வெள்ளி, 5 ஜூலை, 2013

தற்காப்பு கலை மன்னன் ப்ரூஸ் லீ!

வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே! நலமா? நான் நலமே! இம்முறை உண்மையான ஒரு தற்காப்புக் கலைஞன் ப்ரூஸ் லீயின் சிறப்பான சில காமிக்ஸ் பங்களிப்புகளை தங்கள் கண்கள் முன்னர் விருந்துக்கு சமர்ப்பிக்க வந்துள்ளேன்! தனது தற்காப்புக் கலை திறமை மூலமாக அகிலத்தின் அனைத்து நாடுகளையும் அசைத்துப் பார்த்தவர் நம்ம ப்ரூஸ் லீ! என்டர் தி டிராகன் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் உடனடியாக கண்டு களித்து விடுங்கள். இல்லை என்றால் ஒரு உண்மையான கலைஞனின் திறமையை அறியாமலே கடந்து விடுவீர்கள்!

 


வாய்ப்புகள் வராது; நாம் தான் உருவாக்க வேண்டும்” - புரூஸ் லீ

1965
ம் வருடம். அப்போது அவனுக்கு வயது 25. 

இருவரும் சண்டை போடுவோம். நான் ஜெயித்தால், உன் பள்ளியைஇழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால் நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா? என்று புதிதாக தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தரும் புரூஸ் லீ யிடம் குங் ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென் சவால்விட்டார்.

எந்தவித தயக்கமும் இன்றி சவாலுக்குச் சம்மதித்தார் புரூஸ் லீ. 

சண்டை ஆரம்பித்தது. பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். 

அந்த ஒரே நிகழ்வில் அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவென பரவியது.

நிருபர்கள், ‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’ என்று லீயிடம் கேட்டனர்.

நான் தத்துவத்தைப் பாடமாக படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது. நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலையின்றி நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்என்றார் லீ. 

அதுவரை சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்த லீ உலகப் புகழ்பெற்றது அந்த நிகழ்வுக்குப் பிறகுதான்.

வாய்ப்புகள் வராது; நாம் தான் உருவாக்க வேண்டும்

நன் சக் என்னும் ஆயுதம்!


நமது முத்து காமிக்ஸில் மாவீரன் ப்ரூஸ் லீக்கு வழங்கிய மரியாதை 







ராணி காமிக்ஸில் வெளியான திசை மாறிய கப்பல் அட்டை 
கதை - திரைப் பட தொடர்பாக கப்பலில் பயணம் மேற்கொள்ளும் ப்ரூஸ் லீ வழியில் கப்பல் உடைந்து பாதிக்கப் பட்ட வழிப் பறிக் கொள்ளையரை தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கடலுள் பாய்ந்து காக்கிறார். "பாம்புக்குப் பால் வார்த்ததைப் போல" என்றொரு முதுமொழி தமிழில் உள்ளது. தீயோரை திருத்துவது மிகக் கடினம் என்ற நிலையிலும் அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டும் கப்பல் கேப்டனும் ப்ரூஸ் லீயும் நினைவில் நிற்கிறார்கள். அந்த கப்பல் கடும் புயலின் காரணமாக தான் போக வேண்டிய சிங்கப்பூர் செல்லாமல் புதிரானதொரு தீவில் தரை தட்டுகிறது. ஆங்கே ஒரு அழிக்கும் சக்தி அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறது. சென்சாய் என்ற கொடியவன் கொரிய தற்காப்புக் கலையை  பதித்துள்ள கல்வெட்டை தேடிக் கொண்டு இருக்கிறான். அது கிடைத்தால் மற்ற தற்காப்புக் கலை தெரிந்தவர்களை மண்ணைக் கவ்வ வைத்துவிடலாம். ஆனால் இவனைப் போன்றதோர் தீய எண்ணம் படைத்தவனிடம் அது கிடைத்தால் எத்தகைய தீங்கு ஏற்படும் என்று எண்ணி அதை கண்டு எடுக்கும் ப்ரூஸ் லீயின் நண்பர் அதனை அழித்து விடுகிறார். இதற்கிடையே பல இன்னல்களை சந்திக்க நேரிடும் ப்ரூஸ் லீயின் குழு சிங்கப்பூருக்கு முன்னரே அளித்திருந்த ரேடியோ தகவலால் கப்பல் படை வந்து மீட்டுப் போகிறது என்பதாக கதை நிறைகிறது! ப்ரூஸ் லீயின் ஆக்ஷன் இந்தக் கதையில் சிறிது குறைவே! ஆனால் கதை நிறைவானது! படித்து மகிழ சில பக்கங்கள் கீழே! 


















































அதில் ஒரு கொடுமை என்னன்னா என் கையில் உள்ள புத்தகத்தில் ஒரு குறும்புச் சிறுவன் ஆங்காங்கே ப்ரூஸ் லீக்கு மீசை வரைந்து அழகுபடுத்தி இருக்கிறான். நல்ல நிலையில் ஸ்கான் வைத்துள்ளவர்கள் பகிரலாமே? தடை என்ன? காமிக்ஸ் ரசிகர்களின் பக்கங்கள் காமிக்ஸால் நிறையாது என்ன பயன்??  அப்புறம் நான் அடிப்படையில் ஷிடோ - ரையு என்கிற தற்காப்புக் கலை பயின்றவன். நன் சக் அதி பயங்கரமானதொரு ஆயுதம். முறையாகப் பயின்றவர் தாக்கினால் எதிராளியின் மண்டையோடு சிதறி விடும். மாடஸ்தி ப்ளைசியின் காங்கோ போன்றதோர் ஆயுதம்.  


குல்லு மணாலி விசிட்டில்!!!!
வரட்டுமா ரசனை மிகு உள்ளங்களே!!! மீண்டும் விரைவில் சந்திப்போம்!

12 கருத்துகள்:

  1. ஜி கலக்கறீங்க.
    லீ மீசைல தனி அழகு தான்.

    பகிர ஒரு மனம் வேண்டும் உங்களிடம் இருக்கிறது.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி ஜி!லீ மீசை வைத்த சிறுவர் சிறப்பான சிந்தனை கொண்டவராகத்தான் இருக்க முடியும்! இருப்பதை கொண்டு இன்பம் காண்போம் நண்பா!

    பதிலளிநீக்கு
  3. nice thanks i like you
    ungaludai panikku ennathu nanri
    superb

    பதிலளிநீக்கு
  4. nice thanks i like you
    ungaludai panikku ennathu nanri
    superb

    பதிலளிநீக்கு
  5. vinoj kalakkungal!we are in the same boat!try to reveal more books and stories!

    பதிலளிநீக்கு
  6. http://oldcomicsworld.blogspot.in/2012/04/commando-comics.html please download all the books and share to friends!

    பதிலளிநீக்கு
  7. கலக்கல் போஸ்ட் ஜானி . .

    பதிலளிநீக்கு
  8. தமிழர்களின் தற்காப்பு கலைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள ....http://www.valaitamil.com/kids_Self-defense

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...