சனி, 30 மார்ச், 2024
வேதாளர் திருமணம்-வண்ணத்தில் வி காமிக்ஸ்
திங்கள், 25 மார்ச், 2024
கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு
இனிய வணக்கங்கள் தோழர்களே..
இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்பெஷல் -2.
முந்தைய பதிவில் மார்ச் மாதத்தில் வெளியாகி இருக்கும் அனைத்து சித்திரக்கதைகளையும் விளக்கி இருக்கிறேன். வாசிக்காதவர்கள் வாசித்து விடுங்கள்..
அதற்கான லிங்க் இதோ: https://johny-johnsimon.blogspot.com/2024/03/blog-post.html
கிளாசிக் ஸ்பெஷல் -2
மொத்தம் பன்னிரண்டு கதைகள்
-ஹிட் மேன்
-பவேரியாவில் ஹிட் மேன்
-பொரானியாவில் ஹிட் மேன்
-பொம்மை ப்ளேன்???
-மூளைத்திருடர்கள்
-வெகுமதி வேட்டையன் -1
-வெகுமதி வேட்டையன் -2
-வெகுமதி வேட்டையன் -3
-வெகுமதி வேட்டையன் -4
-வெகுமதி வேட்டையன் -5
-மரணப்பொறி -கிளென்ஸி அண்ட் மான்ப்ரெட்
-வைரக்கொள்ளை
நான்கு மொழிபெயர்ப்பாளர்கள்
சதீஷ் அழகு, சிவகங்கை
கார்த்திகேயன், புதுச்சேரி
தங்கவேல், கோயமுத்தூர்
ராஜேஷ், சேலம்
என பிரம்மாண்டமான செட் அப்புடன் இந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் அதிரடி காட்டியிருக்கிறது வகம் காமிக்ஸ். எடிட்டர் கலீல் அவர்களின் அடுத்தடுத்த பரபரப்பான அறிவிப்புகளும் இந்த வெளியீட்டுக்கு சிறப்பான தன்மையைக் கொடுத்திருக்கிறது.
ஆடம் ஒயில்டு, சைனாமேன் என்று புதிய இலக்குகளையும் ஆர்வமூட்டும் வகையில் விளம்பரங்களாக காட்சிப்படுத்தி அந்த வெளியீடுகள் இப்போதே நம் கையில் தவழாதா என்கிற ஏக்கத்தை உண்டு செய்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை..
நூற்றுப் பதினாறு பக்கங்கள், இருநூற்றுப் பத்து ரூபாய் விலை பெரிய சைஸ் என்று இந்த கிளாசிக் ஸ்பெஷல் என்றும் நினைவில் நிற்கும்..
வெள்ளி, 22 மார்ச், 2024
மார்ச் மாத காமிக்ஸ் வெளியீடுகள்
வணக்கம் தோழமைகளே..
மார்ச் மாத சித்திரக்கதை வெளியீடுகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்ப்போமா?
லயன் காமிக்ஸ்_மார்ச் 2024
-புயலுக்குப் பின்னே பிரளயம்_லயன் காமிக்ஸ்_மார்ச் 2024.
இது ஒரு டெக்ஸ் வில்லர் டிடெக்டிவ் ஸ்பெஷல்.. கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தை டெக்ஸ் அண்ட் கார்சன் காண்கிறார்கள். அந்த பெண்ணின் பின்னணியை விசாரிப்பதில் மும்முரம் காட்டும் டெக்ஸ் ஜோடிக்கு அடுக்கடுக்கான சோதனைகள். அதனை எப்படி முறியடித்து தங்கள் துப்பறியும் திறமையால் குற்றவாளியை அடையாளம் காண்பிக்கிறார்கள் என்பதனை அதிரடிகள் பலவற்றுடன் சிறப்பாகக் கையாண்டிருக்கிறது டெக்ஸ் வில்லரின் புயலுக்குப் பின்னே பிரளயம். இது லயன் காமிக்ஸின் 445வது வெளியீடு.
விலை ரூபாய் நூற்றைம்பது. பக்கங்கள் கருப்பு வெள்ளையில் 184. அசத்தும் ஓவியங்கள் கருப்பு வெள்ளை நிறத்தில் மாயாஜாலம் நிகழ்த்துகின்றன..
மார்ச் வெளியீடு இரண்டு
ஆர்டிக் பகுதி, அண்டார்டிக் பகுதி நம் அன்பான பூமி கிரகத்தின் வட, தென் துருவங்கள். அவற்றினை மையமாக வைத்து நிறைய திரைப்படங்களும், சித்திரக்கதைகளும் வெளியாகி இருக்கின்றன. இந்த ஆர்டிக் அசுரன் அதில் ஒன்று. ஆர்டிக் பகுதியில் வசிக்கும் மக்கள் வெண்டிகோ என்கிற அசுரன் மான் கொம்புகளுடன் அந்த பகுதிகளில் சுற்றி அலைவதாகவும் மனிதர்களைக் கண்டால் உடனே கொன்று விடுவான் என்றும் பல கட்டுக்கதைகள் உலாவி வரும் நிலையில் அங்கே வைக்கிங் கும்பல் குடியேறி இருந்த தொல் தடங்களை ஆராயப் புகும் குழுவில் நமது மார்ட்டின் மற்றும் குழுவினர் பங்கேற்கிறார்கள். அதன் பின்னர் நடைபெறும் பல மர்மமான சம்பவங்களும் இறுதியில் அதற்கொரு நியாயம் கற்பித்தலும் இந்த கதையினை தனித்து தெரிய காரணமாகின்றன..
தரமான சம்பவத்துடன் கலக்கலாக வெளியாகி இருக்கிறது கிளாசிக் ஸ்பெஷல்-2 பலப்பல கதைகள், திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் என்று சிறப்பாக வெளியாகி இருக்கிற இந்த 210/- ரூபாய் சித்திரப் புதையல் கண்டிப்பாக நீங்கள் வாங்கி மகிழ வேண்டிய ஒன்றே.. இந்த மாதம் வெளியாகி இருக்கும் ஒவ்வொரு காமிக்ஸும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக உருவாகியுள்ளன.. இப்போது சாய்ஸ் உங்கள் கையில்.. நீங்கள்தான் உங்களுக்கான கதையை தேர்ந்தெடுத்து வாங்கி வாசித்து மகிழ வேண்டும்.. காமிக்ஸ் உலகம் களைகட்டி வரும் இவ்வேளையில் ஒரு மாத வெளியீடுகளையாவது ஒரே பதிவில் அலச வேண்டும் என்கிற பேரவாவில் வலைப்பூ தொடுத்திருக்கிறேன். இரசித்து மகிழுங்கள்.. அடுத்த பதிவு கடைசியாக வெளியாகி இருக்கும் வகம் பற்றி கொஞ்சம் விரிவாக இருக்கும்.. நன்றி.. என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..
வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்
வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...