வியாழன், 31 அக்டோபர், 2024

பீட்டர் பைப்பர்_அறிமுகம்

 வணக்கம் தீபாவளி கொண்டாடி மகிழும் வாசகர்களே.. 

இந்த நாள் இனிமையான தினமாக உங்களுக்கு அமைந்து கொண்டிருக்கும் என்கிற மகிழ்வலைகளுடன் இந்த பதிவினை இடுகிறேன். உங்களுக்குக் குழலூதும் கண்ணன் பிடிக்கும் அல்லவா? 

விக்கிபீடியா தகவல் 

இந்து தொன்மவியலின் படி திருமாலின் வராக அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் நரகாசுரன் ஆவார். இவர் தன்னுடைய பெற்றோர்களால் தான் மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் வாங்கியதாகவும், அதன் காரணமாக திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து நரகாசுரனை கொன்றதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

நரகாசுரனின் மரணத்தினை தேவர்கள் கொண்டாடியது போல மக்களும் கொண்டாட வேண்டும் என்று சத்யபாமா கிருஷ்ணரிடம் வரம் வாங்கியதால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.[1] "என் இறப்புக்கு யாரும் அழக்கூடாது; வருத்தப்படக்கூடாது; என்னுடைய இறப்பை அனைவரும் மகிழ்வாக கொண்டாடவேண்டும்; 16 வகை பலகாரம் படைத்து கொண்டாடவேண்டும்" என்று கூறியுள்ளார் நரகாசுரன்.

ஆக இன்றைய தினம் நல்லதொரு மகிழ்வான தினமாக அமைய வேண்டும் என்பது குழலூதும் கண்ணனின் செய்தியும் கூட.. இதோ பீட்டர் பைப்பரும் கூட குழலூதும் சிறுவன்தான்.. 

பீட்டர் பைப்பர் என்கிற சிறுவனிடம் மந்திரக் குழல் ஒன்று உள்ளது. அதனை ஊதி மந்திரப் பேனாவால் வரைந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுக்கும்போது ஏற்படும் கலாட்டாக்கள் என்னவென்று இந்த கதையில் நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள்.. 

கூடுதலாக இதனையும் தெரிந்து கொள்ளலாமே.. 

"கி. பி. 1284-ஜூன் 26 ஆம் தேதி-செயின்ட் ஜான் மற்றும் செயின்ட் பால் நாள்-130 குழந்தைகள் – ஹேமலினில் பிறந்தவர்கள்-பல வண்ண துணிகளை அணிந்த ஒரு பைபர் குழலூதி செல்ல நகரத்திலிருந்து வெளியேறினர் செயின்ட் கோப்பன்பெர்க் அருகே கல்வாரியைக் கடந்து சென்ற பிறகு அவர்கள் என்றென்றும் மறைந்துவிட்டனர்.

பைப்பர் ஊர் ஊராக சென்று குழலூதி பணம் பெற்று செல்பவன். அப்படி இருக்கையில் ஒரு ஊரில் காசு தராமல் அவமானப்படுத்தி விட்டனர் என்பதால் அந்த ஊரில் எலிகளை குழல் ஊதி ஏவி விட்டதாகவும், அந்த ஊரின் சிறுவர் குழாமை தன்னுடன் அழைத்து சென்று விட்டதாகவும் கதை போகிறது.. 

எனது தீபாவளி வாழ்த்துக்களுடன் உங்கள் நண்பன் ஜானி.. 


மத்தாப்பாய் மலர்க_தீபாவளி வாழ்த்துக்களுடன்..

 அன்பின் இனிய தமிழ் காமிக்ஸ் விரும்பும் இதயங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. கூடுதலாக நம்மவர் குணா கரூர் அவர்களுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் நம் அன்பின் பிரதிபலிப்பாக இதோ தொடர்கிறது சித்திரக்கதைகள் அன்பளிப்பு.. 



