ஞாயிறு, 25 டிசம்பர், 2022
ஏலமய்யா ஏலம்!_கிறிஸ்துமஸ் 2023_கலாட்டா
வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. இந்த ஏலம் சூழ் உலகினிலே.. ஒரு சின்னஞ்சிறு கதை..
பாதாள லோகத்தில் கிறிஸ்துமஸ்_ஹெல் பாய் அறிமுகம்..
இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல் வாழ்த்துக்கள் நட்புக்களே!
ஹெல் பாய் திரைப்பட வடிவில் ஏற்கனவே தமிழக இரசிகர்களின் மனதுக்கு நெருக்கமானவராகி விட்டார். அவரது மூன்று திரைப் படங்கள் கலக்கி இருக்கின்றன.. இதோ காமிக்ஸ் வடிவில்.. கிறிஸ்துமஸ் தின அன்பளிப்பு..
https://www.mediafire.com/file/33w4u1rek338mfu/bathala+logaththil+xmas.pdf/file
வியாழன், 15 டிசம்பர், 2022
036-வரப் போகிறவர் _விவிலிய சித்திரக் கதை வரிசை
கிறிஸ்துவுக்குள் பிரியமான என் அன்பு சகோதர சகோதரிகளே.. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் மாதமாம் டிசம்பர் மாதத்தில் விவிலிய சித்திரக் கதை வரிசையின் முப்பத்தி ஆறாவது புத்தகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கு என் அட்வான்ஸ் கிறிஸ்மஸ் நலவாழ்த்துக்கள்..
for pdf download:
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய தோழன் ஜானி
திங்கள், 5 டிசம்பர், 2022
ஒரேயொரு பீர் சொல்லேன் செல்லம்?!
வணக்கம் பிரண்ட்ஸ்.. முன்னே பின்னே தெரியாத ஷாப் ஒண்ணுக்கு உள்ளே போகுறதுக்கு முன்னால ஒண்ணுக்கு ரெண்டு தபா யோசிச்சி அப்புறம் முடிவெடுங்க.. இல்லாங்காட்டி.. ஹீ!ஹீ!ஹீ!
தரவிறக்கம் பண்ணுறதுக்கு முன்னால கூட ஒண்ணுக்கு ரெண்டு தபா யோசிச்சு பண்ணுங்க பாஸ்..:
கில்லர் 005 _மாயா காமிக்ஸ்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 45 வயது சுட்டியான அடியேன் உங்கள் வீட்டு சுட்டிகளுக்கு அன்பளிப்பாக அளிக்கும் 1974 களின் அதிரடி காமிக்ஸ்தான் இந்த கில்லர் 005. இருபத்தைந்து பைசா விலையில் அந்த காலத்தில் இருபத்தைந்து பைசாவின் மதிப்பு அதிகம். இந்த முழு நீள அதிரடி சித்திரக்கதை உருவாகி இருக்கிறது..
எண் 58, வன்னியர் தெரு, சென்னை -24 என்கிற முகவரியில் இயங்கி வந்த மாயா காமிக்ஸ் அநேகமாக கோடம்பாக்கம் -சூளை மேடு பகுதிகளுக்குள் இருக்கலாம். கரும்பு அண்ணாவின் படைப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து மாயா காமிக்ஸ் யாரேனும் அளித்தால் அதனையும் நம்மால் இயன்ற வகையில் டிஜிட்டல் வடிவில் மாற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. எண்ணற்ற நண்பர்களின் ஒத்தாசையுடன் இந்த டிஜிட்டல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்கள் உதவியும் எப்போதும் அவசியம். இந்த நூலை நமக்கு வழங்கி டிஜிட்டல் வடிவில் மாற்ற ரிஸ்க் எடுத்தவர் திரு. டெக்ஸ் சம்பத். அவருக்கும் அவரைப் போன்று எப்போதும் உதவ தயாராக இருக்கும் தோழர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. இது நம் தலைமுறை கடந்த பாதுகாப்பு முயற்சி.. உரிய முக்கியத்துவம் கொடுப்போமே ப்ளீஸ்..
வைர நெக்லஸ், திருட்டு, துப்பாக்கி, சண்டை, போலீஸ், ஆள்மாறாட்டம், மாறுவேடம் என மசாலா மணக்க மணக்க பரிமாறி இருக்கிறார்கள் மாயா காமிக்ஸ்..
