திங்கள், 11 மார்ச், 2013

லார்கோ ஒரு வெற்றி வீரன்!

     

     வணக்கம் வலையுலக வாசக செல்வங்களே! மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! தாயாக, தங்கையாக, இல்லத்தரசியாக, மகளாக, பெண்கள் வகிக்கும் பங்குக்கு ஒரு சல்யூட்! வாழ்க பெண்கள்! 
   நண்பர்களே! லார்கோ இந்த முறை தனது அதிரடியை விரிக்கும் களம் போதை பொருள் கடத்தல்! மிக கொடுமையான ஒரு வஸ்து போதை பொருளாகும்! போதை பொருளை கடத்தும் ஒரு சிலரை வாழ வைக்கும் அதே வஸ்து, புதிய தலைமுறை வீழ காரணமாக அமைகிறது. கஞ்சா, அபின், ஹெராயின் என்று எந்த பெயரிட்டு அழைத்தாலும் மிக மோசமான விஷமாகிய  அதனை அழித்து இளைய சமுதாயத்தினை காத்திட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது!
லார்கோ கதையில் போதை பொருளை லார்கோ தனது குழுவினரின் உதவியுடன் அழிப்பதும் ஆணி வேரினை பிடுங்கி எறிவதுமே காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. முதலில் ஒரு நபர் (லார்சன்) பலியாவதாக காட்டப்பட்டு பின்னர் அவரது கதை விவரிக்கப்பட்டுள்ளது. லார்கோ தனது வாழ்வின் பாதையில் போகிற போக்கில் செய்த உதவிகளில் ஒரு போதை பொருள் நிபுணனின் வாழ்வின் பாதையை மாற்றி நல் வாழ்வு அமைத்து கொடுக்கிறார். ஆனால் உயிருக்கும், உள்ளத்துக்கும் கேடு விளைவிக்கும் போதைப் பொருளின் பாதை எவ்வளவு கொடுமையானது என்பது பரோனஸ் என்னும் பெண்ணின் வழியாக அவளது வலியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. போதையில் சிக்கிய நபர் பின்பு பலவிதங்களில் அடிமையாக கிடக்கும் அவல நிலை மிக அழகாக ஆழமாக தகுந்த கதை கருத்தாக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவற விடக் கூடாத அருமையான படைப்பு ஆங்கிலத்தில் “Dutch Connection” & “H” துரத்தும் தலைவிதி & விதியோடு விளையாடுவேன் என்கிற தலைப்புகளுடன் தமிழில் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது! நட்பின் மகத்துவம் இலைமறை காயாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இறுதியில் போதையின் பாதையில் தடம் மாறினாலும் நல்ல நட்புக்கு போதையை வெல்லும் வல்லமை உண்டு என்பதை மிக அழுத்தமாக இந்த கதை பதிவு செய்த வகையில் மிக சிறப்பான கதையாகும். லார்கோ மரணத்தின் நுனியில் நிற்கிறார். போதைக்கு அடிமையான பெண்ணின் நண்பர் அவர். அவரை காக்கும் பொருட்டு தனக்கு போதையின் பாதை காட்டியவனையே வீழ்த்துகிறாள் அந்த வீர மங்கை. மகளிர் தின நன்னாளில் வெளியாகி இருக்கும் இந்த கதை மிக அருமையான ஒரு கதையாக அமைந்துள்ளது! சைமன் தனது சிறப்பான அதிரடிகளால் கலக்குகிறார். தன்னை தாக்கிய பெண்ணை தூக்கி கடலில் சுறா மீன்களின் மத்தியில் வீசுவதாகட்டும். மீண்டும் அவள்மீது இரக்கம் கொண்டு மீட்பதாகட்டும். கடைசிவரை அவளை காக்க போராடுவதாகட்டும். அவரது பகுதி மிக சிறப்பான முறையில் அமைந்துள்ளது. தலைவெட்டி தாண்டவராயனை நெருப்பில் ஆகுதியாக செய்யும்போது லார்கோவினை தூக்கி சாப்பிட்டு விடுகிறார். அதிரடிகளின் இறுதியில் இவ்வளவு கொடுமைகள் இழைத்து தப்பி செல்லும் வில்லனை கோட்டை விட்டு விட்டார்களே என நினைக்கும் தருணத்தில் லார்கோவின் அதிரடி கதாநாயகன் அவரே என்பதை உறுதி செய்யும் விதத்தில் செம்மையாய் அமைந்து சிறப்பிக்கிறது. தவற விடக் கூடாத இதழ் இது. மீண்டும் சந்திக்கும் வரை வாழ்த்துக்கள்! பை!    


