ஞாயிறு, 7 ஜூலை, 2013

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!


வணக்கம் நல்ல உள்ளங்களே! 

பொது அறிவுக்கு ஆங்காங்கே நல்ல வலைப் பூக்கள் இருக்கின்றன. நான் லயன் காமிக்ஸ் முன்னேற்றம் பெற விரும்பியே வலைப்பூ துவங்கினேன். இப்போது மிக நல்ல நிலையில் புத்தகங்களை வெளியிடத் துவங்கி வெற்றிப் பாதையில் பயணம் மேற்கொண்டிருக்கும் லயனின் பயணம் சீரானதைக் கொண்டாடிக் கொண்டு அதே சமயம் வலைப் பூ மூலமாக வேறு என்ன செய்யலாம் என சிந்தனைக் குதிரையை தட்டி விடும் வேளையில் கொஞ்சம் பொது அறிவு கேள்விகளை பதில்களுடன் தொகுக்கலாம் என்கிற எண்ணத்தில்தான் இந்த சில கேள்வி பதில்களை கொடுத்துள்ளேன். எல்லாம் நம்ம தினசரியோ வாழ்க்கை பயணத்தில் கடந்து போகும் கேள்விகள்தான். சும்மா ரெப்ரெஷ் செய்து கொள்ள இந்த பதிவு உதவினால் மகிழ்வேன். வாழ்க வளமுடன்!!

அப்புறம் லயன் காமிக்ஸ் இந்த மாத வெளியீடு முற்றிலும் புத்தம் புது ஹீரோக்களை தாங்கி ஆல் மோஸ்ட் நியூ ஸ்பெஷல் என்கிற பெயரில் ரூபாய் இருநூறு விலையில் வெளியாக இருக்கிறது! அதன் சில அட்டை படங்கள் மற்றும் பக்கங்கள் கீழே















