புதன், 30 டிசம்பர், 2015

இவன் வேறு மாதிரி.


-பொங்கல்.

-தீபாவளி.

-புத்தாண்டு.

-கிறிஸ்மஸ்.

-மிலாடி நபி. 

-ஈஸ்டர். 

-ரம்ஜான் என்று எத்தனை எத்தனைக்

கொண்டாட்டம் வந்தாலும் 

கொண்டாட வருவோரை 

வாவாவென்றும்,

கொண்டாடிப் பிரிவோரை 

நின்று செல் என்றும் 

உறவினராக இல்லை 

என்றாலும் உரத்து

அழைத்து அனுப்பி 

வைக்கும் ஆலமரம்தான் 

உங்கள் பகுதியின் போக்குவரத்துக் காவலர். 

உங்கள் நிம்மதி எங்கள் வெகுமதி.

போக்குவரத்தை நீ மதி.

அலட்சியங்களை நீ மிதி.

இதனை மனதில் 

நீ பதி.


-என்றும் அதே அன்புடனும், நேசமுடனும் உங்கள் இனிய நண்பன் ஜானி!

திங்கள், 21 டிசம்பர், 2015

கரைந்து மறைந்தவன்...


இனம் பார்த்துப் பழகினேன்
இடியுண்டு விழுந்தேன்.

மதம் பார்த்துப் பழகினேன்
மனமொடிந்து போனேன்.

சமூகம் பார்த்துப் பழகினேன்
சதி சறுக்கி விழுந்தேன்.

மொழி பிரித்துப் பழகினேன்
விழி நீர் வீழ விலகினேன்.

கட்சியின் வெளிச்சத்தில்
கரை வெட்டிகளின் பளபளப்பில்

தோரணங்களின் மயக்கத்தில்
விண் தொடும் விளம்பரங்களைப்

பார்த்துக் கலந்தேன்.
கால் தடுக்கி வீழ்ந்தேன்.

சாக்கடை மீதென் இனிய வதனம்.
இனி எழுவது சாத்தியமே இல்லை

என்றானதும் அப்படியே மறைந்து போனேன்
சூரியனின் முன் பனியாக.


ஆம். 
நான் கரைந்து மறைந்தவன். 

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

from the story of jesus..

வணக்கம் தோழமை உள்ளங்களே. அனைவருக்கும் வரும் கிறிஸ்துமஸ் தின முன் கூட்டிய நல்வாழ்த்துகள். புயல் வந்து கிழித்துப் போட்டது போன்று தாறுமாறாகக் கிடக்கும் தமிழகத்தில் உணவுப் பொருட்களை அள்ளி வழங்கிய அத்தனைக் கரங்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். உங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக.   


















மீண்டும் சந்திப்போம். என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 


புதன், 25 நவம்பர், 2015

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்.

வணக்கம் தோழமை உள்ளங்களே,
சென்னையை மொத்தமாக நனைத்தும், தமிழகத்தை ஒட்டுமொத்தமாகக் குளிப்பாட்டியும் கூவ நதி முதல் ஜீவ நதிகளெங்கும் பெருவெள்ளம் காணச் செய்து ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன் பெய்த பெரு ஊழி வெள்ளத்தைக் கண் முன்னே கொண்டு வந்து மக்களிடையே மனிதாபிமானத்தைத் திரும்பவும் நிலைநாட்டி, நிலையாமையை நெஞ்சில் பதித்துக் கொள்ள ஒரு வாய்ப்பளித்துப் பேருவகை புரிந்த மழை கற்றுக் கொடுத்த பாடங்கள் என்ன?



நன்றி தின மலர்.

நன்றி தினத் தந்தி.

