புதன், 23 மே, 2018

RC 310 - அபாய நகரம் & RC 320 Pei Veedu- முகமூடி வீரர் மாயாவி.

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
இந்த ராணி காமிக்ஸ் அபாய நகரம் உருவாக்கத்தில் உதவிய நண்பர் திரு சதீஷ் அவர்களுக்கு எனது நன்றியும் அன்பும்...

இக்கதையை பிடிஎப் வடிவில் பெற...

320-pey veedu



ஞாயிறு, 20 மே, 2018

வெள்ளி, 18 மே, 2018

மெர்லினின் மந்திர டைரி - பாகம் இரண்டு-கோடைக்கொண்டாட்டம்...

பிரியமானவர்களே..
அனைவர்க்கும் என் வணக்கங்கள்.. இந்த மெர்லினின் மந்திர டைரியின் முதல்பாகத்தை போன வருட தீபாவளியினை சிறப்பிக்கும் விதமாகக் கொடுத்திருந்தேன்..
இந்த வருட கோடையை குளிர்ச்சியாக்கும் விதமாக இம்முறை இரண்டாம்பாகத்துடன் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி...
மொழி பெயர்ப்பில் ஆங்கில உவமைகள், உவமானங்கள்... போன்றவை ஆங்காங்கே கலந்து கட்டி உரையாடலை அமைத்து இருக்கிறார்கள். முடிந்தவரை அனைத்து விதமாகவும் பல்வேறு வலைதளங்களிலும் அலசி ஆராய்ந்து நான் என்னளவில் புரிந்து கொண்ட கதையினை உங்களுக்கு மையக்கருத்து சிதையாமல் கொடுத்திருப்பதாகவே நினைக்கிறேன். இதில் ஏதேனும் பிழை இருப்பின் தாராளமாக சுட்டிக்காண்பிக்கலாம்.
இதனை எழுதிய வரைந்து சிறப்பித்த படைப்பாளர்களுக்கே அனைத்து புகழும்...தமிழில் இப்படிப்பட்ட கதைகள் வெளியாகாதா என்கிற ஆதங்கத்தில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். இயன்றவர்கள் அசல் நூலையே நிறுவனத்தில் இருந்து வாங்கி ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
 
நன்றிகள்...



















ஜெர்மானிய ஆதி மொழியான ரூன்ஸ் குறித்து அறிந்து கொள்ள..


மார்க்ஸ் பிளான்க் பற்றி மேலும் அறிந்து கொள்ள 

இந்த பிரபஞ்சமே குவாண்டம் எனும் துகள்களால் நிறைந்தது என்பதே இவரது கொள்கை.

இந்தக் கதையை பிடிஎப் வடிவில் பெற..
                               http://www.mediafire.com/file/ydgr2i732tg24lg/som2.pdf

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...

வியாழன், 10 மே, 2018

ஆதி மனுஷி ஸானா....கோடை கொண்டாட்டம்...

வணக்கம் நண்பர்களே.. கதையை வாசியுங்கள்..உங்கள் ஆர்வத்தை இங்கே தடைபோட விரும்பவில்லை...
















































மீண்டும் வணக்கங்கள் நண்பர்களே...இந்தக்கதை ஒரு ஆராய்ச்சிப்பயணம் மேற்கொண்ட திருப்தியை உங்களுக்கு வழங்கி இருக்கும் என்று நினைக்கிறேன். கதை நடக்கும் காலப்பகுதி மூன்று வெவ்வேறு காலங்களில் நடக்கிறது. எப்போதுமே மனிதனையும் இயற்கையையும் ஒடுக்கும் போக்கே காணப்பட்டு வரும் இந்த உலகினில் ந்யூற்றினோ அல்லது நியூட்ரினோ ஆராய்ச்சி என்று ஆதிகுடிகள் மலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் நம் தமிழ் மண்ணில் இந்தக்கதையின் தாக்கம் நிச்சயம் உங்களை பாதித்திருக்கும்..பாதித்திருக்க வேண்டும்.. இயற்கையையும் அதன் வளங்களையும் சுரண்டி மனித குலத்துக்கே பேராபத்தை கொண்டு வருவதும் அதே மனித இனமே...
ஆராய்ச்சிகள் அனைத்துமே மனிதகுலத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே ஆராய்ச்சி மனிதனின் ஆதி குடிகளில் பண்பாட்டு, இருப்பிட, கலாச்சார, வளர்ச்சிகளை ஒருபோதும் ஒடுக்கி விடுவதாக அழித்து விடுவதாக அமைவதில் எனக்கும் உங்களுக்கும் ஒருபோதும் உடன்பாடிருக்க முடியாது. உணவு உடை உறைவிடம் ஆகியவற்றை அடிப்படைத்தேவையாகக் கொண்ட மனிதர்களுக்கு அவை மறுக்கப்படும் வேளையில் ஒடுக்கப்படும் சூழலில் அவர்களை கட்டுப்பாடு எனும் கயிறு போட்டு தடுத்து நிறுத்த முடியாது என்கிற சிந்தனைகளை இந்த கதை நம்மில் தூண்டி விடுவதே இந்தக்கதையின் வெற்றி... ஒடுக்கப்படும் ஆதி இனம்.. அதன் பின்னணி..  
இதனை தடுக்க நம்மாலான என்னாலான சிறிய பங்களிப்பாக இந்தக்கதையை தமிழில் கொண்டுவர கடும்பணிச்சூழலிலும் சில மாதங்களாகவே போராடிக் கொண்டு வந்துள்ளேன். இதனை வாசியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து இதனைப்பற்றி நான்கு வரிகள் உங்களுக்குள் விவாதியுங்கள்..அதுவே எனக்கும் இதனை உருவாக்கியோருக்கும் நீங்கள் கொடுக்கும் பெரிய அன்பளிப்பாகும்...
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய-இணைய நண்பன் ஜானி சின்னப்பன்...


இதனை காமிக்ஸ் சிபிஆர் முறையில் தரவிறக்கம் செய்ய...

இதனை பிடிஎப் முறையில் தரவிறக்கம் செய்ய...








வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...