வ எண்
கேள்வி
பதில்
1
மகாபாரத யுத்தம் நடந்த குருஷேத்ரம் எங்கே உள்ளது?
அரியானா மாநிலத்தில்
2
டால்டன் நோய் என்பது என்ன?
இரவில் நிறம் தெரியாமை
3
முதல் தமிழ் சங்கத்தின் தலைவர் யார்?
குறுமுனி அகத்தியர்
4
இந்தியாவில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எத்தனை பேர் வசிக்கிறார்கள் ?
225 நபர்கள்
5
சுற்றுசூழல் பாதுகாப்பு நாளாகக் கொண்டாடுவது?
ஜூன் ஐந்து பிரதி வருடம்
6
நீரின் உறை நிலை என்ன?
ஜீரோ டிகிரி செல்சியஸ்
7
கார்புரேட்டரைக் கண்டுபிடித்தவர் யார்?
டெய்ம்லர் , ஜெர்மனி
8
நாசிசம் யாரால் தோற்றுவிக்கப் பட்டது?
ஹிட்லர்
9
அகில உலக தொலை செய்தி போக்குவரத்து கழகத்தின் பெயர் என்ன?
நாசா
10
கலிங்கப் போருக்குப் பின் அசோகன் எந்த மதத்தை தழுவினார் ?
புத்த மதம்
11
வீர மா முனிவர் யாரிடம் தமிழ் கற்றார்?
சுப்ர தீபக் கவிராயர்
12
பாண்டியன் பரிசு என்ற நூலை எழுதியவர் யார்?
பாரதி தாசன்
13
அகத்திக் கீரையில் உள்ள சத்துக்கள் யாவை?
புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ 
14
விஷங்களை முறிக்கும் தன்மை எந்தக் கீரையில் உள்ளது?
சிறுகீரை
15
பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
ராஜாராம் மோகன் ராய்
16
இந்தியாவின் முதல் ராகேட் தயாரிக்கும் முயற்சி எப்போது எங்கு ஆரம்பமானது?
பாபா அணு ஆராய்ச்சி சாலையில், 1967
17
சாணக்கியரின் வேறு பெயர்கள் யாவை?
விஷ்ணு குப்தன், கௌடில்யர்
18
மும்முடிச்சோழன் யார்?
ராஜராஜ சோழன்
19
தினமணி நாளிதழின் புகழ் பெற்ற ஆசிரியராக விளங்கியவர் யார்?
ஏ.என்.சிவராமன்
20
வெற்றிவேற்கை பாடியவர் யார்?
அதி வீரராம பாண்டியன்
21
அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியர் யார்? எதற்காக?
லியாண்டர் பயஸ் , டென்னிஸ்
22
ஆழம் குறைந்த கடல் எந்த நிறத்தில் இருக்கும்?
இளம் பச்சை அல்லது இளம் பழுப்பு
23
வேதியியல் உரங்கள் நம் நாட்டிற்கு எப்போது அறிமுகப்படுத்தப்பட்டன?
1952
24
முத்தமிழ் காவலர் என்று சொல்லப் படுபவர்?
கி.ஆ.பெ.விஸ்வநாதன்
25
“எங்கே செல்வம் அதிகரிக்கிறதோ அங்கே மக்கள் அழிகிறார்கள் “ சொன்னவர் யார்?
கோல்டு ஸ்மித்
26
சுற்றுசூழல் மிகவும் பாதிக்கப்படுவது எதனால் ?
பெருகி வரும் மக்கள் தொகையால்
27
கப்பல் செல்லும் திசையை காண உதவும் கருவி?
மரினர் காம்பஸ்
28
முதல் தரெய்ன் போர் எப்போது நடந்தது?
1191 AD
29
விஜய் அமிர்தராஜ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
டென்னிஸ்
30
தாஜ்மஹாலுக்கு எதனால் ஆபத்து ஏற்பட்டுள்ளது?
மதுராவில் உள்ள என்னை சுத்திகரிப்பு ஆலையால்
31
எந்த அணுவின் ஆற்றல் மிகவும் வலிமையானது?
ப்ளூட்டோனியம்
32
விக்கிரம சகாப்தம் எப்போது?
கி.மு.58
33
வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டை வந்த வருடம்
கி.பி.1498
34
ஒழுங்கு முறை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
கி.பி.1773
35
முதல் பானிப்பட் போர் எப்போது நடந்தது?
கி.பி.1526
36
பூமி சூரியனை சுற்றி வரும் வேகம்?
மணிக்கு 66,000 மைல் வேகம்
37
வைரஸ்களை எந்த அளவு கொண்டு குறிப்பிடுகிறார்கள்?
நானோ மீட்டர்
38
மனித உடலில் உள்ள தசைகளின் எண்ணிக்கை என்ன?
439
39
பாஸ்டர் வெறிநாய்கடி சிகிச்சை  மையம் தமிழ்நாட்டில்  எங்குள்ளது?
குன்னூர், நீலகிரி மாவட்டம் 
40
மிகப் பழமையான சகாப்தம் எது?
புத்த சகாப்தம்
41
தமிழகத்தில் அணுமின் நிலையம் எங்கு அமைந்துள்ளது ?
கல்பாக்கம்
42
இந்தியாவில் போர் வீரர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது எது?
பரம் வீர் சக்ரா
43
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
பிரிவு 370
44
தொல்பொருள் பாதுகாப்பு சட்டம் இயற்றியவர் யார்?
கர்சன் பிரபு
45
இந்தியாவில் பொற்காலம் யார் காலம்?
சந்திர குப்த விக்கிரமாதித்தன் காலம்
46
டைகர் ப்ராஜக்ட் என்பது?
புலிகளை பாதுகாக்கும் திட்டம்
47
இந்தியாவில் எந்த இடத்தில் சிங்கங்கள் உள்ளன?
குஜராத் மாவட்டம் கிர் காடுகள்
48
காசிரங்கா வனவிலங்கு சரணாலய சிறப்பு என்ன?
அசாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்கு பூங்காவில்தான் காண்டாமிருகங்கள்  உள்ளது.
49
மின்சார அயர்ன் பாக்ஸில் உள்ள வெப்ப இழை எதனால் ஆனது?
நிக்ரோம்
50
இந்தியா மீது அலெக்ஸ்சாண்டர் படையெடுப்பு நடைபெற்ற ஆண்டு?
கி.மு.326
51
கோவா இந்தியாவின் எத்தனையாவது மாநிலம்?
25 (1987)
52
மேகாலயா மாநிலத்தின் பெயர் காரணம்?
மேகங்கள் சூழ்ந்த மாநிலம்
53
விளக்கில் உள்ள எண்ணெய் திரியில் மேலே ஏற காரணம்
