வியாழன், 6 டிசம்பர், 2012

Dynamite ரெக்ஸ்----ஒரு மாவீரன்!!!

அன்பு நண்பர்களே! எனது வணக்கங்கள்! என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் வந்தனங்கள்! கொடுக்க வேறு என்ன பரிசு என் வசம் இருக்கு? இருக்கிற காமிக் புத்தகங்களை அன்போடு பகிர்ந்து கொள்கிறேன்!
             டைனமைட் ரெக்ஸ் --மிக சிறப்பாக அறிமுகம் ஆன கதை நாயகன்!! எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ! கதையும் அதன் சித்திரங்களும் மிகவும் தரம் வாய்ந்தவை. கதை இதுதான் தனது சகோதரனின் மரணத்தினால் பாதிக்க பட்டு இனி ஒரு உயிரும் தீவிரவாதிகளினால் பறிபோகக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனைகள் கொண்டு பாவிகளை அழிக்க கிளம்பி பட்டை கிளப்பும் ஹீரோ!

நமது முத்து காமிக்ஸ் கடந்த 1996 பிப்ரவரி மாதம் வெளியிட்ட சிறப்பான வெளியீடு இது!
இந்த கதை பற்றிய விமர்சனங்கள் உங்கள் மகத்தான பார்வைக்கு::





இந்த கதையின் விமர்சனங்கள் மிக சிறப்பாக அமைந்து இருந்தன! இந்த பக்கத்தினை உற்று கவனித்தால் கிரைம் டைம் பகுதியில் நான் சரியான விடையை எழுதிய நபர்களில் ஒருவனாக துண்டை போட்டு இருப்பேன். ஹி! ஹி! ஹி!
இவரது அடுத்தடுத்த சாகசங்கள் வராமல் ஒரு இடைவெளி விழுந்து விட்டது நண்பர்களே! கதையை படித்து விட்டு சாவகாசமாக சிவகாசிக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். நன்றிகள் நாகராஜ் அவர்களுக்கும், புனித சாத்தான் அவர்களுக்கும்!








18 கருத்துகள்:

  1. இந்த பதிவில் ஏன் உங்க புகைபடத்தை போட்டு பயப்படுத்தாம விட்டுபுட்டீங்க ஜி ....:)
    இந்த புத்தகம் படித்த ஞாபகம் சுத்தமாக மறந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  2. இந்த பதிவில் ஏன் உங்க புகைபடத்தை போட்டு பயப்படுத்தாம விட்டுபுட்டீங்க ஜி ....:)
    இந்த புத்தகம் படித்த ஞாபகம் சுத்தமாக மறந்து விட்டது...

    பதிலளிநீக்கு
  3. ஜேம்ஸ் பான்ட் கதைபோல அட்டைபடம் ,உள்ளே வரைந்துள்ள படங்களும் நன்றாக இருந்தன. கதை எனக்கு நன்றாக நினைவிருப்பதோடு புத்தகமும் நல்ல நிலையில் என்னிடம் உள்ளது

    பதிலளிநீக்கு
  4. என்னிடம் இந்த புத்தகமும் இதன் அடுத்த பாகம் (ரவுடி ராஜ்யமும்) உள்ளது நண்பரே.

    http://www.kittz.info/2012/08/xii.html

    பதிலளிநீக்கு
  5. //இந்த பதிவில் ஏன் உங்க புகைபடத்தை போட்டு பயப்படுத்தாம விட்டுபுட்டீங்க ஜி//
    :) :) :)

    Good question Stalin!

    பதிலளிநீக்கு
  6. 'தாமத' பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே ...

    பார்ட்டி எங்கே நண்பா .. இடத்தையும் தேதியையும் சொன்னால் நல்ல இருக்கும் ... ஹி ஹி ஹி ...

    பதிலளிநீக்கு
  7. Varugaiku valthukkal! Pani sumai athigam nanbargale! Koodiya viraivil varen!

    பதிலளிநீக்கு
  8. ஸ்டாலின் ஜி அவர்களே கொஞ்சம் நாட்கள் கழித்து இங்கே வாருங்கள்!! அனைத்து பக்கங்களும் தங்கள் அனைவர் வரவுக்காக காத்திருக்கும்!!

    பதிலளிநீக்கு
  9. பார்டிதானே பட்டையை கிளப்பிடலாம் ஹி ஹி உங்க செலவில்!

    பதிலளிநீக்கு
  10. போடோ போட அவகாசமில்லை நண்பரே!

    பதிலளிநீக்கு
  11. //உற்று கவனித்தால் கிரைம் டைம் பகுதியில் நான் சரியான விடையை எழுதிய நபர்களில் ஒருவனாக துண்டை போட்டு இருப்பேன்.// Kaaval Thurai athikarinaa summaavaa? :-)

    Nice Post :-)

    பதிலளிநீக்கு
  12. அப்ப நான் காவலன் இல்ல ப்ரோ!

    பதிலளிநீக்கு
  13. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே !அன்றே நீங்கள் காவல் துறைக்கு புலனாய்வு செய்ய வருவீர்கள் என்பதகற்க்கான விதை லயன் தோட்டத்தில் போட பட்டு விட்டது நண்பரே !
    டைனமைட் ரெக்ஸ் மறக்க முடியுமா !

    பதிலளிநீக்கு
  14. அப்புறம் உங்களது தப்பி ஓடிய இளவரசியை சுட்டேன் !வியப்பால் விழிகளை விரிய செய்த அந்நாளைய பிரமிப்பை ஏற்படுத்திய ,எகிப்து உடைகள்,பாரோக்கள்,மதகுருமார்கள் உடைகள் என இப்படிதான் எகிப்து என கண் முன்னே விரிய செய்த அந்த கதையே காமிக்ஸ் உலகில் எப்போதும் என் மனதில் முதலிடம் !அது போன்ற கதைகள் நமது லயனில் வந்தால் ,இப்போதைய வண்ணத்தில் அதே கதை வந்தாலும் அடடா ....

    பதிலளிநீக்கு
  15. சிறுவர்களோடு சிறுவராய் நம்மையும் ஈடு படுத்திய உணரு அப்போது !

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கு நன்றிகள் இரும்புக்கையரே! லயன் தோட்டத்தில் நாம அனைவருமே மலர்களே! இளவரசி ஆங்கில லிங்க் கிடைத்தால் போடுங்கள்!

    பதிலளிநீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...