-புத்தகமாகக் கொடுக்க முடியாவிட்டாலும் அபூர்வமான ஒரு விண்டேஜ் ஸ்பை த்ரில்லர்  காமிக்ஸ், தேடல் நிறைந்த ஒருவனின் சித்திரக்கதை, மற்றும் தனி இரகத்தில் பழிதீர்த்த  பட்டாசு..

    நரகாசுர வதம்தான் தீபாவளி.. அவன் செய்த கொடுமைகளைக் களையெடுக்க இறைவன் ஆடும் புதிர் ஆட்டம்தான் தீபாவளி.. தான் இறக்கும்போது மனம் திருந்தி என் மரணம் மூலமாகவாவது தலைக்கனத்துடனும் திமிருடனும் உலகை அடக்கியாள முயலும் யாரும் அது ஒரு கானல் நீர் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நரகாசுரர் தன் இறுதி மூச்சினில் தன் இறப்பைக் கொண்டாடும் விதமாக இறைவனிடம் கேட்டு வாங்கிய வரமே இந்த தீபாவளி.. தீப ஒளி தங்கள் இல்லங்களையும் உள்ளங்களையும் நிறைக்கட்டும்.. வாழ்த்தி மகிழ்கிறேன்..

ஆல்வார் மேயர்

https://www.mediafire.com/file/3i346xsgjn7ep32/alwar_meyor_2024_diwali_Special.pdf/file


மைக்கேல் சான்ஸ் புத்தம்புதியதாக மாற்றப்பட்டு..

https://www.mediafire.com/file/p77az7lkljrddrc/Michael_Chance_Diwali_2024.pdf/file


பழிதீர்த்த பட்டாசு..

https://www.mediafire.com/file/bckhbjp15fhjicz/Pazhi_Theertha_Pattaasu_diwali_2024_jscjohny.pdf/file

என்றும் அதே அன்புடன்.. 

உங்கள் இனிய பட்டாசு.. 

ஜானி

புதன், 30 அக்டோபர், 2024

தங்கப் புதையல்_ஆல்வார் மேயர்

 வணக்கம் வாசகர்களே.. சென்ற பதிவில் ஆல்வார் மேயர் பற்றிப் பார்த்தோம் அல்லவா.. அவரை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் பிரிவினையே சாரும். தங்கப் புதையல் என்கிற இந்த கதையை 1987 ஏப்ரல் மாதம் வெளியிட்டனர்.. ஸ்பெயின் தேசத்தில் இருந்து அமெரிக்காவை நோக்கிய தேடுதலில் பேரு தேசம் ஸ்பானிஷ்காரர்கள் அடிமை தேசமாக உருவெடுத்தது. அங்கே தங்க நகரம் எல் டோரோடோ போன்ற் அஸ்டெக் மாயன் கலாச்சாரங்களையும் அவர்களின் பொக்கிஷங்களைத் தேடியும் படைகள் திரிந்த திகில் காலம் அது. அப்படி ஒரு தேடுதலுக்கு கொடூரனான ஒருவன் கிளம்ப அவனுக்கு வழிகாட்டியாக செல்கிறார் ஆல்வார் மேயர்.. அதன் பின் நடந்தது என்ன? தொடர்கிறது கதை..                                     










அநீதி என்றும் வெற்றி பெறாது என்கிற மையக்கருத்தைக் கொண்ட ஆல்வார் மேயரின் கதைகள் ஆங்கிலத்தில் வாசித்து மகிழ புத்தக ஆர்டர் கொடுக்க சென்ற பதிவில் இணைப்பு கொடுத்திருக்கிறேன்.. 
அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.. 




ஞாயிறு, 27 அக்டோபர், 2024

ஆல்வார் மேயர்_மற்றும் சில குறிப்புகளுடன்..

வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே..ஆல்வார் மேயர்.. எழுபதுகள் எண்பதுகள் ஆகிய காலக்கட்டங்களில் வெளியான ஸ்கார்பியோ பத்திரிக்கையில் அறிமுகமான  நாயகர் இவர். தன் பழங்குடியின நண்பருடன் இவர் செய்யும் சாகசப் பயணங்களே இவரது கதைகளின் அடிநாதம். இவரைப் பற்றியும் சுவாரசியமான சில தகவல்களையும் இப்போது நீங்கள் வாசிக்கத்தருகிறேன்.. நேரமிருப்பின் தொடர்க.. 
ஸ்கார்பியோ பத்திரிகை 
1974 முதல் 1996 வரை அர்ஜென்டினாவிலிருந்தும், 1977முதல் இத்தாலியில் இருந்தும் வெளியான  வாராந்தர இதழ் இந்த ஸ்கார்பியோ. சிறு குறு காமிக்ஸ்களை கொண்டு இயங்கி வந்தது ஸ்கார்பியோ.. ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியன் மொழிகளில் சித்திரக்கதைகளை தாங்கி வந்தது ஸ்கார்பியோ. 

ஸ்கார்பியோ என்பதே ஒரு சித்திரக்கதை நாயகரின் பெயர்தான். அந்த பெயர் ஈட்டிய புகழினை வைத்தே இந்த வாராந்தரிக்கு ஸ்கார்பியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.. 


கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் இந்த ஸ்கார்பியோ நாயகரை உருவாக்கிய ஓவியர் 
எர்னெஸ்ட்டோ கார்சியா ..
பதினேழே வயதில் ஓவியத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் இவர். தீவிர டெக்ஸ் வில்லர் விசிறியாக வலம்வந்த இவர் ஒரு கட்டத்தில் க்ளாடியோ நிசி எழுதிய டெக்ஸ் வில்லர் கதைகளுக்கே ஓவியம் வரைந்தார் என்பது நிச்சயம் சாதனைதானே.. பிடியுங்கள் ஒரு சாம்பிள் பக்கம் 



கார்லோஸ் ட்ரில்லோ, என்ரிக் ப்ரெசியா ஆகியோரின் கதை ஓவியங்களில் நம்மை அப்படியே ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு அமெரிக்க கண்டப் பகுதிக்குள் கொண்டு சென்று இறக்கி விட்டு விடுகிறார்கள்.. டெத் அண்ட் சில்வர் இவரது முதல் சாகசம்.. பதினேழாம் நூற்றாண்டு அமெரிக்க ஸ்பானிய மண்ணில் நடைபயின்று ஆம் அதிகம் விரும்புவது நடையையே தன் தோழனுடன் பல்வேறு கலாச்சாரங்கள், ஆதி குடிகள், ஸ்பானிய இராணுவம் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தங்க நகரம் எல் டோரோடோ போன்ற கனவு நகரங்கள் நோய்களைத் தீர்க்கும்  மாய மரங்கள்  என்று நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் உலகில் நம்முடன் தன் சாகசப்பயணத்தை மேற்கொள்கிறார் ஆல்வார் மேயர்.  
அர்ஜென்டினா தேசத்தின் என்ரிக் மற்றும் ப்ரெசியாவின் உயிர்ப்பான ஓவியங்கள் நம்மை மிகவும் கவர்கின்றன.. 
மொத்தம் ஐம்பத்து ஏழு கதைகள் இந்த சாகச ஜோடி ட்ரில்லோ மற்றும் ப்ரெசியாவால் உருவாக்கப்பட்டுள்ளன.. ஆங்கிலத்தில் முதன்முறையாக வெளியிடப்பட்டது டெத் அண்ட் சில்வரே..   