நுண் புழை ஏற்றம்
54
நாகார்ச்சுனா அணை எந்த நதி மீது கட்டப்பட்டுள்ளது?
கிருஷ்ணா நதி
55
முகமது கஜினி சூறையாடிய ஆலயம் எது?
சோமநாதர் ஆலயம்
56
இந்தியாவில் அணு சக்தி எந்த உலோகத்தில் இருந்து எடுக்கப் படுகிறது?
யுரேனியம்
57
குளிர் காலத்தில் தண்ணீர் குழாய்கள் வெடிக்கக் காரணம்?
நீர் உறைந்து விரிவடைவதால்.
58
காந்தி அடிகள் பிறந்த இடம்
போர்பந்தர்
59
கங்கை நதியில் அமைந்துள்ள நகரங்கள்
பாட்னா, அலகாபாத், ஹரித்வார், வாரணாசி
60
முதல் பானிபட் போர் யாருக்கிடையில் நடைபெற்றது?
பாபருக்கும் இப்ராஹீம் லோடிக்கும் இடையில் (1526)
61
O3 ஓசோன் வாயுவின் சிறப்பு என்ன?
புற ஊதாக் கதிர்களை ஈர்த்துக் கொள்ளும்
62
சோடா பானம் தயாரிக்க ----
கார்பன் டை ஆக்சைடு
63
National Defence Acadamy எங்குள்ளது ?
கடக் வாஸ்லா
64
நைட்ரஸ் ஆக்சைடின் வேறு பெயர் என்ன?
சிரிப்பு வாயு
65
மீத்தேன் வாயுவின் மறுபெயர் என்ன?
சதுப்பு நில வாயு, கொள்ளி வாயு
66
சேலம் மாவட்டம் கஞ்ச மலையில் எந்த தாது கிடைக்கிறது?
இரும்பு தாது
67
கர்நாடகாவில் இரும்புத் தாது எங்கு கிடைக்கிறது?
குதிரே முக்
68
வெள்ளை பாஸ்பரஸ் எவ்வாறு பாதுகாக்கப் படுகிறது?
நீருக்கடியில் வைத்து
69
நீரின் கடினத்தன்மைக்கு காரணம் என்ன?
கால்சியம், மெக்னீசியம் இவற்றின் சல்பேட் உப்புக்கள்
70
மிகப் பெரிய தாழ்வாரம் உள்ள கோவில்
இராமேஸ்வரம் கோவில்
71
ரேடியத்தை கண்டறிந்தவர் யார்?
மேடம் மேரி க்யூரி
72
பனிக்கட்டியின் உருகு நிலை
௦ டிகிரி செல்சியஸ், 32 டிகிரி பாரன்ஹீட்
73
தமிழகத்தின் நெற்களஞ்சியம்
தஞ்சை
74
அமெரிக்க ராணுவ தலைமையகம்
பென்டகன்
75
முதல் இந்திய அணு வாரிய தலைவர்
டாக்.ஹோமிபாபா
76
நில அதிர்ச்சியை அளவிடும் கருவி
சீஸ்மோ கிராப்
77
எளிதில் ஆவியாகாத திரவம்?
பாதரசம்
78
எளிதில் உருகும் உலோகம்
காரீயம்
79
நியூட்ரானை கண்டறிந்தவர்
சாட்விக்
80
எலெக்ட்ரான்
எதிர்மின் தன்மை கொண்டது
81
ந்யூட்ரான்
சம நிலை கொண்டது
82
இந்தியாவின் முதல் செயற்கை கோள் ஆர்யபட்டா எப்போது ஏவப்பட்டது?
19.04.1975
83
அணுவின் உட்கருவில் உள்ளது?
புரோட்டான் மற்றும் ந்யூட்ரான்
84
அணுவின் வெளி வளைவில் உள்ளது?
எலெக்ட்ரான்
85
நந்த வம்சத்தின் கடைசி மன்னன்
தனநந்தன்
86
குளுக்கோஸ் கல்லீரலில் எவ்வாறு சேமிக்கப் படுகிறது?
கிளைகோஜென்
87
தாவரத்தில் சவ்வூடு பரவல் எதன்மூலம் நடைபெறும்?
வேர்தூவிகள்
88
அடிப்படை நிறங்கள் என்பன யாவை?
நீலம், சிவப்பு, பச்சை
89
தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்கள் யாவை?
சென்னை, தூத்துக்குடி
90
சிறிய துறைமுகங்கள் யாவை?
கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம்,வலி நோக்கம், குளச்சல், கன்னியாகுமரி, பாம்பன், கீழக்கரை
91
இரவு நேரம் மலரும் பூக்களின் சிறப்பு என்ன?
வாசனையாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.
92
மேற்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்கள்
கண்டலா, பம்பாய், கோவா, மங்களூர், கொச்சின்
93
கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுகங்கள்
தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம்,பாரதீப், கல்கத்தா
94
செயற்கை மழை உருவாக்கக் கூடிய வேதிப்பொருள் எது?
சில்வர் அயோடைடு
95
மிகவும் லேசான வாயு எது?
ஹைட்ரஜன்
96
பாரபின் எண்ணெய் எதற்கு பயன்படுகிறது?
மலமிளக்கியாக
97
காளிதாசரின் உலகப்புகழ் பெற்ற நாடகம்?
சாகுந்தலம்
98
மாறுதிசை மின்னோட்டத்தில் மின்னோட்டத்தின் அளவை கட்டுப்படுத்த உதவும் கருவி?
சோக்
99
தாவரங்களில் ஸ்டார்ச் சோதனை செய்ய உதவும் கரைசல் எது?
அயோடின் கரைசல்
100
மின்னாற்றலை சேமிக்கும் கருவி எது?
மின்னேற்பி
101
காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணை
மேட்டூர் அணை
102
குடி நீரில் கலக்கப்படும் கிருமி நாசினியின் பெயர்
குளோரின்
103
ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட முதல் கரிமப் பொருள்
யூரியா
104
மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி
கல்லீரல்
105
கணையத்தில் சுரக்கும் வேதிப்பொருள்
இன்சுலின்
106
இந்தியாவின் தலை சிறந்த தாவரவியல் விஞ்ஞானி யார்?
ஜெகதீஸ் சந்திரபோஸ்
107
சூரியன் உதயமாகும் நாடு
ஜப்பான்
108
நள்ளிரவு கதிரொளி நாடு
நார்வே
109
மனித இதயம் ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறை துடிக்கும்?
70-72 முறைகள்
110
சூரியனிடம் இருந்து பூமிக்கு ஒளி வரும் நேரம்
8 நிமிடம்  3 வினாடி



