சனி, 15 டிசம்பர், 2012

ஏர்போர்ட்டில் மாயாவி - பொன்னி காமிக்ஸ்


வணக்கம் தோழமை கொண்ட நெஞ்சங்களே!
 உங்கள் நெஞ்சில் மகிழ்ச்சியை பெருக்கெடுத்து ஓட (இல்லைனா என்னை ஓட ஓட விரட்டி வரவைக்க போகிற ஹி! ஹி! ஹி! ) இந்த அற்புதமான கதைத் தொகுப்பை உங்கள் முன்னர் சமர்பிப்பதற்கு முன்பு தற்காப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். அந்த இளவரசன் குதிரை மேல ஏறி பறந்து போனானாம்! என்பார் என் பாட்டிம்மா. நான் “அது எப்படி பாட்டி பறக்கும்? அதுக்கு ரெக்கை இல்லையே? என்று கேட்டால், “ கண்ணே! கதைக்கு கண்ணும் கிடையாது! காதும் கிடையாதுடி செல்லம்!! என்று நான் லாஜிக் பார்த்து கேட்கும் கேள்விக்கெல்லாம் எங்க ஆயா தாயார் அம்மாள் அவர்கள் அழகாக முற்றுபுள்ளி வைத்து விடுவார்கள். அதே கதைதான் இங்கேயும்!
நண்பர்களே!
நான் சொல்வது ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஐந்துகளில் (In the year 1985 and above and below and between ) நான் பிறந்து வளர்ந்த மண்ணான விழுப்புரம் மாவட்டம் மணலூர்ப் பேட்டையில் முதல் தொலைக்காட்சி பெட்டி வந்திறங்கியதே எனது தந்தையார் ஈராக்கில் இருந்து திரும்பிய காலத்தில் தான். காஸ்பர், மிக்கி மௌஸ், Snake on the monkey shadow, Super Man போன்ற திரைக் காவியங்களை வீட்டுக்கு வெளியில் வைத்து VCR ல் ஓட விட்டால் அதை அற்புதம்! ஆச்சரியமென வேடிக்கை பார்க்க, கண்டு ரசிக்க, ஒரு மிக பெரிய கூட்டமே திரண்டு வரும். அப்போது எங்கள் ஊரில் ஒரு தியேட்டர் இருந்தது “கணேஷ் அது எழுப்பும் குரலோசை விநாயகனே! வினை தீர்ப்பவனே! என்று என் தெரு வரை கேட்கும். இன்று அந்த தியேட்டர் இல்லை! எல்லாரும் உழைப்பில் மூழ்கிவிட்டனர். MONEY MINDED ஆகி விட்டனர்.
