வெள்ளி, 26 ஜனவரி, 2018

உயிரைத் தேடி...005

Image result for republic day images
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
அடுத்தடுத்து தொடரினைத் தொடர்வது என்பது சவாலான காரியம்தான். அந்த சவால் எனக்கும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால் சரியான இடைவேளையில் ஒரு தொடரைக் கொண்டு வர நேரமும், காலமும், மனமும், உடலும், ஆன்மாவும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான் சாத்தியமாகிறது. உங்கள் அனைவருக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!

தன்னந்தனியாக வேறொரு மானிடப்பிறவி கண்ணில் தென்படாதா என்கிற ஏக்கத்துடன் தேடி அலைந்து கொண்டிருப்பவனுக்கு முன்னால் ஒரு விமானம் தரையில் மோதி சிதறுகிறது.. அதில் வந்த சிறுவனும் உடனே மரணமடைகிறான்..எப்பேர்ப்பட்ட ஏமாற்றம், இழப்பு, வேதனை சிறுவன் பிங்கியை (மார்க் டேவிஸ்) ஆட்கொண்டிருக்கும்? அதனை அந்த காலத்தில் வாசிக்க நேர்ந்திருக்கும் என்னைப் போன்றவர்கள் எத்தனை பதறிப் போய் இருப்போம்? இந்தப் பகுதி என் மனதில் ஏற்படுத்திய பாதிப்பு இன்றுவரை பசுமரத்திற் பதிந்த ஆணியாய்....

அடுத்தடுத்த பேனல்களில் திகிலைக் கூட்டுவதும் திகைக்க செய்வதும்தான் இந்தக் கதையின் போக்கு.... ஒற்றைக் கதையில் தங்கள் கதை, சித்திர ஆளுமையால் ராஜாங்கம் நிகழ்த்திக் காண்பித்துள்ளனர் டி.ஹார்ட்டனும், ஓவியர் ஓர்டிசும்.. ஈகிளின் கம்பீரமான தொடர்களில் ஒரு இறகு இது...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்...  

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி ஜி. தொடர்ந்த உங்கள் அனைவரது ஒத்துழைப்புடன்தான் ஒவ்வொரு சித்திரக்கதையையும் மீட்டெடுக்க இயன்றது. அந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை ஒவ்வொரு வாசகரும் நினைத்துப் பார்த்தல் நலம்.

      நீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...