 இப்போதைக்கு அவ்வளவுதான் நண்பர்களே மீண்டும் விரைவில் சிந்திப்போம்!

13 கருத்துகள்:

  1. அண்ணா! கிரேக்கர் அறிவியலையும் தத்துவத்தையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்த்தனர்... அந்த வேலையைதான் நீங்களும் செய்துகொண்டு இருக்கிறீங்கள்!!! ஒரு பக்கம் இலக்கியம் இன்னொரு பக்கம் பொது அறிவு!!! என்ன ஒரு அதிசயம்!!! ஒரு request!!! நீங்க இப்படி cow boy மாதிரி சித்திர கதைகள் (comics) எழுதாம வேற மாதிரி எழுதலாமே... அதாவது justice league, batman etc., போன்றவைகள்... நம்முடைய புராண கதைகள், சமூகத்தில என்ன நடக்கதுன்னு பற்றி, sci-fi (science fiction) கதைகள் வரையலாமே??? சித்திரங்கள் தொடரட்டும்!!!

    பதிலளிநீக்கு
  2. Boss! நான் நாகர்கோவில் காரன்!!! இங்க super hero comics கிடைக்கவே மாட்டேங்குது!!! கிடைக்குது... ஆனா, second hand... 13 வருடத்துக்கு முன்னாடி உள்ளதுதான் கிடைக்குது... உங்க lion comics கூட கிடைக்க மாட்டேங்குது...
    #என்ன பண்ண...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றிகள் நண்பரே! நம்ம லயன் காமிக்ஸ் நேரடி சந்தா பெற்று புத்தகண்களை அனுப்பி வருகின்றனர். நீங்கள் லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்! லயன் வலைப்பூ முகவரி lion-muthucomics.blogspot.com பழைய காமிக்ஸ்கள் நியாயமான விலையில் லயன் அலுவலகத்தில் கிடைக்கிறது. அதை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். மற்றவை பின்னரே!

    பதிலளிநீக்கு
  5. 1.https://www.facebook.com/groups/lionmuthucomics/

    2.https://www.facebook.com/groups/komicskk/
    3.https://www.facebook.com/groups/TamilComicsDreamzzz/நண்பர் பட்டாளம் இங்குதான் கூடி பழைய புத்தகங்களை குறித்து சிலாகித்து கொண்டு படங்களை பரிமாறிக் கொண்டும் விருந்து படைத்து வருகின்றனர்!
    https://www.facebook.com/groups/TNPSCTAMIL/ பொது அறிவுக்கு இந்த பக்கம் மிக உதவிகரமாக இருக்கும்!வாருங்கள் வாழ்க்கையை வண்ணங்களாலும் எண்ணங்களாலும் நிரப்பி மகிழலாம் !

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. Thanks for your kind help Police department men those who will attend the SI exam. Best of luck to you. Saravana kumar, sellur. (sellursaro@gmail.com)

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...