   அதன் பின்னர் மெதுமெதுவாக எங்கள் ஊரில் நிறைய தொலைக் காட்சி பேட்டிகள் அணிவகுப்பு துவங்கி விட்டது. அதில் திருமதி இந்திராகாந்தி அவர்களது இறுதி சடங்குகளை காண வசதியாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை உயரமான வீட்டின் மாடியில் பொறுத்தி விட்டனர். அன்னாரது இறப்புக்கு எங்கள் ஊரே சேர்ந்து துக்கம் கொண்டாடியது. ஊரில் கட்சிக்காரர்கள் என்றாலே வீட்டின் மீது கட்சிக் கொடி வண்ணமயமாக பட்டொளி வீசிப்  பறக்கும்! கட்சி ஊர்வலங்கள் என்றாலே ஊரில் லாரியின் முன்னால் ரதம் போன்று அலங்கரித்து சிறுவர்களை பொறி, வெல்லம் கொடுத்து உட்கார வைத்து விடுவார்கள். பின்னால் ஏறி ஒரு கும்பல் கட்சி பெயரை சொல்லி கத்தித் தீர்க்கும். எனக்கு பொறிதான் நண்பர்களே (ஹி! ஹி! ஹி!) வீட்டுக்கு தெரியாமல் ஏற்றி உக்கார வைத்து விட்டனர். இது குறித்து சொல்ல வந்த காரணம் எங்கள் ஊரில் ஒரு நிகழ்வை தெரிந்து கொள்ள அப்போதெல்லாம்  பெரும் துணையாக இருந்தது பத்திரிகைகள், மாத வார இதழ்கள்தான். எனவே காமிக்ஸ்கள் கொட்டிக்  கிடக்கும். அப்போது படித்து கொண்டிருந்த சீனியர் அண்ணன் ராதா கிருஷ்ணன் அவர்களிடமும், (மேஸ்திரியாக சென்னையில் தற்போது வாசம்) லக்ஷ்மி அக்காவிடமும், (குடும்பத்தலைவியாக உள்ளார்  ) அண்ணன் குணசேகரன் அவர்களிடமும் (எல்லை பாதுகாப்பு படையில் இருக்கிறார்! ஓவியம் வரைவதில் ஜித்தர்! வீட்டில் ஒரே சத்தியராஜ் ஓவியமாகவே இருக்கும்,அப்பா மருத்துவர்! குத்துச் சண்டை கற்றுக் கொடுத்ததில் என் குரு! காமிக்ஸ் பகிர்ந்ததில் என் நண்பன்! அண்ணா தொடர்பு கொள்ளுங்கள் ப்ளீஸ்!!) இருந்து நிறைய காமிக்ஸ்கள் அறிமுகம் ஆகின. என் சித்தப்பா திரு. அருள் சாமி  ( குன்னு சித்தப்பா என்று செல்லமாக அழைப்போம்) அவர்கள் ஒரு வாடகை நூல் நிலையம் நடத்தி வந்தார். அது மணலூர்ப் பேட்டை பேருந்து நிலையத்தின் மிக அருகில் அமைந்து இருந்தது. சிறு வயதில் அவ்வப்போது அங்கே நுழைவேன். 
தாத்தா திரு.அமிர்தன் அவர்களுடன் செல்லும்போது டீ கடையில் கிடைக்கும் சிறுவர்மலர்தான் அதிகமாக ஆரம்பத்தில் நான் படித்தது.அதில் வரும் உயிரை தேடி கதை இது எனக்கு மிக மிக மிக பிடித்தமான கதை!
கூடுதல் விவரம் இங்கே http://www.comicology.in/2009/03/survival-siruvar-malar-1988-i.html!

