புதன், 22 ஜூலை, 2026

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

 

வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இரு நூறு ரூபாய் விலையில் எழுபது ப்ளஸ் பக்கங்களுடன் ஜெ.வீரநாதன் என்கிற ஆசிரியரின் தலைமையில் உருவாகி இருக்கிறாள் இந்த நவீன நாயகி.. 

ஏ ஐ நுட்பத்தை வைத்து வந்திருக்கும் இரண்டாவது காமிக்ஸ் இது எனலாம். ஏற்கனவே ஷார்னிகா காமிக்ஸ் தனது வெளியீடுகளை சில மாதங்கள் முன்பே துவங்கி இருக்கிறார்கள். இந்த சித்திரக்கதை வெளியீடு செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பதிப்பகத்தின் கதை.. லயன் காமிக்ஸ் ஏற்கனவே தனது வெளியீடுகளை செயற்கை நுண்ணறிவின் துணையுடன் குறைந்த விலைகளில் காமிக்ஸ் கொண்டு வரும் அறிவிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.. அனைத்தும் ஏ ஐ மயமாகி வருகையில் இந்த சித்திரக்கதைகளும் அவற்றிற்கான ஸ்லாட்டுகளில் கச்சிதமாகப் பொருந்துகிறது. வாழ்த்துவோம்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Night crawler-இரவில் உலவுபவன்-மியூட்டன்ட் கதை முடிவு செய்தி

 நைட் கிராலரின் (Nightcrawler) கதை நிரந்தரமாக முடிவுக்கு வந்துவிட்டது 💔 1995-ல் 'X-Men: The Animated Series'-ன் "Nightcrawler...