அமேசான் கானகங்கள், இன்கா பழங்குடியினர், ஸ்பானிய இராணுவம் என்று தத்ரூபமாக இந்த கதையில் ஆல்வார் மேயர் செல்லும் இடங்களும், கதைக் கலங்களும் சிறப்பான விதத்தில் கையாளப்பட்டுள்ளன..
கிராபிக் நாவல்கள் வரிசையில் நல்ல விற்பனை கண்டுள்ள நாயகரான இவரது சாகசங்கள் வாங்கி மகிழ 
கோர்ட்டோ மால்டிஸ் என்னும் பிரபல தொடர் போன்றே இதுவும் ஒரு பயணத் தொடராகவும் நிஜம், கனவு இரு உலகங்கள், பழம்பெரும் புராணங்களின் பார்வை போன்ற வெவ்வேறு தளங்களிலும் ஆல்வார் மேயரின் சாகசங்கள் பயணிக்கின்றன.. 
என்ரிக் ப்ரெசியா அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் அயர்ஸ்ஸில் 1945ல் பிறந்தவர். 1977ல் கார்லோஸ் ட்ரில்லோவுடன்  இணைந்து ஆல்வார் மேயர் படைத்தவர். அவரது திறனுக்கு கீழே இருக்கும் சாம்பிள் ஓவியம்..  
கார்லோஸ் ட்ரில்லோ தன் இருபதாம் வயதிலேயே கதை சமைப்பதில் வித்தகர் என்று சாதித்துக் காட்டியவர். அவரது வெற்றிக் கதைகளில் சில உதாரணங்கள். ஒரு கதாசிரியராக தன்னை அமர்க்களமாக நிலைநிறுத்திக் கொண்டவர். பல்வேறு களங்களில் தனது நாயக நாயகியரை சிறப்பாக வடிவமைத்து கதைகளை உலகம் அறிய செய்தவர்.. அவரது சில புகழ்பெற்ற கதைகள்.. 



சைபர் சிக்ஸ், பார்டர் லைன் போன்ற பல படைப்புகளை உருவாக்கியுள்ள அர்ஜென்டினா தேசத்தின் முத்துக்களில் 
இவரும் ஒருவர். கூடுதல் விவரங்களுக்கு..

இதுகாறும் வாசித்தமைக்கு நன்றிகள்.. வாசிப்பே குறைந்து விஷூவல் மீடியமாகிவிட்டபின்னரும் என்னைப் போன்ற சில வலைப்பதிவர்களை ஊக்குவித்து வரும் உங்களைப் போன்ற வாசகர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.. தலைமுறைகள் கடந்தும் உலாவட்டும் நம் வாசிப்பு சுகானுபவம்.. இனிய நினைவுகளுடன்..உங்களுடன் இணைந்து உங்கள் தோழன் ஜானி சின்னப்பன்.. 





 

சனி, 26 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _இறுதி பாகம்

 வணக்கம் தோழமை நெஞ்சங்களே.. 

மைக்கேல் சான்ஸ் சாகசம் தொடர்கிறது.. 

இனிய தீபாவளித் திருநாள் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்..
அடுத்து தொடர்கிறார் பிரபலமான நாயகர் ஆல்வார் மேயர்.. 
நாம் அடுத்து வாசிக்கவிருக்கும் இந்த இருவண்ணக் கதையானது 1987 ஆம் ஆண்டு சிறுவர் மலர் இதழில் வெளியிடப்பட்ட ஆல்வார் மேயர் கதை இது.. ஆங்கிலக்கதையின் நீளங்கள் வெகுவாக சுருக்கப்பட்டு சிறார்களுக்கேற்ப எளிமையாக தரப்பட்டிருந்தது. தொடர்வோம்..

என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி..

வியாழன், 24 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 10

 வணக்கம் வாசகர்களே.. 

மைக்கேல் சான்ஸ் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.. அதன் பின்னர் நடந்தது என்ன? கதை தொடர்கிறது..  

அழகி இர்மா தன்  இன்னுயிரைத் தந்து மைக்கேலைக் காப்பாற்ற காரணம் என்னவாக இருக்கும்? விடையை கமெண்டில் கூறலாம்.. 

வகம் தீபாவளி மலர் கொரியரில் முந்திக் கொண்டு வந்து விட்டது.. அந்த மஞ்சள் காகிதத்தில் கருப்பு வெள்ளைப் பக்கங்கள் மனதுக்கு நெருக்கமாகி விட்டன.. புத்தக வடிவமைப்பும் அருமை. சுமார் 340 பக்கங்கள் மற்றும் விலை ரூபாய் ஐநூறு. கெட்டி அட்டை. பைண்டிங் தரமாக முழுமையாக பிரித்துப் படிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. 

