திங்கள், 6 ஜூலை, 2015

வாழ்ந்தது போதுமா_வீரகேசரி இதழ்_1972_பாகம் 031-1_A Rare Srilankan Tamil Comics!

வணக்கம் தோழமை கொண்ட உள்ளங்களே.
சென்னையில் காமிக்ஸ் தேடி பழைய புத்தகக் கடைகளைக் குடைந்தவன் நான். இன்றும் கண்டுபிடிக்க வேண்டிய அரிய காமிக்ஸ் வகைகள் நிறையவே உண்டு. அந்த நாட்களில் தெருவுக்குத் தெரு வாடகைப் புத்தக நிலையங்கள் இருந்தன. யார் சென்று வேண்டுமானாலும் எளிதாகத் தாங்கள் விரும்பும் நூல்களை வாங்கிப் படிக்கவியலும். காலப் போக்கில் அனைத்து வாடகைப் புத்தக நிலையங்களிலும் இருந்த தமிழ் காமிக்ஸ்கள் மங்கலாகி மறைந்தே போயின. இது ஒரு சிலரின் காமிக்ஸ் வியாபார வேட்டையால் நடந்ததா என்பதை நம் நண்பர்கள் அனைவருமே ஓரளவுக்கு அறிவோம். இந்த சூழலில் இது போன்று காமிக்ஸ் தேடி அலையும் சித்திரக் கதை நேயர்களுக்கு உதவிடும் விதமாக கிடைக்கும் புத்தகங்களை வைத்து ஒரு நூலகம் சென்னையில் நிறுவிட எண்ணி நானும் சொக்கலிங்கம் சாரும் களமிறங்கிய சேதி உங்களுக்குத் தெரியும். இன்னும் சிறிது காலத்தில் அது கட்டாயம் நடந்தே தீரும் என்று சொக்கலிங்கம் சார் உறுதி கூறுகிறார். இந்த எண்ணத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நண்பர் திரு.செந்தில் என்பவர் நேற்று வீடு தேடி வந்து ஒரு இரத்தப் படலம் பதினெட்டுப் பாகங்கள் அடங்கிய ஒட்டுமொத்த நூலை அன்பளிப்பாக நூலகத்துக்குப் பரிசளித்துள்ளார். இதைப் போன்று சில நண்பர்களது தொடர் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டே வருகிறது. இங்கே எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வந்து வாசிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்ய எண்ணியுள்ளோம். இது தவிர சிலப்பல் முயற்சிகள் நடந்தேறிய வண்ணம் உள்ளது. உங்கள் பங்கிற்கு நீங்கள் வைத்துள்ள இரண்டாவது காப்பி புத்தகங்களை நூலகத்துக்குக் கொடுத்து உதவலாம்.






































அப்புறம் வாழ்ந்தது போதுமாவின் இந்த அத்தியாயம் சனிகிழமை அன்றும் திங்கள்கிழமை இன்றும் ஒரே அத்தியாய எண்ணில் அதாவது முப்பத்து ஒன்று- வெளியிடப்பட்டுள்ளதுதான் இங்கு விசேஷம். கதை தன் இறுதிக் கட்டத்துக்கு வேகமாக நகர்ந்து கொண்டு உள்ளது. சிங் நல்லவனாகத்தான் இருக்கக் கூடும் என்ற எண்ணத்தினை ஒரு பெண்ணை சுட்டுக் கொலை செய்வதுடன் ஏறக் கட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. சிங்காரம் கெட்டப் பயலேதான். 

அடுத்து....
கல்லுக்குள் ஈரமிருக்கும் என்று பெண்ணே நீ
நிரூபித்து விட்டாய்.
 என்றும் அதே அன்புடன்---ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...