ஞாயிறு, 16 அக்டோபர், 2022

காத்திருப்பின் சுகங்கள்.. _விஜயா மைந்தன்

 

இன்னும் எத்தனை ஜென்மம்தான் காத்திருப்பதென்றாலும் சுகமே...

கடைக்கண் பார்வையிலென்னைக் கட்டிப் போட்டுப் போனவளே..விடுவித்திட ஒரு நாள் வருவாய் என்ற நம்பிக்கையுடன் வினாடி முட்களின் சங்கீதத்தில்..

மணித் துளிகளின் நகர்வின் இன்னிசையில்..

வருடிப் போகும் காற்றில்..

உன் வரவை எதிர் நோக்கி உயிர் மூச்சை ஸ்தம்பனம் செய்து காத்திருப்பேன்..

என் ஆகாயமே..

உன் கருணை மழைப் பொழிவை சீக்கிரம் கொடுத்தென்னை மீட்டெடு..உயிரில் கலந்த உன் இதமான சுவாசக் காற்று அன்றொரு நாள் என்னைத் தழுவிப் போன நினைவுகளுடன்..

_ஜானி சின்னப்பன்

#ஓவியஅதிகாரம் #chapterart #jscjohnyvisuals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...