1. ஆல்பிக்கொரு ஆபத்து 

2. யார் செய்த கொலை 

3. கல்லறைத் தீவு 

என்கிற மூன்று சாகசங்களும் 

ராபின், ஜூலியா, ஒன் ஷாட் ஒன்று 

என மூன்று வித வாசிப்புக்கும் வழிவகுத்திருக்கிறது வகம் தீபாவளி மலர்.  

மொழிபெயர்ப்பாளர்கள் 

கடலூர் புகழ்.

ஈரோடு வி.சங்கர்

புதுவை சுரேஷ் 

 ஒவ்வொன்றாக கதையை அலசுவோம்.. 

புத்தகம் பெற 9894692768  என்கிற எண்ணைத் தொடர்பு கொள்க. 

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..                                                              



புதன், 23 அக்டோபர், 2024

Lion 2025 Plan to publish comics List

அன்பு நெஞ்சங்களே.. சித்திரக்கதை வாசக உலகம் மிக மிக சிறியது.. ஆனால் இது அன்பால் இணைந்த கூட்டம்.. அடுத்த ஆண்டும் நம்மை மகிழ்விக்க லயன் காமிக்ஸ் கொண்டு வரும் இந்த புத்தகங்களையும் கொண்டாடித் தீர்த்து விட மாட்டோமா? தரவிறக்க.. 

 https://www.mediafire.com/file/nx8zfcpjjw9cdop/Lion_Comics-2025_Planner.pdf/file

செவ்வாய், 22 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 09

 அன்பு வாசக நெஞ்சங்களே.. அனைவருக்கும் வணக்கம்.. 

ஆக பகைவருக்கருள்வாய் கணக்கில் அழகி இர்மாவிற்கு ஒரு வாய்ப்பு தருகிறார் மைக்கேல் சான்ஸ்.. ஆனால் அந்த வாய்ப்பு உபயோகப்படுமா? பார்ப்போம்.. தொடரும்..  

தீபாவளி மலர்கள் லயன் வகம் நிறுவனங்களில் இருந்து புயலெனப் புறப்படவிருக்கின்றன.. லயன் அனுப்பி விட்டார்கள்.. இதுதான் லேட்டஸ்ட் நியூஸ்.. லயனில் இம்முறை டெக்ஸ் மிஸ்டர் நோ மற்றும் வேட்டையன் ஜராப் சாகசங்கள் அசத்த வருகின்றன.. 


கூடவே பன் சந்தாதாரர்களுக்கு வருகிறது. 

வகம் தீபாவளி இதழ் தேவைப்படுவோர் இந்த எண்ணிற்கு பணத்தை அனுப்பி விட்டு வாட்சப்பில் தகவல் தெரிவித்தால், புத்தகம் வந்த பிறகு புத்தகம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
Gpay & phone pe number
9894692768
வகம் அப்டேட்டுகள் விரைவில்.. நன்றி.. 

வகம் தீபாவளி மற்றும் கூடுதல் தகவல்கள்.. 

அன்பு நண்பர்களே...


நிறைய சிக்கல்களை கடந்து, அதுவும் முதன்முறையாக ஹாட்கேஸில் வெளிவந்துள்ளது. இந்த தீபாவளியை வகம் காமிக்ஸுடன் கொண்டாடுங்கள்.


வகம் காமிக்ஸில் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கும் இம்மாத (அக்டோபர் ) மூன்று த்ரில்லர்  சித்திரக்கதைகள் கொண்ட புத்தகம்!  


98 பக்க ரிவேன்ஜ் த்ரில்லர், 125 பக்க சைக்கோ த்ரில்லர், 116 பக்க அமானுஷ்ய ஆக்ஷன் த்ரில்லர் ஆகிய மூன்று கதைகள் ஒரே  இதழில் 338 பக்கத்தில் வெளிவந்துள்ளது. 

வண்ணம் - கருப்பு & வெள்ளை


புத்தகத்தின் விலை ரூ.500/-  + கூரியர் இலவசம்   தேவைப்படும்  நண்பர்கள் எஸ்டி கூரியர் மூலமாகவும், பிறமாநிலத்தில் இருப்பவர்கள் பதிவுத் தபாலிலும் இப்புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம்.


நானூறு ரூபாய்க்கு மேல் வகம் காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கும் அனைவருக்கும் கூரியர் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்! 


G pay  & phone pe and paytm எண்: 9894692768 (வாட்சப்)

அல்லது 


Kaleel a

HDFC BANK

Ac No. 50200093806672

IFSC CODE: HDFC0002611

Branch : Ambalathadayar st 

Puducherry - 605001

Mob - 9894692768


மூலமும் பணத்தைச் செலுத்தி புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் -


மேலும் எங்களது இதழ்கள் 


புதுச்சேரியில் உள்ள 

சிறுவர் பக்கம்

97, ஈஸ்வரன் கோவில் வீதி 

புதுச்சேரி - 1

Mob - 90877 34367


டிஸ்கவரி புக் பேலஸ்

கே.கே. நகர்

சென்னை 

Mob - 87545 07070


B4 புக் சென்டர்

வேளச்சேரி, சென்னை - 42

Mob - 98848 39314


பனுவல் புத்தக நிலையம்

சென்னை 

Mob - 97890 09666


பெமீனா புக் சென்டர்

R.s. புரம். கோவை - 2

Mob - 96776 21909


பாரதிராஜா புத்தக நிலையம்

Hope college அருகில்

பீளமேடு, கோயம்புத்தூர்

Mob - 9894356232


E.r. ஸ்டாலின் புத்தகப் பூங்கா

கருங்கல்பாளையம்

ஈரோடு - 1

Mob - 99940 21088


கர்ணன்

குகை சேலம் - 636 006

Mob - 93604 48686


P. புகழேந்தி

கடலூர் - 607401

Mob - 96776 90123


பிரபு ராஜ்

சேலம்

Mob - 90250 53264


சிவக்குமார் நியூஸ் ஏஜெண்ட்

பென்ஷனர் தெரு

திண்டுக்கல் - 1

Mob - 98942 45270


கிருஷ்ணா புக் சென்டர்

நாகர்கோயில் - 1

Mob - 98945 55050


செந்தூரன் புத்தக நிலையம்

அருப்புக்கோட்டை 

Mob - 93626 72551


ஆகிய இடங்களிலும் எமது புத்தகங்கள் கிடைக்கும்!


மேலும் விபரமறிய 9894692768 என்ற வாட்சப் எண்ணிலும் தொடர்பு கொண்டு மேலும் கூடுதல் தகவல்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்!


 தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் -.


                             -ஆசிரியர். வகம் காமிக்ஸ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 08

 அன்பு வாசக நண்பர்களே.. 

தீபாவளி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. தீபாவளி மலர்களும் தங்கள் அதிர்வேட்டுகளை கிளப்பத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.. இந்த கதையும் தன் நிறைவினை எட்டத் தயாராகிக் கொண்டிருக்கிறது.. தொடர்க.. 

தொடர்கிறது..

வெள்ளி, 18 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 07

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. காணாமல் போன விஞ்ஞானிகள் தொடர்ச்சி..

உருவாக்க தொழில்நுட்ப  உதவி செய்த அன்பு நண்பர்கள் திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம், திரு.சுரேஷ் தனபால் ஆகியோருக்கு நன்றிகள்.. 

வியாழன், 17 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 06

 வணக்கம் நண்பர்களே.. 

         மைக்கேல் சான்ஸ் தன் எதிரி குர்ஸ்க்குடன் மோதியபோது இர்மாவால் தடுத்து நிறுத்தப் படுகிறார். பின்னர் நடந்தது என்ன? கதை தொடர்கிறது..


மைக்கேல் சான்ஸ் கண்டுபிடித்தது என்ன? அவர் தப்பி விட்டாரா? கதை தொடர்கிறது.. 
லயன் தீபாவளி மலர்..

வகம் தீபாவளி மலர் 



என்றும் நட்புடன் உங்கள் நண்பன் ஜானி.









ஞாயிறு, 13 அக்டோபர், 2024

விட்ச் வின்னி_தமிழில் முதன்முறையாக அறிமுகம்

அடுத்த ஆண்டுக்கானதொரு மெகா திட்டமிடலை லயன் காமிக்ஸ் வெளியிட்டுள்ளனர். காமிக்ஸ் வாசகர்களின் கனிவான கவனத்துக்கு.. 

2025- லயன் முத்து காமிக்ஸ் சந்தா விவரம் :

i)2025 - ரெகுலர் சந்தா 
 (32 புத்தகங்கள்) - 
ரூ. 5750/-

இரண்டு தவணையில் செலுத்தலாம். (முதல் தவணை ரூ.3000...
இரண்டாவது தவணை மார்ச் 2025 க்குள் செலுத்த வேண்டும்) 
🥰💐🙏🥰🥰😘😘

         அல்லது 

ii) 2025 - lite சந்தா  
(18 புத்தகங்கள்)- 
ரூ. 4000/-

இரண்டு தவணையில் செலுத்தலாம்.

 (முதல் தவணை ரூ.2500...
இரண்டாவது தவணை ரூ. 1500 -மார்ச் 2025 க்குள் செலுத்த வேண்டும்) 
🥰💐🙏🥰🥰😘😘

 சந்தா கட்டுங்க..😘💐

ஜாலியா இருங்க நண்பர்களே.. 🙏💐🥰
என்றும் அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி 


 

புதன், 9 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 04

 வணக்கங்கள் அன்பு வாசகர்களே.. 





இறுதி ஆட்டம் - டெக்ஸ்

வழக்கமான டெக்ஸ் கதை தான். ரோட்டில் போகும் பிரச்சனையை wanted ஆக போய் தோலில் போட்டுக்கொண்டு அதை இறுதி வரை சென்று உயிரை பணயம் வைத்து  ஆட்டத்தை முடித்து வைக்கிறார்கள்.

இதில் பாருங்கள் ஒருவனை கொல்ல பல தோட்டாக்கள் தேவைப்படுது. டெக்ஸ் குறி கூட தவறுகிறது.

ஆர்ட் வித்தியாசமாக கோடோவியங்கள் போல உள்ளது. இதற்கு முன்பு கூட இந்த ஆர்டில் கதை வந்த ஞாபகம்.

மற்றபடி எதையும் யோசிக்காமல் பர பர என செல்லும் கதை.
_தோழர் வ.வெ.கிருஷ்ணாவின் விமர்சனம் 
ஐரோப்பிய இலக்கியத்தில் ‘கடற்சாகச எழுத்து’ என ஒரு வகைமை உண்டு. நான் முதலில் வாசித்த அத்தகைய நாவல் Westward Ho!அது ஒரு கடற்சாகச நாவல். நான் முட்டிமோதி அதை வாசிக்கையில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் கிடைத்த தோல் அட்டைபோட்ட கிளாஸிக் பதிப்பு. 1930 வாக்கில் லண்டனில் அச்சிடப்பட்டது. ஏதோ வெள்ளைக்காரரின் நன்கொடையாக அந்நூலகத்திற்கு வந்தது.
எழுத்தாளர் ஜெயமோகனின் விமர்சனம் 
மேலும் வாசிக்க 

என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி 

சனி, 5 அக்டோபர், 2024

வகம்தீபாவளி 2024 மலர் அறிவிப்பு

 


வகம் காமிக்ஸ் நிறுவனர் திரு.கலீல்: தீபாவளி மலருக்கு முன்பதிவு செய்து வரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை முன்பதிவு பண்ணாதவர்கள், வங்கி மூலமாகவோ அல்லது ஜிபே மூலமாகவும் பணம் செலுத்தலாம். புத்தக விலை - 500, கூரியர் இலவசம், கருப்பு வெள்ளை, பக்கங்கள் 338, மூன்று கதைகள்! 


வங்கி விபரம் 


Kaleel a

HDFC BANK

Current Ac No. 50200093806672

IFSC CODE: HDFC0002611

Branch : Ambalathadayar st 

Puducherry - 605001

Mob - 9894692768


Gpay. Or phone pe - 9894692768 


இதன் மூலமாகவும் பணம் அனுப்பி உங்கள் இருப்பை பூர்த்தி செய்து கொள்ளலாம் - நன்றி


பி. கு

புத்தகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வந்ததும் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்!

