புதன், 2 ஜூலை, 2014

மங்கூஸ் + மரணம் = XIII


அன்பு மிகு நண்பர்களே அன்பர்களே வணக்கம்!

மறக்கவே முடியாததொரு பயணம் மங்க்கூஸின் வரலாறு! அட்டகாசமான சிந்தனையாளரின் சிந்தையில் உதித்திட்டதொரு கதை. பாராட்ட வார்த்தைகளைத் தேட வேண்டும். சோகம் + சாகசம் = மங்கூஸ். அன்பென இருந்த உறவான தச்சரைக் காக்க வேண்டி மங்கூஸ் செய்யும் தவம்தான் விரியனின் விரோதி. தன் வாழ்வைக் காத்தவரை இறுதி வரைக் காக்கும் நாயகன் மங்கூசை இந்தக் கதையில் நீங்கள் தரிசிக்கலாம். ஒரு தொழில் முறை நேர்த்தியாளனின் வாழ்வு ஒரு தொழில் முறைக் கொலைகாரனாய் உரு மாற்றம் பெறுகையில் நிகழும் சம்பவங்களே விரியனின் விரோதி. தன்னுயிரை ஈந்தும் தன் உறவின் உயிர் காக்க நாயகன் எடுக்கும் அவதாரமே விரியனின் விரோதி. தனக்கென தரணியிலொரு பாதையமைத்து தன் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவாக்கும் கலைஞன் நம் நாயகன். எத்தனைக்கெத்தனை எதிர்ப்புகள் வலுத்தாலும் கலங்காது களத்தில் இறங்குபவனே நம் நாயகன். கொண்ட கொள்கையில் கொண்டிருக்கும் அசரா உறுதியும் விண்ணைத் தொடும் தன்னம்பிக்கையும் உடையவனே நாயகன் மங்கூஸ்.
தன் வெற்றிப்பாதையில் சறுக்கலையே சந்திக்காதவன் நாயகன் மங்கூஸ். பதிமூன்றாம் எண்ணுடையவனை தீர்க்க வேண்டி வரும்போது மட்டுமே அந்த எண்ணின் துரதிருஷ்டம் இவனையும் பற்றிக் கொள்கிறது முடிவில் கொல்கிறது. அருமையான இந்த கதையினை சன் ஷைன் லைப்ரரியின் மூன்றாவது வெளியீடாகக் கொண்டு வந்துள்ளனர் நம்ம லயன் காமிக்ஸ் குடும்பத்தார் ரூபாய் அறுபதில் அட்டகாசம் செய்யும் நாயகன் மங்கூஸ்............தரிசிக்க மறவாதீர்கள்!!!  
நண்பர் கனவுகளின் காதலனின் முந்தைய பதிவு :
http://kanuvukalinkathalan.blogspot.in/2009/02/blog-post_12.html
நினைவுபடுத்திய சாக்ரடீஸ்கு நன்றிகள்!

3 கருத்துகள்:

  1. ஒரு நெகடிவ் ஹீரோவுக்கு பாசிடிவான பதிவு. அருமை.

    மூலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றும் போது கதையில் ஏதேனும் கத்தரிக்கப் பட்டுள்ளதா என்ற விவரம் ஏதேனும் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  2. வெல்கம் பாலா ஆனா தெரியலை!

    பதிலளிநீக்கு
  3. நண்பர் கனவுகளின் காதலர் விளக்கமா சொல்லி இருக்கார் பாருங்கள்!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...