அன்புள்ளம் கொண்ட நண்பர் பெருமக்களே வணக்கம்!
பெருமதிப்புக்குரிய ஆசிரியர்களில் கதை சொல்லும் ஆசிரியர் எப்போதுமே சிறப்பு வகிப்பார்;அனைத்து மாணவர்களின் அன்பையும் ஆதரவையும் எளிதாகப் பெறுவார். அவரை சுற்றி அவரது அன்பர்கள் கூட்டம் எப்போதுமே வலம் வரும். கதைக்கும் ஆசிரியருக்கு தனி மவுசு உண்டு.
* எனக்கு வாய்த்த ஆசிரியர் திரு.சிம்சோன் அவர்களும் அவரது மனைவி திருமதி.கலாவதி டீச்சர் அவர்களும் அவர்களது அன்பும் அரவணைப்பும் என்றுமே மறக்க இயலாத நிகழ்வுகள்! சாரிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. அவருக்கு தண்ணீர் டம்ளரில் கொண்டு சென்று கொடுத்தால் மேலே கொஞ்சம் தண்ணீரை ஊற்றிவிட்டு நடுவில் உள்ள தண்ணீரை குடித்து விட்டு அடியில் உள்ள நீரையும் ஊற்றிவிடுவார். அதற்கு அவர் சொல்லும் காரணம் இன்னும் விசித்திரமானதாக இருக்கும் மாசுகள் நீரின் மேல் மற்றும் அடியில்தான் தாங்குமாம்.
*எனது மணலூர்ப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் கே.என். (நாராயணன்) சார் ஒருமுறை பாடம் எடுத்துக் கொண்டு இருக்கும்போது திடீரென ஒரு நபர் அனுமதியின்றி உள்ளே புகுந்தார். யாருங்க நீங்க என்று விசாரித்தால் பதில் சொல்லாமல் சாக்பீஸை எடுத்து போர்டில் கிறுக்கினார்.
"HEA MISTAR BARMISAN"
பின்னர் தான் கொணர்ந்த நோட்டிசை எடுத்து எங்களிடம் காட்டினார்! அதில் நான் அனாதை எனக்கு உதவுங்கள் என்று எழுதி இருந்தது! அதைக் கண்டு கடுப்பான கே.என். சார் அந்த நபரை துரத்தி விட்டார். அவர் எழுதியது என்னவாக இருக்கும் என்று மிகவும் மண்டையை உடைத்துக் கொண்ட பிறகே புதிர் அவிழ்ந்தது.
"HEAD MASTER PERMISSION"
என்பதையே அவ்வண்ணம் எழுதியுள்ளார்.
*நானும் என் நண்பன் மற்றும் உறவினன் இளையராஜாவும் மணலூர்பேட்டையில் அந்த காலக் கட்டத்தில் இயங்கிவந்த ஒரு சில வாடகைப் புத்தக நிலையங்களின் தீவிர வாடிக்கையாளர்கள். வாங்குவது காமிக்ஸ் மட்டுமே! அதுவும் லயன் குழும காமிக்ஸ்களே வித்தியாசமான சைஸ்களிலும், நிறங்களிலும் வெகுவாக ஈர்க்கும்படி இருக்கும். டவுசர் பாக்கெட்களை நிறைய நிறைய திணித்தாலும் அவ்வளவாக வெளியில் தெரியாமல் கச்சிதமாக ஒளிந்து கொள்ளும். அப்படி வாங்கி பதுக்கிக் கொண்டு போன ஒரு ஆர்ச்சி புத்தகம்தான் "புரட்சித் தலைவன் ஆர்ச்சி!" வெறித்தனமாக சிறுநீர் கழிக்கும் சந்தில் இரு சிறுவன்கள் எதையோ ஒளித்து வைத்துக் கொண்டு படம் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? அந்த இடத்துக்கு வந்த ஆசிரியர் செந்தமிழ் செல்வன் கடுப்பாகி அந்த புக்கினை பிடுங்கி சென்று விட்டார். அது எங்க சார் இருக்கு???
*காமிக்ஸ் படித்தாலும் பாடங்களின் மீதும் காதல் கொண்ட என் சித்தப்பா இன்று பிரான்ஸ் தேசத்தில் செட்டிலாகி விட்டார். பின்னர் சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை! மாயத் தீவில் அலிபாபா இன்னும் வெச்சிருக்கீங்களா சித்தப்பா???
*என்னிடம் வாடகை கொடுத்தே காமிக்ஸ் படித்து அந்த நாட்களில் மிக நெருக்கமான நண்பர்களாக மாறிய பச்சை சட்டை பாலாஜி, குன்சு எ குணசேகரன், சரவணன், தத்துவம் என்று நாங்கள் செல்லமாக விளிக்கும் ராஜா என்று பள்ளி சிறுவர் பட்டாளம் வெகு நீளம்!
*இளையராஜாவையும் என்னையும் கடுப்பேற்றுவதற்காகவே களமிறங்கிய சித்தப்பா மகன் சங்கர் பாண்டிச்சேரி வரை சென்று ஞாயிறு சந்தையில் எடைக்குப் பிடித்து வந்ததில் யார் அந்த இரும்புக்கை மாயாவியும் அடக்கம்.
*சோழப்பாண்டிய புரம் முருகன் என்கிற இன்னொரு நண்பர் அந்தக் கால மாயாஜாலக் கதைகளை நம்பி, மோடி வித்தை புத்தகங்களை வாங்கி வசியம், ஆவி, ஏவல், பில்லி சூனியம் என்று பயம் காட்டி காமிக்ஸ் வாங்கிப் படிப்பார். அவருக்கு நாங்கள் செல்லமாக இட்டு அழைத்த பெயர் "மாண்ட்ரேக்".
*எங்கள் காமிக்ஸ் அலப்பரை தாங்க முடியாமல் கடியான நண்பர் மலையப்பன் எங்கிருந்தோ அள்ளி வந்த புத்தகங்களை கண்ணிலே காட்டிவிட்டு பதுக்குவதிலேயே குறியாக இருந்ததால் காமிக்ஸ் கொள்ளை அடிக்கும் படலமும் செய்திட நேர்ந்தது!
நிற்க!

நான் ராணி காமிக்ஸ் ரசிக்கையில் ஆசிரியர்.திரு.எ.சோதி அவர்களது கதைகளையும் மிகவும் இரசித்தேன். அந்த அற்புதமான கரங்களின் குழந்தை இலக்கியத்தில் இருந்து ஒரு சிறுகதை இங்கே பகிர்கிறேன்.
பஞ்ச தந்திர கதைகளைப் போல வெகுவாக ஈர்க்கும்படி கதைகளும் சித்திரங்களும் அமைந்து இருக்கும்! ஆமா பட்டாசெல்லாம் கவனமா பார்த்து வாங்குங்க நாலு கடை ஏறி இறங்கினாலும் தப்பில்லை! எங்க ஆயுதப் படை மைதானங்களில் தள்ளுபடி விலையில் உண்மையிலேயே நல்ல பட்டாசுகள் கிடைக்கும். உங்க அருகாமையில் அமைந்துள்ள ஆயுதப் படை மைதானங்களையும் ஒரு விசிட் அடிங்க நண்பர்களே!
வரட்டுமா?
வரட்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக