ஞாயிறு, 27 அக்டோபர், 2024

ஆல்வார் மேயர்_மற்றும் சில குறிப்புகளுடன்..

வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே..ஆல்வார் மேயர்.. எழுபதுகள் எண்பதுகள் ஆகிய காலக்கட்டங்களில் வெளியான ஸ்கார்பியோ பத்திரிக்கையில் அறிமுகமான  நாயகர் இவர். தன் பழங்குடியின நண்பருடன் இவர் செய்யும் சாகசப் பயணங்களே இவரது கதைகளின் அடிநாதம். இவரைப் பற்றியும் சுவாரசியமான சில தகவல்களையும் இப்போது நீங்கள் வாசிக்கத்தருகிறேன்.. நேரமிருப்பின் தொடர்க.. 
ஸ்கார்பியோ பத்திரிகை 
1974 முதல் 1996 வரை அர்ஜென்டினாவிலிருந்தும், 1977முதல் இத்தாலியில் இருந்தும் வெளியான  வாராந்தர இதழ் இந்த ஸ்கார்பியோ. சிறு குறு காமிக்ஸ்களை கொண்டு இயங்கி வந்தது ஸ்கார்பியோ.. ஸ்பானிஷ் மற்றும் இத்தாலியன் மொழிகளில் சித்திரக்கதைகளை தாங்கி வந்தது ஸ்கார்பியோ. 

ஸ்கார்பியோ என்பதே ஒரு சித்திரக்கதை நாயகரின் பெயர்தான். அந்த பெயர் ஈட்டிய புகழினை வைத்தே இந்த வாராந்தரிக்கு ஸ்கார்பியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.. 


கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் இந்த ஸ்கார்பியோ நாயகரை உருவாக்கிய ஓவியர் 
எர்னெஸ்ட்டோ கார்சியா ..
பதினேழே வயதில் ஓவியத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் இவர். தீவிர டெக்ஸ் வில்லர் விசிறியாக வலம்வந்த இவர் ஒரு கட்டத்தில் க்ளாடியோ நிசி எழுதிய டெக்ஸ் வில்லர் கதைகளுக்கே ஓவியம் வரைந்தார் என்பது நிச்சயம் சாதனைதானே.. பிடியுங்கள் ஒரு சாம்பிள் பக்கம் 



கார்லோஸ் ட்ரில்லோ, என்ரிக் ப்ரெசியா ஆகியோரின் கதை ஓவியங்களில் நம்மை அப்படியே ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு அமெரிக்க கண்டப் பகுதிக்குள் கொண்டு சென்று இறக்கி விட்டு விடுகிறார்கள்.. டெத் அண்ட் சில்வர் இவரது முதல் சாகசம்.. பதினேழாம் நூற்றாண்டு அமெரிக்க ஸ்பானிய மண்ணில் நடைபயின்று ஆம் அதிகம் விரும்புவது நடையையே தன் தோழனுடன் பல்வேறு கலாச்சாரங்கள், ஆதி குடிகள், ஸ்பானிய இராணுவம் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தங்க நகரம் எல் டோரோடோ போன்ற கனவு நகரங்கள் நோய்களைத் தீர்க்கும்  மாய மரங்கள்  என்று நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் உலகில் நம்முடன் தன் சாகசப்பயணத்தை மேற்கொள்கிறார் ஆல்வார் மேயர்.  
அர்ஜென்டினா தேசத்தின் என்ரிக் மற்றும் ப்ரெசியாவின் உயிர்ப்பான ஓவியங்கள் நம்மை மிகவும் கவர்கின்றன.. 
மொத்தம் ஐம்பத்து ஏழு கதைகள் இந்த சாகச ஜோடி ட்ரில்லோ மற்றும் ப்ரெசியாவால் உருவாக்கப்பட்டுள்ளன.. ஆங்கிலத்தில் முதன்முறையாக வெளியிடப்பட்டது டெத் அண்ட் சில்வரே..   

அமேசான் கானகங்கள், இன்கா பழங்குடியினர், ஸ்பானிய இராணுவம் என்று தத்ரூபமாக இந்த கதையில் ஆல்வார் மேயர் செல்லும் இடங்களும், கதைக் கலங்களும் சிறப்பான விதத்தில் கையாளப்பட்டுள்ளன..
கிராபிக் நாவல்கள் வரிசையில் நல்ல விற்பனை கண்டுள்ள நாயகரான இவரது சாகசங்கள் வாங்கி மகிழ 
கோர்ட்டோ மால்டிஸ் என்னும் பிரபல தொடர் போன்றே இதுவும் ஒரு பயணத் தொடராகவும் நிஜம், கனவு இரு உலகங்கள், பழம்பெரும் புராணங்களின் பார்வை போன்ற வெவ்வேறு தளங்களிலும் ஆல்வார் மேயரின் சாகசங்கள் பயணிக்கின்றன.. 
என்ரிக் ப்ரெசியா அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் அயர்ஸ்ஸில் 1945ல் பிறந்தவர். 1977ல் கார்லோஸ் ட்ரில்லோவுடன்  இணைந்து ஆல்வார் மேயர் படைத்தவர். அவரது திறனுக்கு கீழே இருக்கும் சாம்பிள் ஓவியம்..  
கார்லோஸ் ட்ரில்லோ தன் இருபதாம் வயதிலேயே கதை சமைப்பதில் வித்தகர் என்று சாதித்துக் காட்டியவர். அவரது வெற்றிக் கதைகளில் சில உதாரணங்கள். ஒரு கதாசிரியராக தன்னை அமர்க்களமாக நிலைநிறுத்திக் கொண்டவர். பல்வேறு களங்களில் தனது நாயக நாயகியரை சிறப்பாக வடிவமைத்து கதைகளை உலகம் அறிய செய்தவர்.. அவரது சில புகழ்பெற்ற கதைகள்.. 



சைபர் சிக்ஸ், பார்டர் லைன் போன்ற பல படைப்புகளை உருவாக்கியுள்ள அர்ஜென்டினா தேசத்தின் முத்துக்களில் 
இவரும் ஒருவர். கூடுதல் விவரங்களுக்கு..

இதுகாறும் வாசித்தமைக்கு நன்றிகள்.. வாசிப்பே குறைந்து விஷூவல் மீடியமாகிவிட்டபின்னரும் என்னைப் போன்ற சில வலைப்பதிவர்களை ஊக்குவித்து வரும் உங்களைப் போன்ற வாசகர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.. தலைமுறைகள் கடந்தும் உலாவட்டும் நம் வாசிப்பு சுகானுபவம்.. இனிய நினைவுகளுடன்..உங்களுடன் இணைந்து உங்கள் தோழன் ஜானி சின்னப்பன்.. 





 

2 கருத்துகள்:

  1. நீங்க காவலர் மட்டும் அல்ல. மாபெரும் காமிக்ஸ் காதலர்.
    காமிக்ஸ் ஆவணப் பெட்டகம்.
    காமிக்ஸ் கதை களஞ்சியம்.
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர்.

    நன்றிகள் பல சார் தகவல்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருந்தன்மையான கருத்துக்கள் சார். ஏதோ தெரிந்ததை செயல்படுத்துகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...