வியாழன், 7 மார்ச், 2013

விண்வெளி விசித்திரங்கள்! நடமாடும் சரித்திரங்கள்!

அன்பு மிகு காமிக்ஸ் ஆர்வலர்களே! வணக்கம். தங்களின்  தணியாத காமிக்ஸ் பேரன்புக்கு மேலும் மேலும் வண்ணம் சேர்த்திடும் விதமாக லார்கோ  ஆக்சன் ஸ்பெஷல் புத்தகம் நூறு ரூபாய் விலையில் வெளியாகி விற்பனையில் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது! துரத்தும் தலைவிதி, விதியோடு விளையாடுவேன் என இரு தலைப்புகளும் அந்தாதி தொடைக்கு அழகான இடம் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது! தமிழுக்கு அணி சேர்க்கும் விதமாக மற்றுமோர் மகுடமான இந்த நூலை கட்டாயம் தவறவிட வேண்டாம் தோழர்களே! நண்பர்கள்  பாண்டி D.செந்தில் குமார், கார்த்திக் சோமலிங்கா, பொடியன் ஆகியோருக்கு எந்தன் வாழ்த்துக்கள்!  



முத்தான முத்து காமிக்ஸ் தனது பொற்கால கட்டத்தில் வெளியிட்ட ஒரு அருமையான புத்தகம்தான்கொலைகார கபாலம்!
அதில் வெளியாகிய சிறப்பான கதைதான் இந்த நடமாடும் விசித்திர மரங்கள்! இவையெல்லாம் பூமியை ஆட்சி செய்ய எண்ணி வந்து வாங்கி கட்டிக்கொண்ட வஸ்துக்கள்! கதை நாயகர்கள் சாதாரண மனிதர்களே! அசாதாரணமான இந்த வஸ்துக்கள் அழிந்து போவது மிக சாதாரணமான பொருளால்! படிக்க சுவாரஸ்யம் மிகுந்த கதை! படிக்க பாதுகாக்க வசதியாக வாசகர்களின் அன்பை பெற்ற லயன் முத்து காமிக்ஸ் விற்பனைக்கு புத்தம் புது புதுமை, நவீனம் மிகு நூல்களை நேரடி சந்தா முறையில் கொண்டு வந்துள்ளார்கள். Please subscribe!  



























4 கருத்துகள்:

  1. அதிரடி பதிவு நண்பா ... புத்தகம் படிச்சு முடித்தாகி விட்டதா ?

    பதிலளிநீக்கு
  2. விட்டதானே நண்பா! க்றிஸ் ஒளிச்சி வைத்து விளையாடிக் கொண்டு இருக்கான்! படிச்சு விடுவோம்!

    பதிலளிநீக்கு
  3. அட இந்த நீல வண்ண அட்டை கூட நன்றாகத்தான் உள்ளது.
    உங்கள் ஜுனியர் வில்லனுக்கு ஒரு வேலி படித்துவிட்டாரா?

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஸ்டாலின் ஜி! என் மகன் பார்த்து ரசித்து விட்டான்.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...