நானொரு செவ்விந்திய நவஜோ மிலிட்டரிக்காரனுங்க. அமெரிக்காவுக்காக வியட்நாம் எல்லாம் போய் சண்டை போட்டுட்டு திரும்பி வந்து ரிடையர்மென்ட் வாங்கிக்கிட்டு ஒரு ஓரமா நாம பிறந்த இடத்திலேயே வந்து வாழலாம்னு பார்த்தா இங்கே நிலைமையே சீர் குலைந்து கிடக்கு.. நாங்க மிலிட்டரியில இவனுகளுக்காக உயிரைக் கொடுத்துப் போராடிட்டு வந்தா இங்கே இவங்க அடிக்கிற கூத்துக்கும் பண்ற அராஜகத்துக்கும் ஒரு அளவில்லாம போய்க்கிட்டு இருக்கு.. பணம் சேர்ந்துட்டா போதும் ஒரு பைக்கை எடுத்துக்குன்னு ஊரெல்லாம் சுத்தி வந்து எவனையாவது எவளையாவது வம்பிழுக்க வேண்டியது.. எல்லாம் பணம் பண்ற வேலை.. நான் நிலம் வாங்க சொந்த ஊருக்குப் போனப்போ இது மாதிரி திமிரு புடிச்ச பைக் கேங் ஒண்ணு பொண்ணுகளை தகாத வார்த்தை பேசி மிரட்டிட்டு இருந்தாங்க.. சும்மா விடுவேனா நான்..
நாம்பாட்டுக்கு தெரிஞ்ச செவ்விந்திய தாத்தாகிட்டே நிலத்தை வாங்கி பயிர் பச்சையை வாழ வைக்கலாம்னு பார்த்தா தாத்தாவை தீர்த்துக்கட்டி என்னோட வெறியை கிளப்பிட்டீங்க..
அருமையான கதை. சட்டத்தினை வளைக்கும் நபர்களை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பதை சித்திரங்களை வைத்து நமக்கு பொழுது போக்காகவும் சவாலாகவும் கொண்டு சேர்த்திருக்கிறார்கள் என்னா ப்ரூனோ மற்றும் வால்டம்ப்ரினி பேபியோ. (Enna Bruno and Valdambrini Fabio)
தேசியம்: இத்தாலியன்
பிறந்த தேதி: 1969 இவரது அடையாளம் திரைக்கதை எழுத்தாளர்
வேலைகள்
முதல் கதை அங்கிள் ஸ்க்ரூஜ் மற்றும் ஒப்பந்த நோய்க்குறி மே 13, 1997
உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள் டொனால்ட் டக் மற்றும் காவியத்தில் வரும் பிற கதாபாத்திரங்கள் எக்ஸ்-மிக்கி சாகாவில் வரும் பிப்வுல்ஃப் மற்றும் பிற கதாபாத்திரங்கள் டிராகுலாபைத்தியக்கார டக்டர் முக்கிய படைப்புகள் ஸ்டார் டாப் - மூன்றாம் தலைமுறை பேப்பரினிக் புதிய சாகசங்கள் எக்ஸ்-மிக்கி மிக்கி மவுஸ் மர்ம இதழ் பிராம் டாப்கரின் டிராகுலா டாக்டர் ராட்கில் மற்றும் மிஸ்டர் ஹைடின் விசித்திரமான வழக்கு டொனால்ட் டக் மற்றும் காலத்தால் அழியாத ராணி ஹூய் டெவி லூயி... மூன்று வாத்துகள் விளையாடுகின்றன ஆவியாகிறது கூடுதல் டிஸ்னி வேலைகள் புருனோ என்னா செர்ஜியோ போனெல்லி எடிட்டருடன் இணைந்து பணியாற்றுகிறார்
அவரது ஒரு பேட்டியில் இருந்து..
கடந்த வருடம் நீங்கள் சகுவாரோ படத்திற்காக சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான மைக்கேலுஸி விருதை வென்றீர்கள். நீங்க அதை ஒரு மரணத்திற்குப் பிந்தைய விருதுன்னு சொன்னீங்க. தோர்ன் திரும்பி வருவாரா?
