திங்கள், 5 டிசம்பர், 2022

கில்லர் 005 _மாயா காமிக்ஸ்

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 45 வயது சுட்டியான அடியேன் உங்கள் வீட்டு சுட்டிகளுக்கு அன்பளிப்பாக அளிக்கும் 1974 களின் அதிரடி காமிக்ஸ்தான் இந்த கில்லர் 005. இருபத்தைந்து பைசா விலையில் அந்த காலத்தில் இருபத்தைந்து பைசாவின் மதிப்பு அதிகம். இந்த முழு நீள அதிரடி சித்திரக்கதை உருவாகி இருக்கிறது.. 
எண் 58, வன்னியர் தெரு, சென்னை -24 என்கிற முகவரியில் இயங்கி வந்த மாயா காமிக்ஸ் அநேகமாக கோடம்பாக்கம் -சூளை மேடு பகுதிகளுக்குள் இருக்கலாம். கரும்பு அண்ணாவின் படைப்புகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்து மாயா காமிக்ஸ் யாரேனும் அளித்தால் அதனையும் நம்மால் இயன்ற வகையில் டிஜிட்டல் வடிவில் மாற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. எண்ணற்ற நண்பர்களின் ஒத்தாசையுடன் இந்த டிஜிட்டல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்கள் உதவியும் எப்போதும் அவசியம். இந்த நூலை நமக்கு வழங்கி டிஜிட்டல் வடிவில் மாற்ற ரிஸ்க் எடுத்தவர் திரு. டெக்ஸ் சம்பத். அவருக்கும் அவரைப் போன்று எப்போதும் உதவ தயாராக இருக்கும் தோழர்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.. இது நம் தலைமுறை கடந்த பாதுகாப்பு முயற்சி.. உரிய முக்கியத்துவம் கொடுப்போமே ப்ளீஸ்..   


வைர நெக்லஸ், திருட்டு, துப்பாக்கி, சண்டை, போலீஸ், ஆள்மாறாட்டம், மாறுவேடம்  என மசாலா மணக்க மணக்க பரிமாறி இருக்கிறார்கள் மாயா காமிக்ஸ்..   

பரபரப்பான ஆக்ஷன் கதைக்களம் இந்த கில்லர் 005. உங்களுக்கு டிஞ்சர் டயபாலிக்.. ஹெ ஹெ டேஞ்சர் டயபாலிக் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. நல்லவனுக்கு நல்லவன் இந்த கில்லர் 005. மாறுவேட ஜித்தன்.. மாண்ட்ரேக் பித்தன்.. எப்படியும் உருமாறுவான்.. தீயோரை சதி செய்து வீழ்த்துவான். உங்கள் மனதில் துண்டு போட்டு இடம் பிடிக்க 
வருகிறான் வருகிறான் வருகிறான். உஷார்.. 
தரவிறக்கி வாசித்து மகிழ்க: 

9 கருத்துகள்:

  1. Wow..Excellent ji..😍😃👍

    Shribabu, Namakkal

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...