்த கடிதம் மூலம் காமிக்ஸை காதலித்த நபர்களின் பெயர்களை அடையாளப் படுத்திக் கொள்ள கேட்டிருந்தார். அதனால் உந்தப்பட்டு இந்த பதிவுக்கு எனது முயற்சியை மேற்கொண்டேன்! நண்பர் நாகராஜன் சாந்தன் (எ) திருப்பூர் நீல பெர்ரி மிகுந்த உந்துதலாக இருந்தார். நேரம் குறைவு. அதனாலேயே அரைகுறையாக டிராப்ட் அளவிலேயே கிட்டத்தட்ட லார்கோ பதிவினை இட்ட நாளாய் கிடந்த பதிவினை நல்ல முறையில் கொண்டு வர வேண்டி காலதாமதம் நேரிட்டு விட்டது நண்பர்களே!
அடுத்து நண்பர் விங் கமாண்டர் ஜார்ஜ் சாகசமான பென்குயின் படலம். அசத்தலான ஆக்ஷன் படலம். நண்பர் துருவ பகுதியில் மேற்கொள்ளும் அதிரடி சாகசம்! இதற்கு முன்னர் வந்த அலெக்சாண்டர் கதை மிக அருமையான கதை! அதனை வண்ணத்தில் வெளியிட்டால் மிக நன்றாக இருக்கும். அவர் பெயரை கொஞ்சம் லயன் பிளாகில் உயர்த்தி பிடியுங்க நண்பர்களே!
ரவுடி ராஜ்ஜியம் ஒரு அருமையான கதை அதன் சித்திரங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் அந்த நூல் வண்ணத்தில் வந்தால் மாபெரும் வெற்றி பெரும் நண்பர்களே!
புது தலை முறை கலக்கல் காமிக்ஸ் புரட்சி யுகத்திலும் நம்ம கடிதம் எழுதும் கலையை முயற்சித்து பார்த்தேன். அதற்கு கிடைத்த பரிசாக நம்ம கடிதம் வைல்ட் வெஸ்ட் சிறப்பிதழ் புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டது. அதனை தனது வலைப்பூவிலும் வெளியிட்டு என் முயற்சிகளுக்கு உரம் சேர்த்திருக்கிறார் நண்பர் திரு.சௌந்தர் அவர்கள். அவரது வலைப்பூ http://tamilcomics-soundarss.blogspot.in அவரது வலைத்தளத்தில் இந்த நூலின் விவரங்களை அருமையாக பதிவிட்டுள்ளார். அவருக்கு என் நன்றிகள் பல!
கடிதங்கள் ஒரு காலத்தில் நம்ம இதயத்தை அப்படியே வேற இடத்திற்கு கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்தவை. அதை சொல்லி புரிய வைக்க முடியாது நண்பர்களே. அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். இப்போ என்னதான் குறும் செய்தி அனுப்பினாலும் அது வேறு உலகம். நன்றிகள் பல விஜயன் சார். குடும்பம் தாண்டிய உறவுகளை அமைத்து கொடுத்த உங்க இதயத்திற்கு!!!!
குட்டி பயல் சாம் அதிரடியுடன் தற்காலிகமாக விடை பெறுகிறேன் தோழர்களே! வாங்க வந்து படியுங்க அப்படியே lion-muthu blogspotla சந்தியுங்க காமிக்ஸ் பற்றி அரட்டை அடிக்கலாம். விரைவில் இவற்றின் தொடர்ச்சியுடன் வரேன்! நேரமும் காலமும் கிடைப்பதரிது நண்பர்களே! நானூறு ரூபா இதுக்கு முன்னாடி இல்லை ஸ்பெஷல் புத்தகம் வெளிவர உங்க பக்க பங்கை ஆற்றி காமிக்ஸ் உலகுக்கு வளமூட்டுங்க அப்படின்னு கேட்டுகிட்டு இப்போதைக்கு போயிட்டு வாரேன்! பாய் ஆட்டுகடை பாய்! கோழி கடை பாய் ! பாயாகடை ஆயா! ஹி ஹி ஹி !!! கண்ணுங்களா! இதோட விடவே மாட்டேன்!