இது http://senthilvayal.files.wordpress.com/2009/04/tamil-grammer-in-easy-english.pdfமிக சிறப்பான ஒரு தளம். மிக முக்கியமான புத்தம் புது தகவல்களை பகிரும் அருமையான தளம். இது  http://www.tamilagaasiriyar.com/p/tamil-e-books.html
பயனுள்ள ஒரு தளம். ஒரு விசிட் அடிங்க நண்பர்களே!

10 கருத்துகள்:

  1. போதையின் கொடுமையை அந்த பெண்மணி மூலம் நன்றாக காட்டி உள்ளார் கதாசிரியர்

    கதையும் மிகுந்த வேகத்துடன் இருந்தது.

    படித்த எனக்கு முழு திருப்தி.



    பதிவும் நன்றாகவே இருந்தது நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. vanakkam Krish! Muthalil vanthu perumai serthamaikku valthukkal!

    பதிலளிநீக்கு
  3. சமீப கால பதிவுகளில் சில பயனுள்ள வலைத்தள இணைப்புகளை தந்து கலக்குறீங்க காவலரே!

    இந்த கதையை இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு வணக்கங்கள் ஜி! கொலைகார குரங்குங்களை வெச்சி அதிரடியா பதிவப் போட்டுட்டீங்க! உடம்பைப் பார்த்துக்குங்க! பழம்பெருமை பறைசாற்றும் அற்புதக்கதைகளை தங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்! கலக்குங்கள்!

      நீக்கு
  4. முத்து மினி
    1 வாயு வேக வாசு
    2 படகு வீடு மர்மம்
    3 புதையல் தீவு மர்மம்
    4 சூரப்புலி சுந்தர்
    5 காந்தமலை மர்மம்
    6 தபால் தலை மர்மம்
    7 இன்ஸ்பெக்டர் விக்ரம்
    8 முதல் வேதாளனின் கதை

    பதிலளிநீக்கு
  5. ஸ்டாலின் ஜி,

    எல்லா புத்தகத்தையும் அப்படியே எடுத்து வையுங்க...

    இந்த வாரம் உங்க வீட்டுக்கே வந்து வாங்கிட்டு போறேன் :)

    பதிலளிநீக்கு
  6. ITHU SUPER ILLAI? STALIN JI! NADANTHA SAMBAVATHUKKUM ENAKKUM ENTHA SAMMANTHAMUM KIDAIYAATHU! HE HE HE

    பதிலளிநீக்கு
  7. ITHU SUPER ILLAI? STALIN JI! NADANTHA SAMBAVATHUKKUM ENAKKUM ENTHA SAMMANTHAMUM KIDAIYAATHU! HE HE HE

    பதிலளிநீக்கு
  8. அட தேவுடா மினி முத்து லிஸ்ட் ஜானி கேட்டிருந்தார் அதுதான் இது. இதில் உள்ள புத்தகத்திற்கும் எனக்கும்கூட சம்பந்தம் இல்லை :)

    பதிலளிநீக்கு
  9. ஹி ஹி இதுக்கு பெயர்தான் கிரேட் எஸ்கேப்! ஸ்டாலின் ஜி! ஹி! ஹி!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...