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 03

 வணக்கம் நண்பர்களே..அக்டோபர் முதல் வாரத்தில் லயன் வெளியீடுகள் வந்தாயிற்று.. கூடிய விரைவில் அவற்றின் ரிவியூ பார்த்திடலாம்.. 

காணாமல் போன விஞ்ஞானிகள் தொடர்கிறது.. அறிமுக நாயகன்  மைக்கேல் சான்ஸ் நிகழ்த்தும் சாகசம்.. 

ஹாய் பிரண்ட்ஸ்... அக்டோபர் மாதத்தின் லயன் இதழ்கள் வந்தாயிற்று. டெக்ஸ் வில்லர், ப்ரூனோ பிரேசில், ரிப்போர்ட்டர் ஜானி மற்றும் ஸ்டெர்ன் ஆளுக்கொரு பரபரப்பை நமக்கு பார்சல் செய்திருக்கிறார்கள்.. பனிப்பரப்பில் ஒரு அதிரடி என்றால் பாலைப்பரப்பில் சாகசம் ஒன்று. சிட்டிக்குள் ஒரு சதி என்றால் மாநகரில் ஒரு தப்பு என்று நான்கு கதைகளும் நாலாபுறமும் நம்மை அழைத்துப் போகின்றன.. 




“நள்ளிரவின் நாயகன்”! ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரின் கதை நம்பர் 77 இது! In fact ஜானியின் க்ளாஸிக் தொடரின் கடைசிக்கு முந்தைய ஆல்பமிது! நம்பர் 78 க்ளாஸிக் தொடரின் இறுதி ஆல்பமாகிட, அதற்குப் பின்பாக ஜானி 2.0 தான் களத்திலுள்ளார்!

அனைத்தையும் வாங்கி வாசிக்க இயன்றவர்கள் டோன்ட் மிஸ் இட்.. 
என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி




செவ்வாய், 1 அக்டோபர், 2024

காணாமல் போன விஞ்ஞானிகள் _தொடர்ச்சி 01

 வணக்கம் நண்பர்களே.. தொடர்கிறது மைக்கேல் சான்சின் சாகசம்.. 

நண்பர் உதயா தனக்கென ஒரு காமிக்ஸ் வாட்ஸ் அப் சேனல் வைத்திருக்கிறார். அதில் இடம்பெற்ற ஒரு வீடியோ அதற்குக் கதை என்கிற போட்டியில் வென்றமைக்கு சித்திரக்கதைப் புத்தகங்களும், ஆன்மிகப் புத்தகங்களும் இனிப்பு பன்னும் சென்னையில் இருந்து அனுப்பி வைத்து மகிழ்ச்சி கொள்ள செய்தார். விரைவில் குறும்படமாக தாங்கள் கண்டு களிக்கும் விதத்தில் யூ டியூபில் அது வெளியாகும். சிறுகதை, குறுங்கதை ஆசிரியராக அவ்வப்போது நான் எடுக்கும் அவதாரத்தில் இதுவும் ஒரு குறிப்பிட்டு மகிழ வேண்டியதாகையால் அந்த மகிழ்ச்சியினை இங்கே பதிந்து கொள்கிறேன்.. நமது தமிழ் காமிக்ஸ் வாசகர் வட்டம் வாட்ஸ் அப் குழுவுக்கும் தனித்தனி அறிவிப்புகளும், அன்பளிப்புகளும் நண்பர்களின் பங்களிப்புகளும் என்று சிறப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் நம் அன்பும் நன்றிகளும்.. 

தமிழில் வாட்ஸ் அப் சேனலில் இப்போது லயன் முத்து சேனல் மிகவும் அருமையாக போய்க்கொண்டிருக்கிறது.

Lion - Muthu Comics Lovers என டைப் செய்து தேடி இணைந்து கொள்ளுங்கள்.. 

bye now folks.. 

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...