முதல் கமெண்ட் நண்பரே :)
பதிலளிநீக்குமுழுவதும் படித்துவிட்டு வருகிறேன் ...
அட்டகாசம். சூப்பர்.
பதிலளிநீக்குபுகைப்படத்தில் அப்படியே பத்ரி படத்தில் வரும் இளைய தளபதி விஜய் போல்கவே இருக்கிறீர்கள். (சத்தியமாக கிண்டல் அல்ல).
வாசகர் கடிதம், பழைய நினைவுகள், சந்தோஷமான தருணங்களை நினைவு கூறுதல் என்று சூப்பர் ஆன கலக்கல் காக்டெயில் பதிவு தோழர்.
வழக்கம் போல ஒரு சின்ன பயணம்,ஆகையால் உடனடியாக கமென்ட் இட முடியவில்லை.
நண்பரே மீண்டும் நானே !!!
பதிலளிநீக்குமிக எளிமையான நடையில், மிக அருமையான பதிவு.
எனக்கும் பதிவிட வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் நண்பர்களின் பதிவுகளை ஏன் பதிவாகவே நினைப்பதால் ... ஹி..ஹி..ஹி !!!
நேற்று ஈரோடு திரு ஸ்டாலின் அவர்களும் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவரும் நீங்கள் ஏன் பதிவு எழுதவில்லை என்று கேட்டார் ... இந்த பதில் அவருக்கும் சேர்த்து :)
//மேல இருக்கிற போட்டோ உண்மையிலேயே இமய மலையில தவம் இருக்கும்போது எடுத்ததுதான் நண்பர்களே! //
கண்களை திறந்து கொண்டு நமது நண்பர் தவம செய்கின்ற காட்சி ... அடடா கொள்ளை அழகு !!!
சன் டிவி மூலமாக நண்பர் பரிசு பெற்றதற்கு அனைத்து காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
வரும் ஜனவரி மாதம் சிவகாசியில் நடைபெற இருக்கும் முத்து நெவெர் பிபோர் ஸ்பெஷல் வெளியீட்டு விழாவில் நண்பர் ஜான் அவர்கள் இதற்காக ஒரு விருந்து வைப்பார் என்பது நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி :)
ஜான், மிக நன்றாக எழுதி வருகிறீர்கள் (அனைவருமே நண்பர்களே). தொடர்ந்து இது போல இன்னும் நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறோம் ...
நன்றிகளுடன்
திருப்பூர் புளுபெர்ரி ...
அண்ணே,
பதிலளிநீக்குஅந்த ஆயிரம் ரூபாய்க்கு நண்பர்களுக்கு ட்ரீட் வச்சே ஐந்தாயிரம் செலவழிப்பீங்க போலிருக்கே?
//என்ன தவம் செய்தேனோ உங்களை எனது பெற்றோராக அடைய//
பதிலளிநீக்குபெற்றவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மறியாதைக்கு ஒரு ராயல் சல்யூட் நண்பா!
நீங்கள் அமர்த்திருக்கும் பனிமலைக்காட்சி ஜெமினியா? வாகினியா? AVM ஆ? அதை மட்டும் சரியாச்சொல்லுங்கள்
நன்றிகள் எங்கள் காமிக்ஸ் உலக முன்னோடி திரு கிங் விஸ்வா அவர்களே! தங்கள் வருகை எங்கள் அனைவருக்குமே பெருமை!
பதிலளிநீக்குஆயிரம் பெற்றாலும் இழந்தாலும் நண்பர்கள் வாழ்வின் இனிய சூரிய ஒளி கீற்றுகள்தானே நண்பா!
நண்பர் திரு நாகராஜன் சாந்தன் அவர்களே! உங்க தொல்லை தாங்க முடியாமல்தான் இந்த பதிவே! அதற்காக எந்தன் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! கண்டிப்பா உங்க தூண்டுதலில் விளைந்த இந்த வலை பூ தங்கள் தோட்டத்தில் இருந்து மலர்வதே!
பதிலளிநீக்குநன்றிகள்!