-எங்கள் ஊரில் லயன், முத்து காமிக்ஸ், ஜூனியர் லயன், மினி லயன், மேத்தா காமிக்ஸ், பொன்னி காமிக்ஸ் வாங்கிவரும் ரசிகர்கள் மூலமாகவும், ராணி காமிக்ஸ் கடைகளில் நேரடியாக விற்பனையின் மூலமும் கிடைத்து வந்தன.
-பொன்னி காமிக்ஸ் மதுரையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் எங்கள் மண்ணின் மைந்தர்களால் ஆராதிக்கப்பட்டவள்!!!
-நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு கிராமங்களில் வீடு வீடாக புகுந்து புறப்பட்ட காமிக்ஸ்களின் வரிசையில் இவளுக்கும் மிக பெரிய பங்குண்டு. 
-புத்தகங்களின் பொற்காலம் அது!
-தொலைக்காட்சி மக்களிடையே புகுமுன் காமிக் புத்தகங்களின் வீச்சு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த காலம் அது. 
-சீனக் கதைகள் ஒரு தலைமுறை ஹீரோ, அடுத்த தலை முறை ஹீரோ என்று அடுத்தடுத்த கதைகளாக வெளியிடப்பட்டது. அந்த கதை படித்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ளவும். ப்ளீஸ்!   
-பொன்னியில் என்னை அதிகம் கவர்ந்தவர் மாயாவிதான்!! அதை தவிர ஒரு விஞ்ஞானி;அவரது கிறுக்கு கண்டுபிடிப்புகள்;அவை ஏற்படுத்தும் கலாட்டாக்கள்; அதை அடக்க ஒரு ஹீரோ என்ற ரீதியில் நிறைய கதைகள் வெளியாகின. அவை அந்த காலத்தில் எனக்கு மிக பிடித்த கதைகள்!!
-மிக மிக மிக கவனமாக படிக்க வேண்டிய ஒரு செய்தி
அன்பு நண்பர்களே! இரும்புக்கை மாயாவி படித்து விட்டு அதை சொல்லி நான் செய்த கலாட்டாக்களால், என் அராஜகம் அத்து மீறுவதை பொறுத்து கொள்ள முடியாத என் மாமாக்கள் திரு.பிரபு (தற்போது இங்கிலாந்தில்)மற்றும் திரு.சாலமோன் (தற்போது திருக்கோவிலூரில்) ஆகியோர் என்னைப் பிடித்து ஒரு ஈசி சேரில் கையையும், காலையும் கட்டி வைத்து, ஒயரை கனெக்ட் செய்து, பிளக்கில் செருகி விடுவேன் என்று அச்சுறுத்த நான் அலறிக் கத்த எனது ஆயா வந்து காப்பாற்றி, என் மாமாக்களை திட்ட, ஒரு குட்டி கலாட்டாவே அரங்கேறியது. அன்று மட்டும் மின்சாரம் பாய்ந்திருந்தால் நான் மாயாவியாக, பேயாவியாக  இன்று அலைந்து காமிக் தேடும் ஆவியாக திரிந்து கொண்டிருந்திருப்பேன். நிற்க! அவர்கள் இருவருமே காமிக்ஸ் ரசிகர்களே! ஆனால் என் சிறுவயது குறும்பு அப்படிப்பட்டது!! ஹி! ஹி! ஹி!   
     ஒரு கட்டத்தில் வெறுப்பான என் பாட்டி, அத்தைகள் ஓட ஓட விரட்டி பிடித்து, என்  உச்சி மண்டையில், தோல் செருப்பு துண்டை, நெருப்புக் காட்டி சூடு வைத்தாவது பிடித்த பேய் இறங்கும் என்று சூடு வைத்தனர். ஹெஹெஹெஹ் ... சரி சிரித்து கொண்டே கதைக்கு வரலாமா? 
இது அக்மார்க் உள்நாட்டு தயாரிப்பு நண்பர்களே! ஆதலால் கதை களமும் வேறு மாதிரியானது. நல்ல உள்ளம் கொண்ட மனிதரான மாயாவி தனது கரத்தை இழந்து ஒரு விஞ்ஞானியை காப்பாற்றுவார். அதில் அவர் கை துண்டாகி விடும். இதனை கண்காணிக்கும் வேற்று கிரக ஆசாமிகள் அவருக்கு செயற்கை கை பொருத்தி விடுவார்கள். அதிலிருந்து அதிரடி ஆரம்பம்!   
சங்கம் வளர்த்த மதுரையம்பதியில் மலர்ந்த காவியம் சிலப்பதிகாரம் மட்டுமல்ல தோழர்களே. வெளி நாட்டு கதையின் பாதிப்பில் உள்நாட்டு ராஜாக்களின் கைகளில் மிளிர்ந்த அருமையான வெளியீடான பொன்னி காமிக்ஸ் பெருமையுடன் வழங்கும் "ஏர்போர்ட்டில் மாயாவி!!"
 இந்த கதைக்கு நன்றிகள் அனைத்தும் பொன்னி காமிக்ஸ் நிறுவனத்தினருக்கே சேரும்! அவர்கள் ஆட்சேபிக்கும் பட்சத்தில் கதை சுருக்கி சொல்லப்படும் என்று தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
அடுத்த காமிக்ஸ் பற்றி அட்டகாசமான விளம்பரம் மலர்கிறது பாருங்கள்! வருமா இப்படி ஒரு அட்டகாசமான சிந்தனை??
 முந்தைய இதழ்கள் கிடைக்கும் வண்ணம் அழகாக இருப்பு பட்டியலை பின் அட்டையை அலங்கரிக்க செய்துள்ளனர்!

மீண்டும் மீள, மிளிர வேண்டும் காமிக்ஸ் கலை!!! என்ற என் எண்ணங்களை தெரிவித்து கொண்டு விடை பெறுகிறேன். வர்ட்டா? என்னிக்காவது கையில மாட்டட்டும் என்று கொலை வெறியில் நீங்கள் ஆழு முன் பாய்!! பாய்!! சீ யு!!! 
இது வரை விடாமல் படித்து அழுவாச்சியில் இருக்கும் உங்களுக்கு நிறைந்த வாழ்த்துக்களுடன் --ஜானி 
பின் குறிப்பு! விரைவில் சந்திப்போம்!! மறுபடி ஒரு பொன்னி காமிக்ஸ் உடன்! ஹீ! ஹீ! ஹீ!

28 கருத்துகள்:

 1. அண்ணனின் அருமையான பதிவில் முதல் கமெண்ட் என்னுடையதே.

  தொடர்ந்து பதிவிடும் உங்களது ஆர்வம் பாராட்டிற்கு உரியது.

  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
  உண்மை கதையின் தரம் குறைந்திருந்தாலும் காமிக்ஸ் படிக்கும் எனது சிறிய வயது ஆவலை பூர்த்திசெய்தது.
  மேலும் பல கதைகளை பகிர்ந்தளிக்க கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. Hi John,

  I had lot of chances to have all the ponni comic collection unfortunately I missed all the chances as it was not fascinated me. Now I feel so jealous after seeing couple of reviews about ponni. no other go now except watching the scans and gasping :( stomach burning sound kekutha.
  Yes I am from Chennai only, working in Bangalore. Sorry for the delay reply john. Expecting more reviews from you on coming days.
  One question. How come you scanned these many pages patiently. Ninachale kanna katuthe

  பதிலளிநீக்கு
 4. வரவுக்கு நன்றி கிரி அவர்களே!
  IF WE LOVE! ALL THINGS HAPPENS! THANKS AGAIN FOR COMING!

  பதிலளிநீக்கு
 5. உண்மையை மறைக்காம சொல்லனும்னா எனக்கு பொன்னி காமிக்ஸ் சுத்தமா புடிக்காது - சின்ன வயசுலேயும்! :) கூட்டத்தோட ஒண்ணா ஒக்காந்து TV பார்த்தது ஒரு காலம், இப்போ எல்லாம் கூட்டம் கூடினாலே பஞ்சாயத்துதான் ஆகுது! :D

  பதிலளிநீக்கு
 6. பரவால்லை தோழர்! பிடிக்காமல் போனால் பிடிக்கலை என்றுதானே சொல்ல முடியும். காலம் மாறி விட்டதுதானே!வருகைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. ஆனால் இன்னும் எனக்கு பிடிக்கிறது நண்பா!

  பதிலளிநீக்கு
 8. http://mokkaicomics.blogspot.in/2012/10/blog-post.html இதனையும் ஒரு முறை அலசிடுங்கள்! மிக சிறப்பான பதிவுகள் உள்ளன!

  பதிலளிநீக்கு
 9. கலைப்பொன்னி காமிக்ஸை மறக்கவே முடியாது,உள் நாட்டு சரக்கு என்ற போதிலும் .
  அவர்களது பதிப்பகம் தெற்கு மாசி வீதியில் இருந்ததாக நினைவு.
  உங்களது பதிவு மிகவும் அருமை.
  நான் இழந்த பல காமிக்ஸ்களில் இதுவும் ஒன்று.அந்த வகையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் .
  இன்னும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 10. ஆரம்பமே அதிரடியா? வருக! வருக! வலைப்பூவுக்கு உங்கள் பங்களிப்பு பெருக! பெருக! என வாழ்த்துகிறேன். நிறைய காமிக்ஸ்களைப் பகிர்ந்து பலரை மகிழ்வில் ஆழ்த்த என் வந்தனங்கள் பரிமள்!:-D

  பதிலளிநீக்கு
 11. ஹி! ஹி! ஹி! நான் ரோபோ இல்லன்னு உங்க ப்ளாக்கிடம் மொபைல் மூலமா எவ்வளவோ முறை எடுத்து சொல்லியும் போய்யா! போ எனக் கூறி விட்டதால் எனது ப்ளாக்ல போட்டு விட்டேன் பரிமள்! வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
 12. SANGA THAMIZH MANNNIL IRUNTHU ORU SINGA THAMIZHAN! NALVARAVU NANBAR DHANBAALAN AVARGALE!