நன்றி: தின மணி

நன்றி: தினகரன்.
அவர் ஒரு தேநீர் விற்பனையாளர். மிதி வண்டியில் தினமும் தேநீர் கொண்டு சென்று விற்பனை செய்பவர். அவரது பிழைப்பே அதுதான். இரண்டு தினங்களுக்கு முன் பாதாள சாக்கடையில் தவறி விழுந்து விட்டார். மிதி வண்டி தனியே விழுந்து விட்டது. அவர் சமயோசிதமாக செயல்பட்டு வட்ட வடிவ இரும்பு விளிம்பினைப் பற்றிக் கொண்டு குரல் கொடுத்ததால் மக்கள் உடனடியாக உதவிக் கரம் நீட்டி அவரைக் காப்பாற்றினர். நெருக்கடியிலும் அவர் உயிரைக் காத்தது அவரது சமயோசிதம். மக்களின் உதவிக் கரங்கள். இதனை ஒரு உதாரணமாகக் கொண்டு அனைத்து நண்பர்களும் நீங்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் சமயோசிதமாக முடிவினை வேகமாக எடுக்கவும், ஆபத்தில் மற்றவர்கள் இருப்பின் உதவிக் கரம் நீட்டவும் மறக்க வேண்டாம் என்று கூறிக் கொண்டு. மழை இல்லா கோடை நாட்களை கொஞ்சம் மனதில் இருத்துங்கள். தேவையான மழை நீர் சேகரிப்பு நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிற கோரிக்கையுடன் விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்.


 சிந்தியுங்கள். சிந்திக்கிறேன். சிந்திப்போம்.
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

வாழ்ந்தது போதுமா? _நிறைவின் வாயிலில்..!_vazhnthathu pothuma_a comics series from veerakesari magazine! final episode.

வணக்கங்கள் மற்றும் வந்தனங்கள் தோழமை நெஞ்சங்களே!
கடந்த பத்து மாத காலங்களாகக் கிண்டிக் கிளறி இறக்கி ஆற வைத்துப் பரிமாறும் இந்த அரிய புத்தகம்தான் இன்றைய பதிவு.
வீரத்தைக் கேசரியாகக் கிண்டிக் கிளறிப் பரிமாறி வெறுமே வாழ்ந்தது போதுமா? காமிக்ஸ் சுவையைக் கொஞ்சமே கொஞ்சமாகக் கூட சேர்த்து வாழ்வின் ருசியை உணருங்களேன் என்கிற கோரிக்கையுடன் பத்து மாதங்களாகச் சுமந்து திரிந்து கொண்டிருந்த சித்திரக்கதை இந்த "வாழ்ந்தது போதுமா?"
முதல் பதிவு:
http://johny-johnsimon.blogspot.in/2015/01/001-vazhnthathu-pothumaa-comics-series.html

ஒரு தொடரைத் தொடர் போன்றே வெளியிட்டால் நம் உடனடி உணவுப் பிரியர்களின் காலக்கட்டத்தில் எத்தனைப் பேர் தாக்குப் பிடித்து வாசிப்பார்கள் என்கிற ஆராய்ச்சியின் (ஹி ஹி உங்கள் பொறுமையை பொறித்து வறுத்து எடுத்து) விளைவாகத்தான் இந்த வாழ்ந்தது போதுமா சித்திரத் தொடரை சித்திர வடிவாகவே வெளியிடும் (கிறுக்கு?) யோசனை என்னுள் உதயமானது.
பத்து மாதங்கள் கருவாகச் சுமந்து, தமிழ்-ஈழத் தமிழ் சுவையைக் கலந்து உங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்த நாட்கள் என் வாழ்வில் விசேடமானவை. இந்த நாட்களில் யாரும் சீக்கிரம் முடியுங்கள் என்று அன்புத்தொல்லை விடுக்க மாட்டார்களா? என்கிற கேள்விக்கு முற்றுப் புள்ளி வைத்தவர் திரு. பாலாஜி சுந்தர் அவர்கள். இந்தக் கதையை ஆர்வத்துடன் வாசித்து வந்திருந்தால் மட்டுமே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்க முடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
இதற்கு மேலும் உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பாமல் இன்றைய நிறைவுப் பகுதிக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன். வாசித்து விட்டு வாருங்கள்!

















* ஒரு கதையின் நிறைவுப் பகுதியின் பலூனில் கதையின் தலைப்பு வருவது என்பது வித்தியாசம்தானே? "ஊரையும், உலகையும், ஏமாற்றி நீங்கள் வாழ்ந்தது போதுமா?"

*இந்தக் கதையின் நாயகன் இன்ஸ்பெக்டர் குமார் என்கிற முத்துவைக்
கவனித்தீர்களா?
இப்போது கீழே பாருங்கள்.


