செவ்வாய், 2 அக்டோபர், 2012

நியாயம்டா! நேர்மைடா! நீதிடா!

எனது பாசத்துக்குரிய காமிக்ஸ் உலகக் குடி மக்களே! 

வணக்கம்! தங்களை சந்திக்க இன்னும் ஒரு வாய்ப்பு அமைந்தது என் பாக்கியம்! வாழ்க வளர்க!

இன்று இப்போ வாழ்க்கை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னும் இப்படி எல்லாம் வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும் என்ற சிந்தனைகள் நம்மை சிறகடிக்க வைத்து கொண்டுதானே இருக்கின்றன! எதிர்காலம் என்ற ஒன்று இல்லை எனில் அங்கே மனம் நின்று விடும் என்று பகவான் ஓஷோ கூறி இருப்பதை நினைவு படுத்த (உங்களை படுத்த!!) விரும்புகிறேன்! 

          அதில் எதிர்காலம் என்பது தொக்கி நிற்கிறது அல்லவா? நாளை நடக்க போவது எப்படி இருக்கும் என்ற ஆழமான மனதின் கற்பனைகளே எதிர்கால கதைகளாக உருவெடுத்து நிற்கின்றன. கொஞ்சம் வெளியே மொட்டை மாடியில் நின்று நட்சத்திரங்களை ரசித்து பாருங்கள். அவை தனித்தனி சூரியன்கள் அவற்றை சுற்றி பல கோள்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. எத்தனையோ ஆராய்ச்சிகள் அங்கே உயிரினங்கள் வசிக்கின்றனவா? அவை எப்படி இருக்கும் என்று நடந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம இருக்கோம் என்ற உணர்வு பகிர்தல்களுடன் இந்த பதிவை பாருங்க நண்பர்களே! 

                    ஒரு வேளை காலம் மாறி நியாயமும், நீதியும், நேர்மையும் தழைத்து ஓங்கும் ஒரு நிலை வரலாம்!! என்றாலும் சட்டம் என்று ஒன்று இருப்பின் அதில் சில ஓட்டைகள் அடைக்கப்படாமல் இருக்கும் அல்லவா?
அக்டோபர் இரண்டில் (இன்றுதான் நண்பர்களே!!) பிறந்த நாள் விழா காணும்  நமது தேசத்தலைவர் மகான் காந்தி அவர்கள்,

 "நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது"
 என்பது குறித்து அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார்.
        நீதித்துறை, காவல்துறை இவை ஒருங்கே குற்றவாளிகளைத் திருத்த சமூகத்தைக் காக்க பெரிதும் அயராது உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான சூழலில் நம்ம நீதித்துறை மற்றும் காவல்துறை ஒருங்கே அமைந்த வீரர்கள் எதிர்காலத்தில் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது என்ற எண்ணங்கள் கதையாக உருவெடுத்து இருக்கிறது.

              அதுதான் "நீதி தேவன் நம்பர் ஒன் " JUDGE DREDD-in English. இவரது அதிரடிகள் உங்களின் அன்பு பார்வைக்கு!

                 
               மெகா சிட்டி --- நம்ம பேட் மேன் வசிப்பது கோதம் நகரில் என்றால் நம்ம நீதி தேவன் வசிப்பது மெகா நகரில்!!!
             அங்கே எதிர்காலத்தில் ஒரு காதல் திருமணம். அதனை நடத்தும்படியான வேண்டுகோள் வைக்கும் தம்பதியர், போயும் போயும் நம்மாளுகிட்டயா மாட்ட வேண்டும்!


தொழில் நுட்பம் எந்த அளவு வளர்ந்து விட்டது பாருங்கள்! தன் காதலிக்காக திருடி மாட்டி கொள்கிறான். ஆனாலும் மணமகளுக்கு தண்டனை என்பது கொஞ்சம் ஓவராக இல்லை????
      இரண்டாவது கதை! ஒரு நபரிடம் அடித்த பெட்டியோடு மாட்டிக் கொள்கிறான் கயவன் ஒருவன். விசாரணையில் பெட்டி உரிமையாளர் கண்டுபிடிக்க பட்டுவிடுகிறார். ஆனால் அவருக்கு தண்டனை! ஏன்? விடை கீழே!



டுபாகூர் ஆசாமிகள் அத்தனை எளிதல்ல நம்ம ஆளிடம் தப்பி பிழைப்பது!

 அரசாங்க பேருந்து எப்பவுமே அப்படிதானே நண்பர்களே! நீதி தேவன் நிறைய கதைகளுடன் லயன் அலுவலகத்தில் தூங்கி கொண்டு இருக்கிரார்! தட்டி எழுப்பும் ஒரு முயற்சியாவே இதனை எடுத்து கொண்டு உங்க ஆதரவை நம்ம லயன் ப்ளாக் பக்கத்தில் எழுதி தெரிவியுங்க நண்பர்களே. அதுதான் இவருக்கு உங்க பரிசா அமையும்!

 இந்த காமிக்ஸ் கிளப் முயற்சி நல்ல ஒரு வழிதானே !  இந்த காமிக்ஸ் திரை படமாக தற்போது தமிழ் நாட்டில் ஓடி கொண்டு இருக்கு. பார்த்து விட்டு உங்க ஆதரவை இவருக்கு நல்குங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்!


                அப்புறம் நண்பர்களே கீழே உள்ள வாசகர் கடிதத்தில் அடியேன் தீபாவளி மலர் பற்றி எழுதிய கடிதம் இடம் பிடித்திருப்பதை பார்த்து இருப்பீர்கள்! நாம கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்தவங்க. நான் சென்னையை பார்த்து மலைத்து நின்றது ஒரு கதை. முதன் முதலில் எனது பி.பி.ஏ. அஞ்சல் வழி படிப்புக்கு செமெஸ்டர் (நேரடி வகுப்புகள் மூன்று நாள் மட்டும்)  அண்ணா நகர் வளைவு பக்கத்தில் இருக்கும் (இனி இருக்குமா?) எம்.ஓ.பி.வைஷ்ணவ் கல்லூரிக்கு வர வேண்டி இருந்தது. எனவே எனது தந்தையை அழைத்து கொண்டு ஆவடியில், கோவில் பதாகையில் இருக்கும் என் பெரியம்மாவின் இல்லத்திற்கு சென்று தங்கி பச்சை வண்ண பஸ் பிடித்து (இப்போ நிறம் மாறி விட்டது நண்பர்களே! இங்கே இருக்கும் அரசு பஸ் எண்கள் தெரியாவிட்டால் அதோ கதிதான்.) ஒரு வழியாக கல்லூரி போய் சேர்ந்தால் என் அப்பா அப்படியே கழட்டி கொண்டார். கல்லூரி அனுபவம் கொடுத்து வைக்க வேண்டிய அனுபவம் நண்பர்களே. வசதி உள்ளவர்கள் கல்லூரி போயி படிச்சே ஆக வேண்டும் என்று அடம் பிடியுங்கள் உங்க அப்பாக்களிடம்! ஹி!ஹி!ஹி! ரொம்ப கதைக்க நேரமில்லை நண்பர்களே! கார்டுல கடிதம் எழுதி அது பிரசுரம் ஆனதும் வரும் பாருங்க ஒரு சந்தோசம்! எந்த பொக்கிஷமும் அதை தர முடியாது நண்பர்களே! அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.



 இந்த நாயின் அவசரத்தை யாருமே புரிஞ்சுக்கிற மாட்றாங்கபா!

ஆதலால் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பீர். சின்னஞ்சிறு உயிர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்!


தலை பக்கம்! வழக்கம் போல இதை படிச்சிட்டு அப்புறம்தான் அடுத்த பக்கத்தையே திறப்போம் நாம! 


