ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இதுதான் சிவப்பிந்திய எழுச்சி!

அன்புக்கு மட்டுமே அடி பணியும் நண்பர் கூட்டங்களே!

எதற்கும் அஞ்சா, அடி பணியா ஒரு வீரனின் கதை என்று தலைப்பில் இருந்தாலும் இதில் இரண்டு வீரர்களின் லட்சிய பயணங்கள் காட்டபட்ட்டுள்ளன. 
இந்த கதை இடம் பெற்றது முத்து காமிக்ஸில். நெஞ்சில் வீரமும், மண்ணின் மானமும் சுமந்து வாழ்ந்த மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்த்து சீறி எழுவது வீரர்களின் அடிப்படை குணம். அப்படி எழும் தனி மனிதனின் கதை மட்டும் அல்ல இது ஒரு சமூகத்தின் போர்க்குரல் இது "எவர்க்கும் அடிபணியோம்" என்பதை உரக்க கூவி சொல்லும் வெற்றி கதை இது.   

முதலில் ஒரு அடிமை செவ்விந்திய வீரன்:
    பாசமிகு குடும்பத்தினை, அன்பான சமூகத்தின் அரவணைப்பை, ராணுவ வீரர்களின் அடக்கு முறையில் இழந்து விட்டு வாழ்வை தொலைத்து விட்டு விட்டேத்தியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற கதையாக யுத்த இசையை ஒரு சாதகன் வாசித்ததை கேட்டு பழைய நினைவுகளால் கிளறப்பட்டு பொங்கி எழுகிறான். தன்னை வெறும் குடிகாரனாக நினைக்கும் வெள்ளையர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மீண்டும் அடிமை வாழ்வை மேற்கொள்ள மாட்டேன் என்று தன் இயற்கை கடவுளின் மீது உறுதி எடுக்கிறான். தன்னை அவமானப்படுத்திய குடிகாரர்களை அளித்து விட்டு பின்னர் தன் லட்சியப் பயணத்தை துவக்குகிறான். கண்ணில் படும் அத்தனை வெள்ளையர்களின் மீதும் தாக்குதல் தொடுக்கிறான்.
இரண்டாவது ஒரு வெள்ளை வீரன்:
பில் ஆடம்ஸ் எனும் அந்த வீரன் மேலே கண்ட செவ்விந்தியனின் விஸ்வரூபம் வெளிப்படும் வேளையில் வருகிறான். அவன் தன்னை தொடர்வது கண்டு அவனை மடக்கும் செவ்விந்தியன் தன் மக்களுக்காக குரல் கொடுத்தவன் இந்த வெள்ளையன் என்று அறிந்து உயிருடன் விட்டு விட்டு புறப்படுகிறான். 
 ஜெனெரல் கஸ்ட்டர்--என்ற மனிதன் தன்னிடம் இருக்கும் படைகளை செவ்விந்தியர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் பயன் படுத்துகிறான். அதில் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் நமது செவ்விந்திய வீரன்.
    
    அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிராண்ட் அனுப்பிய வீரனே வெள்ளை வீரன். செவ்விந்தியர்கள் அவனது படைகளை லிட்டில் பிக் ஹார்ன் எனும் இடத்தில் 1876 June 25 அன்று சந்திக்கின்றன. தன் வலிமை - எதிரி வலிமை அறிந்து மோதல் மேற்கொள்ள அந்த ஜெனரல் கஸ்டருக்கு பாவம் திருக்குறள் தெரியாது.  யுத்த தந்திரம் அறியாதவன். மேலும் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற உயர்ந்த தத்துவம் அறிய அவன் தமிழ் நாட்டில் பிறந்தவனல்லவே!!!

     எனவே அவனது படையை மூன்றாக பிரித்து வெவ்வேறு திசைகளில் தாக்குதல் தொடுக்கிறான். இதில் என்ன கொடுமை என்றால் எல்லோரும் அவரவர் இடத்தில் நிலை கொள்ளுமுன் செவ்விந்திய ஒற்றர்கள் கண்டு கொண்டு தங்கள் அணிகளை உஷார் படுத்தி விடுகின்றனர்.  இது குறித்து நம்ம இரண்டாவது வீரன் எவ்வளவோ எச்சரித்தும் படையின் போக்கினை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போகிறது. வெள்ளையர்களை வஞ்சம் தீர்த்து கொள்கின்றனர்.  அன்று மட்டும் இறந்த அமெரிக்க வீரர்கள் 263 பேர். இவ்வாறு செவ்விந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய இடம் பிடித்த செவ்விந்தியர்களின் எழுச்சி அமெரிக்க வரலாற்றை அசைத்து பார்த்தது. இந்த இனம் சியோக்ஸ் எனப்படும் இனம். வரலாறு இதனை பதிவு செய்து வைத்திருக்கிறது. 
                      
அப்புறம் என்ன நண்பர்களே! விடை பெறுவோம்! மீண்டும் சிந்திப்போம்! என்றும் அன்புடன்---ஜானி. 

2 கருத்துகள்:

  1. நண்பரே,

    இந்த கதையின் ஓவியரைப் பற்றி கொஞ்சம் சொல்லி விடுகிறேன் (அவர் ஒரு அசகாய சூரர் என்பதால்).

    ஜினோ டி அந்தோனியோ என்பவர்தான் இந்த கதையின் ஓவியர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் மாதம் 24ம் தேதி சிவப் ப்ராப்தியடைந்த இவர் இத்தாலி நாட்டுக்காரர்.

    அட்டகாசமான ஓவியர். வெஸ்டர்ன் கதைகளுக்கான தொடரை அற்புதமாக வரைந்து புகழ் பெற்றவர்.

    க்ளாசிக்ஸ் இல்லஸ்டிரேடட் வரிசையிலும் வரைந்துள்ளார்.

    தன்னுடைய கடைசி காலங்களில் கதாசிரியராக மாறிய இவர் எழுதிய கதைகள் நமக்கு மிகவும் பிரபலம் - CID ராபின் கதைகளே அவை.

    பதிலளிநீக்கு
  2. உரிமை பறிக்கப்படும் போது பொங்கி எழுவது வீரர்களின் குணம். சிவப்பிந்தியர் மற்றும் வெள்ளை இன வீர்களின் கதையை நன்றாக சொல்லி இருகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...