மூன்று வருடங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு படைப்புப் பயணத்தின் முடிவில் அது வந்ததால் நான் அதை மரணத்திற்குப் பிந்தையது என்று அழைத்தேன், ஆனால் நான் அதைப் பாராட்டவில்லை என்று அர்த்தமல்ல. உண்மையில், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது! துரதிர்ஷ்டவசமாக, தோர்ன் தனது சாகசத்தை இதழ் #35 உடன் முடித்தார், எனக்குள், அவரது கதைகளும் அவரது கதாபாத்திரங்களும் தொடர்ந்து எதிரொலித்தாலும் கூட. நான் என்னுடன் நிறைய அனுபவங்களை (கலாச்சார, வேலை தொடர்பான, மனித) சுமந்து செல்கிறேன், அதை இப்போதும் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த வகையில், 2017 ஆம் ஆண்டில், லூய்கி சினிஸ்கால்ச்சிக்காக நான் எழுதிய ஒரு போனெல்லி கிராஃபிக் நாவல் செய்தித்தாள்களில் இடம் பெற வேண்டும்: இது சகுவாரோவின் கிராஃபிக் "தூண்களில்" ஒன்றாகும். இது 70களின் முற்பகுதியில் தொடங்கும் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும். இதன் கருப்பொருள் “சாகரெஸ்க்” பாணியில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும், ஆனால் படைப்புக் குழு ஒன்றாக இருக்கும். நீங்கள் அதைப் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.
ஆக சகுவேரா ஒரு திரைப்படமாகவும் வந்து மக்களை ஈர்த்திருக்கிறது..
இம்மாத வெளியீடுக்கு வருவோம் சூப்பரான நடையிலான மொழிபெயர்ப்பு. அறிமுக நாயகரை முதல் கதையிலேயே சிக்ஸர் அடித்தாற்போன்று களத்தில் இறங்கி விட்டார்.. போதைப்பொருள் கடத்தல் கும்பலோடு சூழ்நிலையின் காரணமாக மோத நேர்கிறது. உள்ளூர் போலீஸ் வழக்கம்போல பாதி மனிதன் பாதி மிருகமாக கலந்து கட்டி நிற்கிறார்கள். வேறு வழியில்லாமல் கிடைத்த சிறு தகவலையும் சிறுவன், அவனது வளர்ப்புத் தாயையும் சேர்த்தே காக்க வேண்டிய கட்டாயத்தில் நாயகர். இதில் நிலம் வாங்கிய பெரியவர் கொல்லப்படுவதைக் கண்ட சாட்சியை வேறு பாதுகாத்தாக வேண்டிய நிலைமை. இல்லையேல் அழகாக கொலைக்குற்றம் ஸகுவேராவை இறுகப் பிடித்த முதலையென கவ்விக் கொண்டு விடும்.. கடும் பாறைக் களம் போர்க்களமாக நாயகன் கொலைப் பழியிலிருந்து தப்பினாரா? சிறுவனும் அவன் பாட்டியும் கொலைக்கும்பலிடமிருந்து தப்பினார்களா? பரபரக்கும் பக்கங்களை நிழல் ஓநாய்களில் நாயகனின் பைக், கார், கால்நடைப் பயணங்களோடு நாமும் கடந்திடத் தோன்றும் விதமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்னா மற்றும் வால் டம்பிரினி. போன்னெலி வெளியீடு என்பதிலேயே தரமான கதை முத்திரை கிடைத்து விடுகிறது. தமிழில் எடிட்டர் விஜயனுடன் சேர்ந்து நண்பர் ரவி கண்ணன் கலக்கியுள்ளார். வி காமிக்ஸூக்கு இன்னும் ஒரு அதிரடி நாயகர் என்பது சிறப்பு. 90 ரூபாயில் கருப்பு வெள்ளையில் 100 ரூபாய் விலையில் மே மாதத்தினை சிறப்பிக்க வந்திருக்கும் நிழல் ஓநாய்களைத் தவற விடாதீர்கள்..