ஆம் நண்பர்களே இந்த கதை வந்தது இந்த ஸ்பெஷல் நூலில்தான்.என் புத்தகத்தை யாரோ ஆட்டையை போட்டு விட்டாங்க! நண்பர் திரு.நாகராஜ் தயவில் பக்கங்கள் பார்வைக்கு கிடைத்தன. எனவே இந்த பதிவிற்கு உதவியமைக்கு நன்றி நாகா! 


பின்னட்டையில் எவ்வளவு கம்பீரமாக அவர் நிற்கிறார் பாருங்கள்!




      அப்புறம் நண்பர்களே! விரைவில் சந்திப்போம்! நிறைய சிந்திப்போம்! நேரமும் காலமும் இடம் கொடுத்தால்!! நட்புக்கு நிறமில்லை கதையில் நம்ம கிட் ஆர்டின் நண்பர் ஒரு கறுப்பினத்தவர் அவரை பலி கொள்ள எண்ணும் சிவப்பு சிலுவை கும்பல் (டெக்ஸ் சிவப்பாய் ஒரு சிலுவை, XIII )
இந்த நூலின் அடுத்த வெளியீடு! சிரிக்க வைக்கும்! சிந்தனையை தூண்டும் கதை நண்பர்களே!

என் கையில் இருப்பது கார்பன் துப்பாக்கி நண்பர்களே! ஒரே நேரத்தில் இருபது தோட்டாக்கள் நிரப்பி சுடலாம்! 

" திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது! அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்து கொண்டே இருக்குது"
என்ற உயர்ந்த சிந்தனைகளுடன் விடை பெறுகிறேன் நண்பர்களே! அஹிம்சைக்கோர் காந்தி!! இது போன்ற ஆயுதங்களை அன்பால் வென்று நீதிக்காக சிறைவாசம் ஏற்று நமக்கெல்லாம் வாங்கி கொடுத்து இருக்கும் சுதந்திரத்தை சுவாசிப்போம்! அவரை என்றும் நேசிப்போம்! வாழ்க பாரதம்! வாழ்க காந்தி மகான்!









குறிப்பு: அன்பு நண்பர்களே! இந்த புகைப்படம்தான் இந்த பதிவுக்கு என்று சிறப்பாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. என்ன பண்ண? நேரம் என்ற ஒரு விஷயம் செய்யும் விஷமத்தில் அச்சச்சோ என் கால்ஷீட் எனக்கே கிடைக்க மாட்டேங்குது நண்பர்களே! இந்தாங்க பிடியுங்க போனஸ்.. ஹி ஹி ஹி லேட் ஆனாலும் நாங்க டெர்ரர்தான். விஷமத்துடன் உங்கள் அன்பிற்கினிய எதிரி!!! போயிட்டு சீக்கிரம் வாரோமுங்கோவ்!!!  

16 கருத்துகள்:

  1. அண்ணே,

    வணக்கம். சூப்பர் ஆன ஒரு பதிவுக்கு நன்றி.

    முதலில் நம்ம சந்திப்பு பற்றி: கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் சந்தித்து விடுவோம். ஒக்கே?

    அப்புறமாக, நீதி தேவன் கதை (ஜட்ஜ் ட்ரேட்) இது வரையில் தமிழில் மூன்று பதிப்பகத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இரண்டு வாரங்களுக்கு முன்பாக வெளியான ட்ரேட் படம் ஒரு அட்டகாசமான படம். இதனை விமர்சகர்களும், நம்மை போன்ற காமிக்ஸ் ரசிகர்களும் காமிக்ஸ் கதையை மைய்யமாக வைத்து வந்த படங்களிலேயே மிகச்சிறந்த படம் என்று கொண்டாடுகிறார்கள்.