ஆனாலும் ஸ்டாலின் அவர்களே! உங்க என்ட்ரி தடாலடியாக இருப்பதே அழகுதான்! இமய மலை குல்லு மணாலி தோழரே இது! டெல்லியில் இருந்தபோது ஒரு விசிட் போய் வந்தேன்! ஒரு மூக்கு துவாரத்தில் தண்ணி விட்டு இன்னொரு துவாரம் வழியா எடுக்கிற இல்லேன்னா பைப் விட்டு எடுக்கிற ஒரு போட்டோ இருக்கு பதிவில் போட்டு விடவா?? தலைவரே!!!??!!! விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ஹி ஹி
பதிலளிநீக்குஉங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நண்பரே :)
பதிலளிநீக்குVery nice post
பதிலளிநீக்குKeep it up :))
.
// ஒரு மூக்கு துவாரத்தில் தண்ணி விட்டு இன்னொரு துவாரம் வழியா எடுக்கிற இல்லேன்னா பைப் விட்டு எடுக்கிற ஒரு போட்டோ இருக்கு பதிவில் போட்டு விடவா?? தலைவரே!!!??!!! விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல ஹி ஹி //
பதிலளிநீக்குஎன்னுடைய ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் நண்பரே
ஆனா சொல்லிட்டு போடுங்க ( எங்கிட்ட மட்டும் ) அப்பத்தான் கொஞ்ச நாளுக்கு இந்த பக்கம் வராம் வராம இருப்போம்ல (ஐயோ ஐயோ தமாசுக்கு சொன்னத அப்படியே உண்மைன்னு நம்பிட்டீங்க ) ;-)
.
// எனக்கும் பதிவிட வேண்டும் என்ற ஆசைதான் ஆனால் நண்பர்களின் பதிவுகளை ஏன் பதிவாகவே நினைப்பதால் ... ஹி..ஹி..ஹி !!! //
பதிலளிநீக்குஇப்புடியெல்லாம் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள ஒரு பெரிய மனசு வேண்டும் ;-)
.
நண்பர் சிபி
பதிலளிநீக்குஉண்மையை ஒப்பு கொள்ள இந்த ப்ளுபெர்ரி என்றைக்குமே தயங்கியதில்லை :)
ஆனாலும், அந்த போட்டோ சூப்பர்! ஏதோ சென்னை வெயில்ல முட்டி போட்டு நிக்குற மாதிரி எப்படி அப்படியொரு போஸ் குடுக்க முடிஞ்சது? :D
பதிலளிநீக்குநண்பா பனி மிக மிருதுவாக இருக்கின்றது அங்கே எடுத்து பந்து போல உருட்டி விளையாடலாம்!
பதிலளிநீக்குநண்பரே ஒரு அற்புதமான சுய சரிதையினை தந்துள்ளீர்கள் ,நண்பர் ஸ்டாலினின் கடந்த பதிவுகளை வாசித்து கொண்டிருந்த போது உங்களது ப்ளாக் ஸ்பாட் விவரம் குறித்த செய்தியினை பார்த்தேன் ,சுவாரஸ்யமான பதிவுகள் உங்களது ,அழகாக தந்துள்ள உங்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் இந்த நினைவுகளை கொடுத்து பின்னோக்கி அழைத்து சென்ற உங்களது கால எந்திர பதிவுகளுக்கும் நன்றிகள் பல பல பல....................................என்னோவோ தெரியவில்லை உங்களை போன்ற நண்பர்களது
பதிலளிநீக்குபதிவுகள் நானும் பங்கு பெற்றது போன்ற நினைவுகளையே கொண்டுள்ளது .உங்களை போன்ற நண்பர்களது அற்புதமான கைத்திறனே ...............................
அன்றும் ஸ்டாலினின் பதிவிலிருந்தே நுழைந்தேன் ,இன்றும் யார் அந்த மாயாவியை படித்த பின்பே உங்களது ப்ளாக் ஞாபகம் வந்தது .இனி மறவேன்.எப்படி மறப்பேன்?................................
பதிலளிநீக்குthank u very much friend
பதிலளிநீக்கு