வெள்ளி, 4 மார்ச், 2022

மூச்சற்றுப் போனவனின் முனகல்_ஜானி சின்னப்பன்

உறக்கமின்றி

பாயைப் பிறாண்டி

உன் பெயரை

புலம்ப வைத்து

மெல்ல மெல்ல 

மாயமாகிப்

போனாயே...

உன் புன்முறுவலில்

உயிர்த்திருந்த என்

உற்சாக தினங்களை

உன்னோடே 

கொண்டுபோய்

எங்கோ 

கொட்டிவிட்டாயே..

மாண்டவன்

மீண்டெழ 

வழியில்லாமல்

வனாந்தரத்தில்

வீசிப் போகிறேன்

வார்த்தைகளை..

வாய்ப்புள்ளோர்

வாசிக்கட்டும்

வாழ்விழந்தவன்

வாழ்க்கையை..

*ஜானி சின்னப்பன்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சித்திரக்கதை உருவாக்கத்தில் ஈடுபட்டோர் _ குறிப்புகள்...

ஜோசெட் பௌஜோட் 1922-2009 ஹெர்ஜ் ஸ்டுடியோக்களில் பல ஆண்டுகளாக தலைமை வண்ணக்கலைஞராகப் பணியாற்றிய இவர், ஜோ-எல் அசாரா என்ற புனைப்பெயர் கொண்ட ஜோசப்...