  பதிலளிநீக்கு
 13. சற்று முன்புதான் நானும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தோம். இணையத்தில் ராணி காமிக்சு, டிஸ்னி காமிக்சு போன்ற பல கிடைக்கின்றன. ஆனால், பொன்னி காமிக்சு ஒன்று கூட இல்லை; அதே போல், இரும்புக்கை மாயாவியும் ஒன்று கூட இல்லை என்று. பார்த்தால் நீங்கள் இங்கு எப்பொழுதோ பதிவு செய்துவிட்டிருக்கிறீர்கள். இரும்புக்கை மாயாவி நான் படித்திருக்கிறேன். ஆனால், அது பொன்னி காமிக்சுடையது என்று நினைவில்லை. பொன்னி காமிக்சு என்றால் என் நினைவுக்கு வருவது மந்திர தந்திரக் கதைகள்தாம். ஆனால், இங்கு உங்கள் மேற்கண்ட பதிவின் இறுதியில் உள்ள பின் அட்டைப் படத்தைப் பார்த்ததும் சிறு வயதில் பார்த்த அந்த அட்டை மீண்டும் நினைவுக்கு வருகிறது. மிக்க நன்றி!

  படத்தை இன்னும் கொஞ்சம் நீங்கள் நன்றாக வருடி (scan) இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 14. தங்களது தங்கமான கருத்துகளுக்கு நன்றிகள் தலைவரே!

  பதிலளிநீக்கு
 15. நல்ல ஸ்கேன் விரைவில் வெளியிடப்படும்!

  பதிலளிநீக்கு
 16. நல்ல ஸ்கேன் விரைவில் வெளியிடப்படும்!

  பதிலளிநீக்கு
 17. நல்ல ஸ்கேன் விரைவில் வெளியிடப்படும்!

  பதிலளிநீக்கு
 18. நல்ல ஸ்கேன் விரைவில் வெளியிடப்படும்!

  பதிலளிநீக்கு
 19. //நல்ல ஸ்கேன் விரைவில் வெளியிடப்படும்!// - மிக்க மகிழ்ச்சி! நன்றி!

  பதிலளிநீக்கு
 20. Hi Johny,
  Just stumbled upon your blog. Super excited and surprised!.
  Guess who is this?
  "என் மாமா முறை உறவினர்கள் ஒரு ஈசி சேரில் என்னை கையையும், காலையும் கட்டி வைத்து, ஒயரை கனெக்ட் செய்து, பிளக்கில் செருகி விடுவேன் என்று அச்சுறுத்த.." Yes, I am one of those duos :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. hi mams, how are you.. i am really happy. 9498127882 my whats app. welcome to my blog. always talking about you with solomon mama and remember those golden comics times.. thanks for the comment.

   நீக்கு
  2. Great to catchup with you after some 30 years, Johnny. Yes, I remember our golden comics time.
   நம் சொந்தங்களில், இதுவரை எனக்கு மட்டுமே காமிக்ஸ் பைத்தியம் தெளியவில்லைனு நெனச்சிக்கிட்டுருந்தேன். இப்போதான் தெரியுது நான் காமிக்ஸ் உலகத்தில் "ஜுஜுபி" என்று!.. :) :)

   நீக்கு
  3. கலக்குங்க. வாழ்த்துக்கள்
   Fantastic FB page:
   https://www.facebook.com/groups/tamilcomicstimes/

   Super release video.
   https://youtu.be/bcotkOACKBc

   Happy to see your mum. She looks like சின்ன வயசில் நான் பார்த்த தாயார் அத்தை :)

   நீக்கு

செங்களத்தில் சாகா ஆட்டம்_மெர்லினின் மந்திர டைரி_நிறைவுப்பகுதி

வணக்கங்கள் நண்பர்களே..  சில பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த நண்பர்களுக்காக இந்த கதை முற்றிலும் வாசக இரசனைக்காக அன்பளிக்கப்படுகிறது. விருப...