செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டு பொங்கல் வாழ்த்துக்களுடன் !!

அன்பு சொந்தங்களே! நண்பர்களே! 
ஆருயிர் தேசத்து பிரஜைகளே!
 வணக்கம்! 
                  ஊர்ல நம்ம வீட்டு அன்பு நிறை மாட்டுக்கு குளியல் போட வைத்து, கொம்பு சீவி, கொம்புக்கு பெயிண்ட் அடித்து , மஞ்சள் தடவி, மாலை போட்டு, குங்குமம், சந்தனம் மணக்க போட்டு வைத்து அதன் முன்பு பொங்கலிட்டு பூஜை செய்து வாயில் பொங்கலை ஊட்டி அன்பாக சொரிந்து விட்டு ஆஹா! என்ன மாதிரி ஒரு கவனிப்பு??  இன்றும் பசு மாடும் தன் பாலை, தன் கன்றுக்கும், நமக்கும் ஈந்து  ஒரு தாயாய்தான் விளங்குகிறாள்! அவளுக்கு இன்று நமது வாழ்த்துக்கள்! உழைப்புக்கு இன்றும் உதாரணமாய் விளங்கும் காளை மாட்டுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்! 
                     இன்றும் மிக சிறப்பாக ஜன திரளின் மத்தியில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது! நம்ம காமிக்ஸ் ஸ்டால் புதிய பழைய கணிபொறி யுக அந்தகால அனைத்து தரப்பு ரசிகர்களாலும் நிறைந்து வழிகிறது! மற்றுமுள்ள அனைத்து புத்தக ஸ்டால்களும் அப்படியே! வாரிக்கொண்டு போக மிக சிறப்பான புத்தகங்கள் கொட்டி கிடக்கின்றன! பார்த்து ரசிக்கவே பல நாட்கள் ஆகும் போலிருக்கிறது! மணிமேகலை பிரசுரத்தார் முப்பது புத்தகங்களை வெளியிட்டு உள்ளனர் என்று காற்று வாக்கில் தகவல்கள் கொட்டின. அவர்களது சீரிய முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்! 


இருளில் ஒரு இரும்புக் கொட்டகை!

 நுழைவாயில்!


 ப்ளூ பெர்ரி! மகிழ்ச்சியில் மிதந்து கொண்டு!!
 நம்ம ஸ்டால்!



 ஸ்டார் காமிக்ஸ்! அடுத்த புத்தகம் வரவேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் ஆதரவு கரம் நீட்டினார்கள்! அந்த புத்தக ஸ்டாலில் மற்ற புத்தகங்கள்!




 சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல் விலை நானூறு மட்டுமே!













இதுவும் குறைவாக கிடைக்கிறது தோழர்களே! இவரை கொண்டு வர நம்ம ஆசிரியரை உசுப்பேத்தலாமா? அடிதடி மன்னன் இவர்! கொஞ்சம் மாயாஜாலம் நிரம்பிய கதை வரிசை! 


 இதில்தான் கிடைக்கிறது!
 நம்ம முத்துவின் முத்தான வளர்ச்சிக்கு கைகொடுக்கும் நண்பர்களின் ஸ்டால்!





 உணவு பொருட்கள் ஸ்டால்!

 ஊட்டியிலிருந்து!



 காமிக்ஸ் வரிசையில் சேர்க்க மற்றுமொரு முயற்சி ரிசர்வ் பேங்க் காமிக்ஸ் வெளியீடு!

 அய்யா ஞானி அவர்கள்! தொந்தரவு கொடுக்காமல் ஒதுங்கிவிட்டேன்! சாரி!

 வெளியே நடைபாதை கடையில் நம்ம காமிக்ஸ் மற்றும் ராணி காமிக்ஸ் கொட்டி கிடந்தபோது! இப்போ இருக்குமா தெரியாது! எல்லாம் கொஞ்சம் புதிய கதை வரிசையே!
கீழே தி.நகரில் ஒரு வித்தியாசமான காட்சி சாமியார் யாரோ???
விரைவில் வேறு ஒரு பதிவில்; இப்போ போய் அப்புறம் பார்க்கலாம்! 
என்றும் அதே அன்புடன் ஜானி

2 கருத்துகள்:

  1. உங்கள் புத்தக கண்காட்சி பதிவுகளை பார்க்கும்போதுதான் தெரிகிறது, நீங்கள் அடிக்கடி மாயமானதின் காரணம்.

    கோனான் தி பார்பேரியனைப் போல பல நூறு சூப்பரான காமிக்ஸ் ஹீரோக்கள் இருக்கின்றார்கள். அவர்களையெல்லாம் கொண்டுவர எடிட்டரை உசுப்பேத்த வேண்டும் என்றால், உசுப்பேற்றுவதற்கென்றே ஒரு பெரிய கம்பெனி ஆரம்பித்து 50 கோடி ஷேர்களை விற்று, அந்த கம்பெனி மூலமாகத்தான் கார்ப்பரேட் லெவலில் உசுப்பேத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா கலக்கலான ஆலோசனை தோழா!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...