    அந்த படத்தை பற்றிய ஒரு பதிவிட நினைத்தேன். ஆனால் கடந்த வாரயிறுதியில் திண்டுக்கல்லில் ஒரு ஹோட்டலில் என்னுடைய 1 TB Hard Diskஐ தொலைத்து விட்டேன். அதில் இருந்த அனைத்துமே (அட்டைப்பட ஸ்கான்,போட்டோக்கள்,வரிசை தொகுப்புகள், என்று) மிஸ் ஆகி விட்டது. ஆகையால் பதிவிட முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. உங்க பெரியம்மா ஆவடியில் இருக்கிறார்களா? நானும் அங்கேதான் இருக்கிறேன். சந்திப்போம்.

    அப்புறம், உங்க வாசகர் கடிதம் இன்னும் பல புத்தகங்களில் வந்திருக்கு என்று நினைக்கிறேன். சரிதானே?

    அய்யம்பாளையம் சாரும், நீங்களும் மற்றும் கொமாரபாளையம் பாரதி சாரும் வாசகர் கடிதப்புலிகள்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க தலை!நல்வரவு! பகிர்வுக்கு நன்றிகள்! நானும் டாட்டா போட்டான் கார்டினை தொலைத்து விட்டேன்! டிரெட் படம் பார்க்க நேரம் கிடைக்கலை ஜி! கண்டிப்பா பார்த்து விடுகிறேன்! மூன்று அண்ணன் தம்பிகள் அக்கா அனைவரும், பெரியம்மாவுடன் ஆவடி பகுதிகளில் வசிக்கின்றனர்.
    ஒரு வேண்டுகோள்! கண்டிப்பா டிரெட் பற்றிய உங்க தங்க எழுத்துகளை வாசிக்கணும். விரைவா வாங்க! வருகைக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  4. நிறைய புத்தகங்களில் வந்திருக்கு ஜி! அது குறித்து பதிவிட நேரம் இல்லாம ஓடிகிட்டே இருக்கேன்! நினைவு படுத்தியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. Alagana pagirvu nanba. Gandi jainthiai sariyaga kondadiya mudal padiver thangalthan.

    பதிலளிநீக்கு
  6. நன்றி பரணி! மகாத்மா காந்தியின் பிறந்தநாள் எதேச்சையாக நினைவுக்கு வந்தது நண்பா!!

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான பதிவு நண்பா !!!

    நண்பர் ஈரோடு ஸ்டாலின் உடனான தங்களது சந்திப்பு இனிய தருணமாக அமைந்து இருக்கும் என எண்ணுகிறேன்.

    புத்தகங்கள் கொடுத்து உதவியதற்கு நமது நண்பர் திரு புனித சாத்தான் அவர்களுக்கு
    தனகளுடைய நன்றியை பார்வேர்ட் செய்கிறேன் :)

    நண்பா ஒரு டவுட்டு ? தாங்கள் கையில் வைத்திருக்கும் அந்த துப்பாக்கிக்கும், கார்பன் என பெயர் வந்தது எப்படி ?

    (மாட்டிக்கிட்டீங்களா )

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு. சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஜட்ஜ் டெட் படத்தை அது ஒரு காமிக்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்று தெரியாமலே மதுரை "மாப்பிள்ளை வினாயகரில்" பார்த்தேன்.

    //"நியாயம்டா! நேர்மைடா! நீதிடா!"//

    சூப்பர் ஆனா தலைப்பு. நடிகர் விஜயகுமார் சொல்லுறமாதிரி நினைச்சுப் பார்த்தா ஜட்ஜை பற்றிய பதிவுக்கு இதைவிட நல்ல தலைப்பு கிடைக்காது.

    //ம் அப்புறம் சொல்ல மறந்துட்டேன். திருமண வாழ்த்துக்கள். காங்கிரஜுலேசன். //

    தண்டனையும் குடுத்துட்டு சொல்லுறத பாரு. ஜட்ஜ் ரொம்ப குசும்பு பிடிச்சவர இருக்காரே.

