வியாழன், 21 ஜூலை, 2022

பித்தன் இவன் பிதற்றுகிறேன்_ஜானி சின்னப்பன்

 உன்னை நினைத்து நினைத்தே எழுத்துக்குள் சிக்குண்டு தள்ளாடித் திரிந்து சாய்ந்தே கிடக்கிறது என் பேனா..


உற்சாகம் நீ..

உத்வேகம் நீ..

என் வேதம் நீ..

என் சுவாசம் நீ..


தேடித்திரியும் கண்கள்..

நின்று துவங்கும் மூச்சு..

துடிக்க மறக்கும் இதயம்..

தளும்பக் காத்திருக்கும் கண்ணீர்..


உன் அண்மைகள் உற்சாகத்தைக் கொடுத்தன..

உன் இன்மைகள்

உறங்கா விழிகளை 

பரிசளித்தது..


நீயின்றி நீங்கட்டும் இந்த உயிரும் உடலும்..


நீதானே என் இனிமைமிக்க இறந்த. காலம்..


நீயே என் எதிர்காலமென்றால் எத்தனை இன்பம் என் உள்ளம் புகும்.. சாகாப்  பெருவாழ்வல்லவா கிட்டும்..?!?

#கவியதிகாரம்

#விஜயா மைந்தன்

#ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மாயக் காட்டின் மரணச் சிரிப்பு_ஜானி அமானுஷ்ய சாகசம்

  பின்னணி: திருவண்ணாமலை மலைத்தொடரின் ஆழமான ஒரு அடர்ந்த காடு. அங்கே பல நூற்றாண்டுகளாக ஒரு சாபமுற்ற கிராமம் இருப்பதாகக் கூறப்படுகிறது. காட்சி...