பரபரப்பான ஆக்ஷன் கதைக்களம் இந்த கில்லர் 005. உங்களுக்கு டிஞ்சர் டயபாலிக்.. ஹெ ஹெ டேஞ்சர் டயபாலிக் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. நல்லவனுக்கு நல்லவன் இந்த கில்லர் 005. மாறுவேட ஜித்தன்.. மாண்ட்ரேக் பித்தன்.. எப்படியும் உருமாறுவான்.. தீயோரை சதி செய்து வீழ்த்துவான். உங்கள் மனதில் துண்டு போட்டு இடம் பிடிக்க
வருகிறான் வருகிறான் வருகிறான். உஷார்..
தரவிறக்கி வாசித்து மகிழ்க:
வியாழன், 1 டிசம்பர், 2022
பாகம் 03 நரகத்தின் எல்லையில்.. (இறுதி பாகம்)
வணக்கம் தோழமை உள்ளங்களே.. திறமையான கதையாடல், ஓவியங்களில் பிரம்மாண்டம் என்றிருக்கும் இந்த நிறைவுப் பகுதியை வாசித்து மகிழுங்கள். நம் நண்பர் திருப்பூர் குமார் அவர்களின் பிறந்த தினத்தில் இந்த தமிழாக்கத்தை அன்பளிக்கிறேன். வாசித்து பிடித்திருந்தால் இந்நூல் எதிர்காலத்தில் தமிழில் வரும் எனும் பட்சத்தில் உங்கள் அனைவரது பலத்த ஆதரவை நல்கினால் மகிழ்வேன். தொடர்ந்து சித்திரக்கதைப் படைப்புகளை ஆதரிப்போம். சிறு வட்டமிது.. தழைத்து நிற்க உதவுவோம் என்கிற செய்தியுடன்..
மூன்று பாகங்களையும் வாசிக்க சுட்டி..
பன்ட் (எ) ஜான் வான் டெர் ஆ _ஓவியர் _சிறு அறிமுகம்
பெல்ஜியத்தில் ஜனவரி 14 1927 ல் பிறந்த ஜான் வான் டெர் ஆ தனது புனைப்பெயரால் பன்ட் என்று அழைக்கப்படுகிறார். சித்திரக்கதைகள், கவிதைகள் ஓவியங்கள் என்று மிகவும் சிறந்த பல படைப்புகளைக் கொடுத்தவர். வான் டெர் ஆ 1927 இல் ஆண்ட்வெர்ப், ஹெமிக்செமில் பிறந்தார். அவரது தந்தை ஒரு கிடங்கு எழுத்தராக இருந்தார். சிறுவயதிலிருந்தே ஓவியம் மற்றும் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்த அவர், சுமார் ஒரு வருட காலம் வரைதல் மற்றும் ஓவியம் வரைவதில் தனிப்பட்ட பாடங்கள் மூலம் தனது திறமைகளை மெருகேற்றினார். அவரது கிராஃபிக் தாக்கங்களில் கான்ஸ்டன்ட் பெர்மேக் மற்றும் குஸ்டாஃப் டி ஸ்மெட் ஆகியோர் அடங்குவர். அவர் ஆண்ட்வெர்ப்பில் உள்ள ராயல் அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸுக்குச் சென்றார், ஆனால் 1940 இல் இரண்டாம் உலகப் போர் வெடித்ததால் இறுதியில் பள்ளி மூடப்பட்டது. வான் டெர் ஆ ஒரு அப்ரண்டிக் பேக்கராக வேலைக்குச் சென்றார், ஒரு பிரிண்டிங் நிறுவனத்தில் ஒரு எழுத்தராக இருந்தார், இறுதியில் அவரது மாமாவின் நோட்டரி அலுவலகத்தில் தனது எழுத்தர் தொழிலைத் தொடர முடிந்தது. வான் டெர் ஆ தனது ஓய்வு நேரத்தில் ஓவியங்கள், வரைபடங்கள், மரக்கட்டைகள் மற்றும் லினோ-வெட்டுகளை உருவாக்கினார். ஒரு கவிஞராக அவர் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக எழுதினார். 2002 இல் அவரது கவிதையான 'கேன்வாஸ்' ப்ரிஜ்ஸ் வான் டி விளாம்ஸே வ்ரெடெஸ்பிவேகிங் ("தி பிளெமிஷ் விடுதலை இயக்கம்") விருது பெற்றது.
அவரது படைப்பான தி புரபஸர் மிகவும் புகழ்பெற்ற காமிக்ஸ் தொடர். வரைந்து கொண்டிருந்த ஓவியம் ஒன்று வெயில் தாங்காமல் தன் கோட்டைக் கழற்றி வைப்பது நகைச்சுவையாக ஓவியமாக்கப்பட்டிருப்பது இவரது கைவண்ணமே.
அன்னாரது வலைதளம்:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்
வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...