    வெளியான கடிதங்களில் நம்முடையது இருந்தால் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    கடைசியில் உங்களுடைய படத்தையும் போட்டு ஜட்ஜ் டெட் இப்படித்தான் இருப்பாரோ என நினைக்க வச்சுடீங்க.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் பதிவு உங்கள் வழக்கமான மிரட்டல் பாணியில் ... தொடருங்கள்...

    Dredd கதை பெரும்பாலும் சிறிய சிறிய கதைகளாக உள்ளது முழு நீள கதைகளை விரும்பும் நம் போன்ற வாசகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. மீண்டும் வந்தாலும் ஓகே தான்.

    Dredd படம் நல்லா இருக்கிறதா என்னால பொய் சொல்ல முடியாது நண்பரே. அது படுபயங்கர மொக்கை என்பது அனைவரும் அறிந்ததே (எந்த ஒரு பதிவரும் அந்த படத்தை நன்றாக உள்ளது என்று கொண்டாடியதாக நினைவில்லை). ஆனாலும் நமது காமிக்ஸ் ஹீரோ படத்தை இப்படி சொதப்பியுள்ளார்களே என்ற கோபம் உள்ளது.

    துப்பாக்கியை பற்றிய உங்கள் தகவல் நன்றாக உள்ளது நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. நன்றிங்க புனித சாத்தான் அவர்களே! நம்ம நாகா ரொம்ப வெள்ளை மனத்தர்! ரகசியத்தை வெளிய விட்டுட்டார்! அது சரி நண்பா துப்பாக்கி ரகசியம் மகா ரகசியம்! அதெல்லாம் சொல்ல கூடாது!
    http://en.wikipedia.org/wiki/M1_carbine இங்கே படிச்சிக்கோங்கோ!சரியா? நாட்டாமை தீர்ப்பை மாத்து என்று பின்னூட்டம் போட்டு தாக்க கூடாது! எப்பூடி?

    பதிலளிநீக்கு
  11. வந்து போன அனைத்து அன்பு நண்பர்களுக்கும் ஒரு அவசர அழைப்பு! மீண்டும் ஒருமுறை எனது பதிவினை படிச்சிடுங்க! ஹி ஹி ஹி கொஞ்சமா விவரம் சேர்த்து உங்களை கலங்கடிக்க காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  12. நல்வரவு ராஜ் அவர்களே! நான் இன்னும் படம் பார்க்க நேரம் கிடைக்கலை! நண்பா!

    பதிலளிநீக்கு
  13. நல்வரவு சௌந்தர் அவர்களே! நீங்கதான் பதிவா போட்டு தாக்குறீங்க! வாழ்த்துக்கள்! (நற நற நான் உங்க பக்கத்துக்கு ஊர் ஆசாமியா இருந்திருக்க கூடாதா?) ஹி ஹி ஹி நலம்தானே

    பதிலளிநீக்கு
  14. அய்யா திருப்பூராரே! கிங் விஸ்வாமித்திரர் அவர்களையும் அங்கே காண கிடைத்தது. அவரும் ஸ்டாலின் அவர்களும் செய்த லூட்டி இருக்கே! யப்பா! மனுசங்களா அவங்க! அடாடாடா
    நீங்க தப்பிச்சீங்க! கலாய்த்தல் மன்னன்கய்யா!

    பதிலளிநீக்கு
  15. லேட்டா வந்ததும் நல்லதா போச்சு போனஸ் மிரட்டும் புகைப்படம் காண முடிந்ததே.
    நல்ல பதிவு நண்பரே.ஒவ்வொரு பதிவிலும் மிரட்டுகிறீர்கள் நண்பரே.
    த்டருங்கள் உங்கள் மிரட்டும் பதிவுகளை.
    பயப்பட நாங்க தயார இருக்கோம்.(நீங்க மட்டும் தான் உசுப்பிவிடுவீன்களா?)

    பதிலளிநீக்கு
  16. Welcome to the jungle! Krishhhnayya! "Inge sila thollaigal" athanal thamathamaga en phone moolam pathivukku mulam poosugiren. Nanri nanba! Mirattal thodarum ma!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...