வணக்கங்கள் தோழமை உள்ளங்களே..
உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை வாழத்தான். தொடர்ச்சியாக நம்மில் பலர் மறைந்தாலும் நாமும் ஒருநாள் மறைவது நிச்சயம் என்றாலும் எங்கே இருந்தாலும் வாழ்க்கையை சோகம் கடந்து மகிழ்ச்சியை மனதில் அமர்ந்து கொள்ள இடமளித்தால் வாழ்க்கையே வரமாகி விடும். இந்த சிந்தனைகளுடன் இந்த பதிவுக்குள் கடந்து செல்வோம்.
கறுப்பு முகமூடி: நமது முகமூடி வேதாளர் என்னும் பிரம்மாண்ட கதா நாயகரை மனதில் கொண்டு வரையப்பட்ட ஓவியங்களை மனதில் கொஞ்சம் தாண்டி வந்து விட்டால் இந்த கதை நன்றாகவே இருக்கிறது. நாயகர் தனது உளவு நெட்வொர்க் மூலமாக ஒரு அரசு அலுவலகம் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து அங்கே சென்று சதிகாரர்களின் ஆட்டத்துக்கு முடிவு கட்ட முயல்கிறார். ஏகப்பட்ட மோதல்.. முகமூடி தாக்கப்பட்டு கொள்ளையர்களின் இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார். ஐயகோ.. அவரை ஒரு கூண்டுக்குள் போட்டு இருபுறத்திலும் இரும்பு சுவர் கொண்டு நசுக்க முற்படுகிறார்கள் கடத்தல்காரர்கள்.. அதிலிருந்து எப்படித் தப்புகிறார்? எதிரிகள் வீழ்ந்தனரா என்பதை பரபரப்பான காட்சிகளாக நம் முன் விருந்து படைத்திருக்கிறார்கள் மலர் காமிக்ஸ் நிறுவனத்தினர். பதிப்பாசிரியர் திரு. கே.பாண்டிமணி அவர்களை பிரதானமாகக் கொண்டு மதுரை, வெண்கலக் கடைத்தெருவில் முன்னர் இயங்கிய மலர் பப்ளிகேஷனின் படைப்பினை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர இந்த அபூர்வமான புத்தகம் ஸ்கேன் ஆகும்போது ஏதும் கிழித்துக் கொள்ளுமோ, எதிர்காலத்தில் நல்ல விலைக்கு அபூர்வமான புத்தகம் ஐயா என்று சொல்லி நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பில் ஏதும் பிரச்சினை எழுமோ என்கிற எந்த பிரச்சினையையும் நினைத்துப் பார்க்காமல் உங்கள் அன்பும் அக்கறையும் இந்த காமிக்ஸ் வாசக உலகிற்கு தேவை என்று தானே முன்வந்து புத்தகங்களை ரிஸ்க் எடுத்து அனுப்பி வைத்த அன்புத் தம்பி டெக்ஸ் சம்பத் அவர்களை இந்த நேரத்தில் மகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். இந்த புத்தகம் டிஜிட்டல் மயமாக பல ஆண்டுகள் முன்னரே ஸ்கேன் செய்வதற்கு கொடுத்து உதவிய நல்ல உள்ளத்துக்கு என் நன்றிகள். இந்த புத்தகத்தை வாசிப்பதுடன் தங்கள் மேலான கருத்துக்களையும் பதிவு செய்து தங்களிடம் இதுபோன்ற அபூர்வ காமிக்ஸ்கள் இருப்பின் அவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். இதில் தயக்கம் எதுவும் தேவையில்லை. அதே சமயம் உங்கள் நூல்களை டிஜிட்டல் மயமாக்க விரும்பினால் காமிக்ஸ் நண்பர்கள் உதவ எப்போது காத்திருக்கிறார்கள். இலவசமாகப் பெற்றேன் இலவசமாகவே கொடுப்பேன் என்கிற எனது கொள்கை உங்களிடமும் இருந்தால் வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம். இது ஒரு தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் டிஜிட்டல் முயற்சி.. (முக நூலில் Tamil comics Times என்கிற காமிக்ஸ் குழுவிலும் இயங்கி வருவதால் அவ்வப்போது அதனையும் சுட்டிக்காட்டுவது என் வழக்கமுங்க!)
அருமைங்க போலீஸ்கார் சார்.
பதிலளிநீக்கு