நம் மனம் கவர்ந்த நாயகன் முத்து ராமன். அல்லவா? இருவரது உருவ ஒற்றுமையையும் , கதாசிரியர் மற்றும் ஓவியர் திரு சந்ரா அவர்கள் காட்சிப்படுத்தியுள்ள விதம் கூடத் தனித்துவம் வாய்ந்ததுதானே? நம் நண்பர்கள் இந்தத் தொடர் வந்த பத்து மாதங்களும் ஒரு முறை கூட ஒற்றுமையை உணரவில்லையா?
இதை ஏன் இந்தத் தொடர் முடியும் தருணத்தில் கேட்கிறேன் என்றால் நம் நண்பர்கள் இப்போதெல்லாம் மேம்போக்கான வாசிப்பு என்கிற தளத்துக்கு நகர்ந்து வருவது ஒரு வாசகனாக எனக்குக் கவலை அளிப்பதாகவே இருக்கிறது. இன்னும் உணர்ந்து கதையுடன் ஒன்றும் கலையை மீண்டும் தூசு தட்டி எடுக்க வேண்டிய நேரம் இது தோழமை உள்ளங்களே.
நிறைய ஓவியக் கண்காட்சிகள் ஓவியரது தூரிகை ஜாலங்களைக் காட்சிப் படுத்துகின்றன. வெறும் ஒற்றை ஓவியமே ஓராயிரம் இதயங்களைக் கவர்ந்து விடுகிறது. அதிலும் நமக்குப் பிடித்த நாயகனை மையமிட்டு வரையப்பட்ட சித்திரங்கள் பலத்த வரவேற்பைப் பெறுவதைக் காண்கிறோம்.
சித்திரக் கதைகளும் தங்கள் வரையில் தனித்துவம் மிக்கவையே தோழர்களே. ஒவ்வொரு பிரேமுக்கும் உயிர் கொடுத்து, அடுத்த பிரேமுக்குள் தொடர்ச்சி விடுபடாமல் வரைவது என்பது நிச்சயம் ஒரு ஆழ்ந்த தியானமே என்பது என் தாழ்மையான கருத்து. அவசரப் போக்கில் அள்ளித் தெளித்து விட்டுப் போகும் கதைகளுக்கு நடுவில் இந்த வாழ்ந்தது போதுமா தொடர் கதை தனித்து நிற்கிறது. எங்கோ இலங்கை மண்ணில், நம் தமிழ் மொழிக்கு அழகு சேர்க்கும் விதத்தில், தமிழ் மண்ணின் நாயகனை மாடலாக வைத்து வரையப்பட்டு, எங்கும் பொருந்துமாறு கதையோட்டத்தை நீரோடை போன்று தெளிவாக ஒரு திரைக்காவியம் போன்ற திருப்பங்களுடன் வழங்கிய சந்ரா அவர்களுக்கும், அந்த சித்திரக்கதையினைப் பிரசுரித்துத் தமிழ் மண்ணின் மக்களைப் பெருமைப்படுத்திய வீர கேசரி இதழுக்கும், காணவே கிடைக்கா எத்தனையோ கதைகள் நம் தமிழ் நாட்டிலேயே எங்கெங்கோ ஒளிந்தும், தொலைந்து, அழிந்தும் வந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் என்றோ தனது சேமிப்பில் குருவி சேர்ப்பதைப் போல் சேர்த்து வைத்து உரிய காலம் வந்ததும் எடுத்து வெளிக்காட்டி, இதனை வெளியிடுவதை ஊக்குவித்து, எங்கும் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்ப்பிக்கும் விதமாகத் தன் சேமிப்பில் இருந்து எடுத்துக் கொடுத்த அருமை சகோதரர் திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், தொழில் நுட்ப உதவி அளித்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், திரு.சந்ரா அவர்கள் குறித்த தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட திரு.அபிஷேக் அவர்களுக்கும், திரு. பிரதீப் சுந்தரேஸ்வரன் அவர்களுக்கும், இதுவரை வாசித்தும், நேசித்தும் வந்த அனைத்து வாசக செல்வங்களுக்கும், இந்த நேரத்தில் என் அன்பினையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக-

அன்னாரது நினைவுகள் என்றும் வாழும் -இந்த வாழ்ந்தது போதுமா கதையும்.
என்றும் அதே அன்புடனும், நெகிழ்வுடனும் உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் இனிய நண்பன் ஜானி.  

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...